பொது செய்தி

இந்தியா

மத்திய தணிக்கை குழு தலைவராக ஜி.சி. முர்மு நியமனம்

Updated : ஆக 06, 2020 | Added : ஆக 06, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
After resigning as J&K LG, GC Murmu appointed ,CAG of India

புதுடில்லி,: ஜம்மு - காஷ்மீர் லெப்டினன்ட் கவர்னர் ஜி.சி.முர்மு, தனது பதவியை ராஜினாமா செய்ததையடுத்து சி.ஏ.ஜி. எனப்படும் மத்திய தணிக்கைக்குழு தலைவராக நியமிக்கப்பட்டார்.

ஜம்மு -- காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து, கடந்த ஆண்டு, ஆக. 5ல், ரத்து செய்யப்பட்டது. அதன் பின், ஜம்மு -- காஷ்மீர் மற்றும் லடாக் ஆகியவை, தனித்தனி யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. ஜம்மு -- காஷ்மீரின், லெப்டினன்ட் கவர்னராக,கிரீஷ் சந்திர முர்மு, கடந்த ஆண்டு, அக்டோபர், 31ல் பதவி ஏற்றார். இந்நிலையில் அவர் கவர்னர் பதவிையை நேற்று ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஏற்றுக்கொண்டார்.


latest tamil news



இந்நிலையில் சி.ஏ.ஜி., மத்திய தணிக்கை குழு தலைவராக ஜி.சி. முர்மு நியமிக்கப்பட்டார். இப்பதவியில் இருந்து வரும் ராஜிவ் மெஹ்ரிஷி, அடுத்த வாரம் பணி ஓய்வு பெறுகிறார். இதையடுத்து, அந்த பதவியில், முர்மு நியமனம் செய்யப்பட்டார். இது தொடர்பாக பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய நிதித்துறை அமைச்சகம் இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டது.



Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
07-ஆக-202008:49:28 IST Report Abuse
Lion Drsekar மத்திய தணிக்கைக்கு குழு தேவையா? மன்னிக்கவும் இவர்கள்ஆதாரபூர்வமாக கொடுத்ததை தண்டிக்கவேண்டிய , கண்டிக்கவேண்டிய துறையே நிராகரித்துவிட்டதே, அப்படி இருக்க இந்த துறை என்ன சிரமப்பட்டு வேலைசெய்தாலும் அதற்க்கு ஒரு அங்கீகாரமே இல்லாமல் போய்விட்டதால், இந்த துறைக்கே களங்கத்தையும் கற்பித்து தப்பித்தவர்கள் பொது மேடைகளில் தங்களை ஒரு உலக தலைவர்களாக காட்டிக்கொண்டு வருவது வேதனை அளிக்கிறது, அந்த செய்திக்கூட யாரும் எந்த மாற்று கருதும் கூறாதது அதைவிட ஜீரணிக்க முடியாத நிலை, இரண்டு செய்திகளையும் பார்க்கும்போதுதான் எதற்க்காக இந்த துறை என்று தோன்றுகிறது, நாட்டின் நலன் கருதி எல்லோரும் சிந்தித்தால் மட்டுமே நாடு வளம் பெருகும், வந்தே மாதரம்
Rate this:
Cancel
N S - Nellai,இந்தியா
07-ஆக-202006:24:03 IST Report Abuse
N S "திறமை, தேவை படும் இடங்களுக்கு மாறும்." எதிர்பார்த்தது. அரசியலுக்கு அப்பாற்பட்டவர்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X