நாட்டில் ஜனநாயகம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது: சிதம்பரம்| Dinamalar

நாட்டில் ஜனநாயகம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது: சிதம்பரம்

Updated : ஆக 06, 2020 | Added : ஆக 06, 2020 | கருத்துகள் (66)
Share
P Chidambaram, congress, 370 act, Chidambaram, சிதம்பரம், காங்கிரஸ்

புதுடில்லி: கடந்த ஓர் ஆண்டாக 75 லட்சம் காஷ்மீர் மக்கள் சிறையில் இருப்பது போன்று உணர்கிறார்கள்; இந்தியாவில் நாளுக்கு நாள் ஜனநாயம் குறைந்து கொண்டே செல்கிறது என காங்., கட்சியை சேர்ந்த முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சிதம்பரம் டுவிட்டரில் பதிவிட்டதாவது: அனைத்து அரசியல் கட்சிகளும், சரியாக சிந்திக்கும் குடிமக்கள் அனைவரும், கடந்த ஓராண்டாக சிறையில் இருப்பதை போல வாழ்ந்து வரும் 75 லட்சம் காஷ்மீர் மக்களை நினைத்துப்பாருங்கள். காஷ்மீரில் அனைத்து தலைவர்களும் வீட்டு சிறையில் இருக்கிறார்கள். இதுகுறித்து நீங்கள் கேள்வி எழுப்பினால், யாரும் வீட்டுக்காவலில் இல்லை என கோர்ட்டில் கூறுவார்கள். சட்ட அங்கீகாரம் இல்லாத வீட்டுக்காவல், அதிகார துஷ்பிரயோகம்.


latest tamil news



அனைத்து கட்சி ஆலோசனை நடத்த திட்டமிட்டிருந்த பரூக் அப்துல்லாவுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இது தான் ஜனநாயகமா? மெகபூபா முப்தியை விடுவிக்கவும், வீட்டுக்காவலில் இருப்பவர்களை விடுவிக்கவும், நாம் ஒன்றாக குரல் எழுப்ப வேண்டும். இந்தியாவில், மனித உரிமைகள் மறுக்கப்படுவதை உலகம் கவனித்துக்கொண்டிருக்கிறது. இந்தியா பெருமையாக கூறிக்கொள்ளும் ஜனநாயக நாடு, சுதந்திர நாடு என்பது நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X