பொது செய்தி

இந்தியா

நாளை (ஆக.7) தேசிய கல்வி கொள்கை மாநாடு : பிரதமர் மோடி உரை

Updated : ஆக 06, 2020 | Added : ஆக 06, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
NEP, PM Modi, Inaugural Address, education, Conclave, Education Policy,

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: புதிய தேசிய கொள்கையின் உயர்கல்வி சீர்திருத்தம் குறித்த மாநாடு நாளை (ஆக.7) நடக்கிறது. இதனை பிரதமர் மோடி துவக்கி வைத்து உரையாற்றுகிறார்.

2014 லோக்சபா தேர்தல் அறிக்கையில் புதிய தேசிய கொள்கை அறிவிக்கப்படும்' என பா.ஜ., தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது. இதையடுத்து, 'இஸ்ரோ' எனப்படும், இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் முன்னாள் தலைவரான, கஸ்துாரிரங்கன் தலைமையில், ஒன்பது பேர் இடம் பெற்ற மற்றொரு குழு, 2017ல் அமைக்கப்ப்டது.


latest tamil news




இந்தக் குழு, பல்வேறு தரப்பினருடன் ஆலோசனைகளை நடத்தி, 484 பக்கங்கள் உடைய, வரைவு தேசிய கல்வி கொள்கை குறித்த அறிக்கையை, மத்திய அரசிடம் கடந்த ஜூலை 29-ல் தாக்கல் செய்தது. அமைச்சகத்தின் இணையதளத்திலும் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த அறிக்கை மீதான கருத்துக்களை, வரும், 30ம் தேதி வரை தெரிவிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் புதிய தேசிய கல்வி கொள்கையின் கீழ் உயர்கல்வி சீர்திருத்தம் குறித்த மாநாடு நாடு நாளை (ஆக.7) நடக்கிறது. மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகமும், யு.ஜி.சி. எனப்படும் பல்கலை. மானியக்குழு இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்த மாநாட்டை பிரதமர் மோடி துவக்கி வைத்து உரையாற்றுகிறார்.


Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
samvijayv - Chennai,இந்தியா
06-ஆக-202019:26:32 IST Report Abuse
samvijayv வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும் அதை வாங்கித்தான் பெருமை யெல்லாம் மக்களையே.., சாரும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X