சென்னையில் அம்மோனியம் நைட்ரேட்: அதிகாரிகள் ஆய்வு ; பரபரப்பு

Updated : ஆக 06, 2020 | Added : ஆக 06, 2020 | கருத்துகள் (10) | |
Advertisement
சென்னை: சென்னையில் கடந்த 6 ஆண்டுகளாக வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் 740 மெட்ரிக் டன் அம்மோனியம் நைட்ரேட் குறித்தும், பாதுகாப்பு குறித்தும் தீயணைப்புத்துறை டிஜிபி சைலேந்திர பாபு ஆய்வு நடத்தினார்.லெபனானின் தலைநகர், பெய்ரூட்டின் துறைமுக பகுதியில் நேற்று முன்தினம் மாலை, பயங்கர சத்தத்துடன் வெடி பொருட்கள் வெடித்தன. இதையடுத்து, பெய்ரூட் நகரமே புகை மண்டலமாக மாறியது. பல
அம்மோனியம் நைட்ரேட், சென்னை,  துறைமுகம், அதிகாரிகள், ஆய்வு,

சென்னை: சென்னையில் கடந்த 6 ஆண்டுகளாக வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் 740 மெட்ரிக் டன் அம்மோனியம் நைட்ரேட் குறித்தும், பாதுகாப்பு குறித்தும் தீயணைப்புத்துறை டிஜிபி சைலேந்திர பாபு ஆய்வு நடத்தினார்.

லெபனானின் தலைநகர், பெய்ரூட்டின் துறைமுக பகுதியில் நேற்று முன்தினம் மாலை, பயங்கர சத்தத்துடன் வெடி பொருட்கள் வெடித்தன. இதையடுத்து, பெய்ரூட் நகரமே புகை மண்டலமாக மாறியது. பல கட்டடங்கள் இடிந்து விழுந்தன. சில இடங்களில் தீப்பிடித்தன. என்ன நடந்தது என, யாருக்குமே புரியவில்லை.இந்த விபத்தில் இதுவரை, 100 பேர் இறந்துவிட்டதாகவும், 4,000க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும், செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது.


latest tamil news
இந்நிலையில், கடந்த 2015ம் ஆண்டு நிறுவனம் ஒன்று, உரிய ஆவணங்கள் இல்லாமல் இறக்குமதி செய்த 740 டன் மெட்ரிக் டன் அம்மோனியம் நைட்ரேட் வெடிபொருள், வட சென்னையில் உள்ள துறைமுக கிடங்கில் பாதுகாக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக சென்னையில் உள்ள சுங்கத்துறை அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த 6 ஆண்டுகளாக 740 மெட்ரிக் டன் அம்மோனியம் நைட்ரேட் வெடிபொருள், கிடங்கில் பாதுகாப்பாக உள்ளது. மக்கள் அச்சமடைய தேவையில்லை. கிடங்கை சுற்றி, வீடுகள் எதுவும் இல்லை. அம்மோனியம் நைட்ரேட்டை, நிபுணர்களால் ஆய்வு செய்யப்பட்டு பாதுகாப்பாக உள்ளது. கொரோனா காலம் என்பதால், நீதிமன்ற உத்தரவின் பேரில், மின்னணு முறையில், 740 மெட்ரிக் டன் அம்மோனியம் நைட்ரேட் ஏலம் விடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம் இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து, தீயணைப்புத்துறை டிஜிபி சைலேந்திர பாபு தலைமையிலான அதிகாரிகள், அம்மோனியம் நைட்ரேட் வைக்கப்பட்டுள்ள கிடங்கிற்கு, சென்று ஆய்வு செய்தனர். அம்மோனியம் நைட்ரேட் குறித்தும், அதன் பாதுகாப்பு குறித்தும் ஆய்வு செய்தனர்.

Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
s.rajagopalan - chennai ,இந்தியா
07-ஆக-202023:08:13 IST Report Abuse
s.rajagopalan ராமதாஸ் ஒரு பீதியை நல்ல கெளப்பியிருக்காறு இதற்கு யார் பொறுப்பு ? பதில் வராது
Rate this:
Cancel
Natarajan Ramasamy - Chennai,இந்தியா
06-ஆக-202021:16:40 IST Report Abuse
Natarajan Ramasamy தினமலர் 1964 நாளேடே தேடினால் பீச் ஸ்டேஷன் பின்புறம் ரசாயன கலவை சேமிப்பு வெடித்ததால் TIAM ஹவுஸ் front facia கண்ணாடிகள் விழுந்த செய்தி கிடைக்கும். வெடி சத்தம் 2 KM கேட்டது.இதை போர்ட் டிரஸ்ட் மறந்தது ஏன் ? எந்த கம்பெனி ஆர்டர் செய்து இது வந்தது என்பதை ஏன் இருட்டடிப்பு செய்க்கிறீர்கள். துறை முகத்தில் 6 வருடம் அஷாகு பார்த்தது யார்? இது போல் வேறு பல ரசாயனங்கள், அமிலங்கள், அம்மோனியா போன்றவை ஒரு நாள் கூட சேமித்து வைப்பது பேராபத்தை விளைவிக்கும். இந்தியாவில் உள்ள எல்லா துறைமுகங்களுக்கு ,ஏர்போர்ட் கிடங்கு களும் ரயில்வே கூட்ஸ் சிட்டிங் களும் உடனே சிவில் டேபின்ஸ் ஆராய்ச்சி செய்து மக்களை காப்பாற்றவேண்டும். இந்த பர்ஸளுக்கு demurrage கிடையாதா? இது போல் எதனை பர்ஸல்கள் டெமுர்ராஜ் இல்லாமல் போர்டில் உள்ளன? அம்மோனியா,அமிலங்கள் இரவில் மட்டுமே highway இல் செல்ல அனுமதிக்க வேண்டும்.
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
06-ஆக-202020:54:04 IST Report Abuse
Bhaskaran நம் அரசு அதிகாரிகளின் பொறுப்பு குறித்து நாடறியும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X