பொது செய்தி

இந்தியா

பாசுமதி அரிசி யாருக்கு சொந்தம்: புவிசார் குறியீடு பெற பஞ்சாப் - ம.பி., அரசுகள் மோதல்

Updated : ஆக 06, 2020 | Added : ஆக 06, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement

போபால்: பாசுமதி அரிசிக்கு புவிசார் குறியீடு பெறுவது தொடர்பாக பஞ்சாப் மற்றும் ம.பி., மாநில அரசுகள் முட்டி மோதி வருகின்றன.



latest tamil news




மத்திய பிரதேசத்தில் 13 மாவட்டங்களில் பயிரிடப்படும் பாசுமதி அரிசிக்கு புவிசார் குறியீடு கேட்டு அரசு விண்ணப்பித்தது. இதற்கு பஞ்சாப் மாநில முதல்வர் அம்ரிந்தர் சிங் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து ம.பி., முதல்வர் சிவ்ராஜ் சிங் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது:

புவிசார் குறியீடு என்பது மத்திய பிரதேச விவசாயிகளுக்கு பெருமை சேர்க்கும் விஷயம் மற்றும் பல ஆண்டுகளாக அவர்களின் கடின உழைப்பை அங்கீகரிப்பதாகும். இதை பஞ்சாப் -மத்திய பிரதேச இடையேயான சண்டையாக மாற்றக்கூடாது. புவிசார் குறியீடு ஒதுக்கீடு சர்வதேச சந்தைகளில் பாசுமதி விலைகளுக்கு ஸ்திரத்தன்மையை வழங்கும் மற்றும் ஏற்றுமதியை அதிகரிக்கும்.
பாகிஸ்தான் உடனான வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தில் உள்ள வழக்கிற்கும், மத்தியப் பிரதேசம் உரிமை கோருவதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
மத்திய அரசு, ம.பி.,க்கு 1999ம் ஆண்டு முதல் பாசுமதி அரிசிக்கான விதைகளை வழங்கி வருகிறது. பஞ்சாப் மற்றும் ஹரியானாவை சேர்ந்த ஏற்றுமதியாளர்கள் ம.பி.,யில் இருந்து பாசுமதி அரிசியை வாங்குகிறார்கள். ம.பி.,யில் கடந்த 1908ம் ஆண்டு முதல் 13 மாவட்டங்களில் பாசுமதி அரிசி உற்பத்தி நடைபெறுவதற்கு எழுத்துப்பூர்வ ஆதாரங்கள் இருக்கிறது. 1944ம் ஆண்டே விதைகளை விவசாயிகளுக்கு அளித்ததற்கு ஆதாரங்கள் அன்றைய சிந்தியா மாநில பதிவுகளில் இருக்கின்றது.இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.


latest tamil news



இந்நிலையில் நேற்று (ஆக., 5) பஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர் சிங், பிரதமர் அலுவலகத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது:-

இந்தியா ஆண்டுக்கு ரூ.33 ஆயிரம் கோடி மதிப்பிலான பாசுமதி அரிசியை ஏற்றுமதி செய்து வருகிறது. இந்திய பாசுமதி அரிசியை பதிவு செய்வதை நீர்த்து போக செய்தால், அது பாகிஸ்தானுக்கு நன்மையளிப்பதாக அமைந்து விடும். 2017 - 18ம் ஆண்டில் மத்திய பிரதேச அரசு, பாசுமதி அரிசிக்கு புவிசார் குறியீடு கேட்டு விண்ணப்பித்தது. புவிசார் குறியீட்டு பதிவாளர், புவிசார் சரக்கு பதிவு மற்றும் பாதுகாப்பு சட்டம் 1999ன் கீழ், இது குறித்து விசாரணை நடத்திய பின், ம.பி., அரசின் கோரிக்கையை நிராகரித்துள்ளார். இது தொடர்பாக மத்திய அரசின் கூற்றை இந்திய அரசின் அறிவுசார் சொத்து மேல்முறையீட்டு வாரியமும் நிராகரித்தது.

இதை எதிர்த்து ம.பி., அரசு, மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. ஆனால் எந்த நிவாரணமும் கிடைக்கவில்லை.
மேலும், மத்திய பிரதேசம் உரிமை கோரும் பாசுமதி அரிசிக்கு புவிசார் குறியீடு அளிப்பது தொடர்பாக, மத்திய அரசு ஒரு சிறந்த விவசாய விஞ்ஞானிகள் குழுவையும் அமைத்தது. முழுமையாக விவாதத்திற்கு பின், ம.பி.,யின் கூற்றை விஞ்ஞானிகள் குழு நிராகரித்துள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


latest tamil news



இந்தியாவில், புவிசார் சரக்கு பதிவு மற்றும் பாதுகாப்பு சட்டம் 2003, செப்., 15ல் அமலுக்கு வந்தது. குறிப்பிட்ட ஓரிடத்தில் பாரம்பரியமாக உற்பத்தி செய்யப்படும் இயற்கை, வேளாண் மற்றும் கைவினை பொருட்கள் போன்றவற்றிற்கு புவிசார் குறியீடு வழங்கப்படுகிறது. புவிசார் குறியீடு அங்கீகாரம் பெற்ற பொருட்களுக்கு, உலக வர்த்தக அமைப்பின், வர்த்தகம் சார்ந்த அறிவு சார் சொத்துரிமை ஒப்பந்தத்தின் கீழ், வர்த்தகப் பாதுகாப்பு வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வெகுளி - Maatuthaavani,இந்தியா
06-ஆக-202020:20:13 IST Report Abuse
வெகுளி புழுத்த ரேஷன் அரிசிக்கு புவிசார் குறியீடு பெற கழக அரசுகளுக்கு எந்த போட்டியும் இருக்காது....
Rate this:
Cancel
PANDA PANDI - Aththipatti,இந்தியா
06-ஆக-202020:13:12 IST Report Abuse
PANDA PANDI ம பி தண்ணி திண்டாட்டம். இதில் வேற சொந்தம் கொண்டாட்டம் தேவையா. ஓஓ அங்க கான்கரசு இங்க பசக.. நல்ல வருவீர் மக்களே..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X