நாட்டில் ஜனநாயகம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது: சிதம்பரம்

Updated : ஆக 06, 2020 | Added : ஆக 06, 2020 | கருத்துகள் (66)
Share
Advertisement
புதுடில்லி: கடந்த ஓர் ஆண்டாக 75 லட்சம் காஷ்மீர் மக்கள் சிறையில் இருப்பது போன்று உணர்கிறார்கள்; இந்தியாவில் நாளுக்கு நாள் ஜனநாயம் குறைந்து கொண்டே செல்கிறது என காங்., கட்சியை சேர்ந்த முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து சிதம்பரம் டுவிட்டரில் பதிவிட்டதாவது: அனைத்து அரசியல் கட்சிகளும், சரியாக சிந்திக்கும் குடிமக்கள் அனைவரும், கடந்த ஓராண்டாக
P Chidambaram, congress, 370 act, Chidambaram, சிதம்பரம், காங்கிரஸ்

புதுடில்லி: கடந்த ஓர் ஆண்டாக 75 லட்சம் காஷ்மீர் மக்கள் சிறையில் இருப்பது போன்று உணர்கிறார்கள்; இந்தியாவில் நாளுக்கு நாள் ஜனநாயம் குறைந்து கொண்டே செல்கிறது என காங்., கட்சியை சேர்ந்த முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சிதம்பரம் டுவிட்டரில் பதிவிட்டதாவது: அனைத்து அரசியல் கட்சிகளும், சரியாக சிந்திக்கும் குடிமக்கள் அனைவரும், கடந்த ஓராண்டாக சிறையில் இருப்பதை போல வாழ்ந்து வரும் 75 லட்சம் காஷ்மீர் மக்களை நினைத்துப்பாருங்கள். காஷ்மீரில் அனைத்து தலைவர்களும் வீட்டு சிறையில் இருக்கிறார்கள். இதுகுறித்து நீங்கள் கேள்வி எழுப்பினால், யாரும் வீட்டுக்காவலில் இல்லை என கோர்ட்டில் கூறுவார்கள். சட்ட அங்கீகாரம் இல்லாத வீட்டுக்காவல், அதிகார துஷ்பிரயோகம்.


latest tamil news



அனைத்து கட்சி ஆலோசனை நடத்த திட்டமிட்டிருந்த பரூக் அப்துல்லாவுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இது தான் ஜனநாயகமா? மெகபூபா முப்தியை விடுவிக்கவும், வீட்டுக்காவலில் இருப்பவர்களை விடுவிக்கவும், நாம் ஒன்றாக குரல் எழுப்ப வேண்டும். இந்தியாவில், மனித உரிமைகள் மறுக்கப்படுவதை உலகம் கவனித்துக்கொண்டிருக்கிறது. இந்தியா பெருமையாக கூறிக்கொள்ளும் ஜனநாயக நாடு, சுதந்திர நாடு என்பது நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (66)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SAPERE AUDE -  ( Posted via: Dinamalar Android App )
07-ஆக-202009:25:27 IST Report Abuse
SAPERE AUDE இந்த தலைவர் ஜனநாயகம் பற்றி என்ன பேசுகிறார் என்று தெரியவில்லை. அங்கு அண்டைய நாட்டு பணத்தை வாங்கிக்கொண்டு கல் எறிந்து கொண்டிருந்த சிறுவர்கள் பள்ளி சென்று வருகிறார்கள். மக்களுக்கு அமைதிகாக்கப்படுகிறது. இதுவரை ஜனநாயகத்தின் பெயரில் சில குடும்பங்களே பரம்பரை ஆட்சி செய்து கொண்டிருந்தன. இதைத்தான் இப்போது மத்திய அரசு தைரியமாக முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. இவரது கட்சியில் ஜனநாயகம் உள்ளதா என்று முதலில் பார்த்து விட்டு, பேசினால் நல்லது.
Rate this:
Cancel
Balasubramanian Ramanathan - vadakupatti,இந்தியா
07-ஆக-202009:20:15 IST Report Abuse
Balasubramanian Ramanathan ஜனநாயக காதலனே, இந்தியாவுக்கு எதிராக 2008ல் நேரு குடும்பம் சீனாவோடு ஒப்பந்தம் போடப்பட்டதே. அதன் விவரம் என்ன.
Rate this:
Cancel
Lakshmipathi S - Bangalore,இந்தியா
07-ஆக-202007:45:35 IST Report Abuse
Lakshmipathi S இந்த அயோக்கியனை வெளியில் விட்டது ஜனநாயகம் செய்த பிழை. இவன் மற்ற அயோக்கியர்களை வெளியில்விட வக்காலத்து வாங்குகிறான்.மீண்டும் அந்தத்தவறமட்டும் செய்யக்கூடாது. .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X