பொது செய்தி

இந்தியா

இந்தியாவுக்கு எதிராக துருக்கி: உளவு துறை 'பகீர்' அறிக்கை

Updated : ஆக 08, 2020 | Added : ஆக 06, 2020 | கருத்துகள் (34)
Share
Advertisement
India, Turkey, intelligence, இந்தியா, துருக்கி, உளவு துறை

புதுடில்லி : 'பாகிஸ்தானை தொடர்ந்து, இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளின் மையமாக, துருக்கி செயல்பட்டு வருகிறது' என, உளவுத் துறை எச்சரித்துள்ளது.

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு ஓராண்டு முடிவடைந்த நிலையில், அதை விமர்சித்து, பாக்., சீனாவுடன், மேற்காசிய நாடான துருக்கியும் அறிக்கை வெளியிட்டுள்ளது. 'மத்திய அரசின் நடவடிக்கையால், காஷ்மீரில் அமைதியோ, ஸ்திரத்தன்மையோ ஏற்படவில்லை' என, துருக்கி கூறியுள்ளது.

இந்நிலையில், இந்தியாவுக்கு எதிராக துருக்கியும், அதன் அதிபர் எர்டோகன் குடும்பமும் ஈடுபட்டு வருவதை, வலுவான ஆதாரங்களுடன், தேசிய பாதுகாப்பு அமைப்பிடம், உளவுத் துறை வழங்கியுள்ளது. இரு கட்டங்களாக வழங்கப்பட்ட அந்த அறிக்கைகளில் கூறப்பட்டு உள்ளதாவது:

துருக்கி, காஷ்மீர் முஸ்லிம்களையும், மாணவர்களையும் திரட்டி, இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி வருகிறது. இதற்கு, ஊடகம், கல்வி மையங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களை துருக்கி பயன்படுத்துகிறது. தொண்டு நிறுவனங்கள் மூலம், வேலைவாய்ப்பு வழங்குவதாகவும், மேற்படிப்பிற்கு ஊக்கத் தொகை தருவதாகவும் கூறி, மாணவர்களுக்கு வலை வீசுகிறது.

அதன்படி துருக்கி வருவோரை, பாகிஸ்தானின் உளவு அமைப்பான, ஐ.எஸ்.ஐ., மூளைச் சலவை செய்து, இந்தியாவுக்கு எதிராக செயல்பட வைக்கிறது. இந்த வேலையில், துருக்கி இளையோர் அறக்கட்டளை, வெளிநாடு வாழ் துருக்கியர் சமூகம், துருக்கி ஏர்லைன்ஸ், யூனுஸ் எம்ரே இன்ஸ்டிடியூட், துருக்கி தியாநெட் பவுண்டேஷன், துருக்கி கூட்டுறவு முகமை ஆகியவை ஈடுபட்டுள்ளன.

இதில், பெரும்பாலான நிறுவனங்களுக்கு, துருக்கி அரசுடனும், எர்டோகன் அல்லது அவர் குடும்பத்தினருடன் நேரடி தொடர்பும் உள்ளன. மொத்தத்தில், பாக்.,கை தொடர்ந்து, இந்தியா எதிர்ப்பு நடவடிக்கைகளின் மையமாக, துருக்கி உருவெடுத்துள்ளது. துருக்கி அரசின் கட்டளைப்படி, டில்லியில் உள்ள அதன் துாதரகம், இந்திய தொண்டு நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து, ஆள் பிடிக்கிறது.

துருக்கி சுற்றுலா என்ற போர்வையில், இங்கிருந்து ஆட்கள் அனுப்பி வைக்கப்படுகின்றனர். அங்கு செல்வோர், இந்தியாவுக்கு எதிராக பேசுமாறு ஊக்குவிக்கப்படுகின்றனர். இந்தியாவில் எதிர்ப்பு நடவடிக்கைகளை துாண்டி விடுவதில், நாம் நினைப்பதை விட, துருக்கி அதிதீவிரமாக செயல்பட்டு வருகிறது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nathan - Hyderabad,இந்தியா
16-ஆக-202007:01:43 IST Report Abuse
Nathan துருக்கனை ஓட ஓட விரட்டியவர் காஸ்மீரின் லலிதாதித்யர். ஒட்டோமான் பேரரசை அடித்து ஐரோப்பா நிர்மூலமாகியது. இப்போ வாலை ஒட்ட நறுக்க பாரதத்தின் முயற்சி ஓங்கும்.
Rate this:
Cancel
08-ஆக-202017:42:33 IST Report Abuse
Indian Kumar ( Nallavarkal  Aatchikku VARAVENDUM ) துருக்கி துரோக நாடாக இருப்பது அந்த நாட்டுக்கு தான் இழப்பு
Rate this:
Cancel
mathimandhiri - chennai,இந்தியா
08-ஆக-202016:32:58 IST Report Abuse
mathimandhiri சீனாக்காரன் இந்தப் பக்கம் உட்கார்ந்து கொண்டிருக்கட்டும். அங்கு ஆக்கிரமிப்பு காஷ்மீரிலிருந்து ஒரு சின்ன குண்டு வெடிப்போ, பயங்கரவாதிகள் மூலம் உயிரிழப்போ ஏற்படுமாயின் பி.ஓ.கே வை அடுத்த நாளே துடைத்த தெரியும் மாஸ்டர் பிளான் நமக்கு உடனே தேவை. இந்த ஆபரேஷன் தான் அநேகமாக இறுதியில் வெற்றியை கொடுக்கும் என்று எண்ணுகிறேன்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X