ஜாதவுக்கு வழக்கறிஞர்: இந்தியாவிடம் பாக்., கோரிக்கை

Updated : ஆக 06, 2020 | Added : ஆக 06, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
Kulbhushan Jadhav case, Pakistan, India for appointing lawyer for ex-Navy official

இஸ்லாமாபாத் : குல்பூஷன் ஜாதவ் வழக்கில் அவர் சார்பில் வாதாட, வழக்கறிஞரை நியமிக்குமாறு இந்திய அரசிடம் பாக். கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய கடற்படை அதிகாரியான குல்பூஷன் ஜாதவ், தங்கள் நாட்டில் உளவு பார்த்ததாக, பாகிஸ்தான் போலீசார் கைது செய்தனர். அவருக்கு, பாக்., ராணுவ நீதிமன்றம் 2016-ல்மரண தண்டனை விதித்தது. இந்த தீர்ப்புக்கு, சர்வதேச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. தீர்ப்பை எதிர்த்து, மேல் முறையீடு செய்ய, ஜாதவுக்கு அனுமதி அளிக்கும் படியும், சர்வதேச நீதிமன்றம், பாகிஸ்தானுக்கு உத்தரவிட்டது.


latest tamil news




இந்த வழக்கில் இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில், ஜாதவின் மேல் முறையீட்டுமனு மீதான விசாரணை கடந்த வாரம் நடந்த போது, ஜாதவ் சார்பில் வாதாடுவதற்கு, வழக்கறிஞரை நியமிக்க, இந்தியாவுக்கு அனுமதி அளித்து, உத்தரவிட்ட இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் வழக்கை செப்., 3ம் தேதிக்கு ஒத்தி வைத்தது.

முன்னதாக வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் இன்று பேட்டியளிக்கையில், குல்பூஷன் ஜாதவ் வழக்கில் பாக்.அரசிடமிருந்து எந்த தகவலும் வரவில்லை என்றார். இந்நிலையில் பாக். அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், குல்பூஷன் சார்பில் வாதாட வழக்கறிஞரை நியமிக்குமாறு இந்திய அரசை கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rafi - Riyadh,சவுதி அரேபியா
08-ஆக-202000:20:34 IST Report Abuse
Rafi இந்திய அரசு வழக்கறிஞரை நியமிக்க வேண்டும், மேலும் நீதிமன்ற விசாரணையை ஒளிப்பதிவு செய்யவும் அனுமதி பெற வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X