சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கொலை வழக்கில் விசாரிக்கப்பட்ட தச்சு தொழிலாளி தற்கொலை

Added : ஆக 06, 2020
Share
Advertisement
திட்டக்குடி : தொழுதுார் அருகே பெண் கொலை வழக்கில் விசாரிக்கப்பட்டு வந்த தச்சுத் தொழிலாளி, தற்கொலை செய்து கொண்டது குறித்து ராமநத்தம் போலீசார் விசாரிக்கின்றனர். தொழுதூர் அடுத்த மேலக்கல்பூண்டி ஐயனார்கோவில் அருகிலுள்ள கொட்டகையில், கடந்த 1ம் தேதி வடகராம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த கருப்பாயி, 42; கொலை செய்யப்பட்டு கிடந்தார்.இது குறித்து ராமநத்தம் போலீசார் வழக்குப்

திட்டக்குடி : தொழுதுார் அருகே பெண் கொலை வழக்கில் விசாரிக்கப்பட்டு வந்த தச்சுத் தொழிலாளி, தற்கொலை செய்து கொண்டது குறித்து ராமநத்தம் போலீசார் விசாரிக்கின்றனர்.

தொழுதூர் அடுத்த மேலக்கல்பூண்டி ஐயனார்கோவில் அருகிலுள்ள கொட்டகையில், கடந்த 1ம் தேதி வடகராம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த கருப்பாயி, 42; கொலை செய்யப்பட்டு கிடந்தார்.இது குறித்து ராமநத்தம் போலீசார் வழக்குப் பதிந்து நடத்திய விசாரணையில், மேலக்கல்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த சுப்ரமணியன்,48, என்ற தச்சு தொழிலாளியுடன், கருப்பாயிக்கு தொடர்பு இருந்தது தெரிந்தது.கருப்பாயி கொலை குறித்து, சுப்ரமணியனை வரவழைத்து போலீசார் விசாரித்தனர்.

இதனால் சுப்ரமணியனின் தந்தை மற்றும் மனைவி திட்டினர். இதனால் மன உளைச்சலில் இருந்த சுப்ரமணியன், நேற்று காலை பூஜை அறையில் தூக்கு மாட்டிக் கொண்டார். உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். ராமநத்தம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X