அரசியல் செய்தி

தமிழ்நாடு

திமுக பொதுச் செயலர் பதவி கேட்டு போர்க்கொடி! கடும் அதிருப்தியில் துரைமுருகன்

Updated : ஆக 07, 2020 | Added : ஆக 06, 2020 | கருத்துகள் (110)
Share
Advertisement
அதிருப்தியாளர்கள் அதிகரிப்பு காரணமாக, தி.மு.க., தலைமைக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை பயன்படுத்தி, முன்னாள் அமைச்சர் துரைமுருகன், பொதுச் செயலர் பதவி கேட்டு, போர்க்கொடி துாக்கி உள்ளார். பொதுச் செயலர் பதவி தருவதாக வாக்குறுதி அளித்து விட்டு, பின்னர் ஏமாற்றியதால், கடும் அதிருப்தியில் இருக்கும் துரைமுருகன், எந்த நேரத்திலும், கு.க.செல்வம் போல அதிரடி முடிவெடுக்கும் வாய்ப்பு
DMK, Durai Murugan, MK Stalin, Stalin, திமுக, துரை முருகன், ஸ்டாலின்

அதிருப்தியாளர்கள் அதிகரிப்பு காரணமாக, தி.மு.க., தலைமைக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை பயன்படுத்தி, முன்னாள் அமைச்சர் துரைமுருகன், பொதுச் செயலர் பதவி கேட்டு, போர்க்கொடி துாக்கி உள்ளார். பொதுச் செயலர் பதவி தருவதாக வாக்குறுதி அளித்து விட்டு, பின்னர் ஏமாற்றியதால், கடும் அதிருப்தியில் இருக்கும் துரைமுருகன், எந்த நேரத்திலும், கு.க.செல்வம் போல அதிரடி முடிவெடுக்கும் வாய்ப்பு இருப்பதாக, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சென்னை, அறிவாலயத்தில், நேற்று முன்தினம் நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில், தனக்கு பொதுச் செயலர் பதவி தர வேண்டும் என, அவர் பகிரங்கமாக போர்க்குரல் எழுப்பிய தகவல் வெளியாகி உள்ளது.

தி.மு.க., தலைவர் ஸ்டாலின் மகன் உதயநிதி, அக்கட்சியின் இளைஞரணி செயலராக நியமிக்கப்பட்டதில் இருந்து, அக்கட்சியில் அதிருப்தியாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கே.பி.ராமலிங்கம், வி.பி.துரைசாமி ஆகியோரை தொடர்ந்து, கு.க.செல்வமும், கட்சி தலைமைக்கு எதிராக அதிருப்தி கொடியை உயர்த்தி உள்ளார்.

சென்னை நகரின், ஆயிரம் விளக்கு தொகுதி, எம்.எல்.ஏ.,வாக உள்ள கு.க.செல்வம், கட்சியில் உதயநிதியும், அவரது ஆதரவாளர்களும் செய்யும் கோஷ்டி அரசியல் பிடிக்காமல், அங்கிருந்து வெளியேறி உள்ளார்; பா.ஜ.,வில் சேர உள்ளார்.

ஸ்டாலின், கனிமொழி ஆகியோர் மட்டுமின்றி, அவர்களது குடும்பத்தினருக்கும் மிகவும் நெருக்கமானவராக, கு.க.செல்வம் இருந்தார். அதன் காரணமாக, கருணாநிதி குடும்ப விஷயங்களை, மிகவும் நன்கு அறிந்தவராகவும் இருந்தார். அவரது விலகல், அக்கட்சிக்கு கடும் நெருக்கடியை கொடுத்துள்ளது.

அதில் இருந்து மீள்வது குறித்து ஆலோசிப்பதற்காக, மூத்த நிர்வாகிகளை ஸ்டாலின் அழைத்திருந்தார். இந்த சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருந்த துரைமுருகன், ஸ்டாலினுக்கு மேலும் நெருக்கடி தரும் விதமாக, பொதுச்செயலர் பதவி கேட்டு, குரல் எழுப்பியதாக தெரிகிறது.

இது குறித்து, அக்கட்சி வட்டாரங்கள் கூறியதாவது: பொதுச்செயலர் அன்பழகன் மறைந்த பின், அப்பதவி காலியாக உள்ளது. அந்தப் பதவிக்கு, துரைமுருகனை நியமிக்கும் எண்ணம், ஸ்டாலினுக்கு ஆரம்பத்தில் இருந்தது. அதற்காக, அவர் வகித்த பொருளாளர் பதவியில் இருந்து விலகச் சொன்னார். கட்சி பொதுக்குழுவை கூட்டி, துரைமுருகனை பொதுச் செயலராக தேர்ந்தெடுப்பதாக வாக்குறுதி அளித்தார்.

ஆனால், கட்சியில் உதயநிதியின் கை ஓங்கியது. மாவட்ட செயலர்களுக்கு மரியாதை குறைந்து, இளைஞரணி செயலர்களுக்கு அதிக முக்கியத்துவம் கிடைக்கத் துவங்கியது. இந்த நேரத்தில், கொரோனாவை காரணம் காட்டி, பொதுக்குழுவை தள்ளிப் போட்டனர். துரைமுருகனை மீண்டும் பொருளாளராக ஆக்கி விட்டு, பொதுச் செயலர் பதவி யாருக்கு என்பதை சொல்லாமல், ரகசியமாக வைக்க முடிவு செய்தனர்.

இந்நிலையில், சென்னை மேற்கு மாவட்டச் செயலர் பதவி கிடைக்காததாலும், இளைஞர் அணி செயலர் உதயநிதியின் ஆதிக்கத்தாலும், அதிருப்தி அடைந்த, ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ., கு.க.செல்வம், பா.ஜ., ஆதரவாளராக மாறினார். இதைப் பயன்படுத்தி, 'கட்சியில் மூத்த நிர்வாகிகள் யாரும் புறக்கணிக்கப்படவில்லை; அவர்களுக்கு முக்கியத்துவம் இருக்கிறது என்பதை காட்டும் விதமாக, எனக்கு பொதுச் செயலர் பதவி கொடுங்கள்; பொதுக்குழுவை கூட்டுங்கள்' என, அறிவாலய கூட்டத்தில், துரைமுருகன் வலியுறுத்தி உள்ளார்.

மேலும், ஆளும் கட்சியின் மேலிடத்துடன், தனக்கு இருக்கும் தொடர்பையும், துரைமுருகன் வெளிப்படுத்தி உள்ளார். சென்னை, கோட்டூர்புரத்தில் உள்ள துரைமுருகன் வீட்டின் அருகில், மாநகராட்சிக்கு சொந்தமான விளையாட்டு திடல் உள்ளது. அதில், சென்னை மேயராக ஸ்டாலின் இருந்தபோது, டி.ஆர்.பாலு எம்.பி., தொகுதி நிதியில், உடற்பயிற்சி கூடம் உருவாக்கப்பட்டது.

இங்கு, மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான பூங்கா அமைக்கப்பட உள்ளது. இதைத் திறக்க எதிர்ப்பு தெரிவித்து, முதல்வர் இ.பி.எஸ்., மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணியிடம் பேசி, துரைமுருகனே தடுத்து வருவதாக, அப்பகுதி தி.மு.க.,வினர், ஸ்டாலினிடம் புகார் கூறியுள்ளனர்.

சமீப காலமாக, மத்திய அரசை விமர்சிப்பதிலும், துரைமுருகன் தீவிரம் காட்டுவதில்லை. வேலுார் லோக்சபா தேர்தலில், அவரது மகன் போட்டியிட்டார். அந்நேரத்தில், பணம் பதுக்கல் விவகாரத்தில் மகன் சிக்கியதால், தேர்தலே நிறுத்தப்பட்டது. இந்த விவகாரத்தை சரிக்கட்ட, பா.ஜ., தலைவர்களுடனும், மத்திய அரசுடனும் இணக்கத்தை காட்டினார். அதன் காரணமாகவே, அந்த பிரச்னையில் இருந்து, அவர் எளிதில் மீண்டு வந்ததாக கூறப்படுகிறது.

இப்படி, ஆளும் கட்சியினருடனும், பா.ஜ.,வுடனும் நெருக்கத்தை காட்டுவதுடன், தி.மு.க., தலைமைக்கு நெருக்கடியும் கொடுத்து வரும் துரைமுருகனுக்கு, பொதுச் செயலர் பதவி தரப்படா விட்டால், அவர் எந்த நேரத்திலும், எந்த முடிவும் எடுக்கும் வாய்ப்பு உள்ளது. அவரது மிரட்டலுக்கு இறங்கி, பொதுச் செயலர் பதவியை இவருக்கு விட்டுக் கொடுத்தால், பொருளாளர் பதவி யாருக்கு என்பதிலும், டி.ஆர்.பாலு, கனிமொழி இடையே போட்டி உருவாகியுள்ளது.

எனவே, பொதுச் செயலர், துணை பொதுச் செயலர்கள், பொருளாளர் போன்ற பதவிகளுக்கு, புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க, பொதுக்குழுவை கூட்ட வேண்டிய நிர்ப்பந்தம், தி.மு.க., தலைமைக்கு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


'துரைமுருகன் பற்றிநிறைய விஷயங்கள்!'

''தி.மு.க.,வில் இருக்கும் துரைமுருகன் பற்றி நிறைய விஷயங்கள் உள்ளன; அவற்றை பின்னர் வெளியிடுவேன்,'' என, தி.மு.க., அதிருப்தி எம்.எல்.ஏ., கு.க.செல்வம் தெரிவித்தார்.

சென்னை, ஆயிரம் விளக்கு தொகுதி, எம்.எல்.ஏ., செல்வம், இரு தினங்களுக்கு முன், பா.ஜ., தேசிய தலைவர் நட்டாவை, டில்லியில் சந்தித்தார். நேற்று முன்தினம் சென்னையில், தமிழக பா.ஜ., அலுவலகம் சென்று, ராமர் பூஜையில் பங்கேற்றார். அவரை, 'சஸ்பெண்ட்' செய்ததுடன், விளக்கம் கேட்டும், அவருக்கு, தி.மு.க., தலைமை, 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது.

இந்நிலையில், செல்வம் நேற்று அளித்த பேட்டி:தி.மு.க., அனுப்பிய கடிதம், எனக்கு வந்து சேரவில்லை. என்ன விளக்கம் கேட்கப்பட்டுள்ளதோ, அதற்கு பதில் தெரிவிப்பேன். அவர்கள் என்னை, கட்சி பொறுப்புகளிலிருந்து நீக்குவதற்கு முன், அதிலிருந்து விலக முடிவெடுத்து, தி.மு.க., தலைமையிடம் தெரிவித்தேன். தி.மு.க.,வில் இருக்க பிடிக்காததால், பதவியை துறக்க முடிவு செய்தேன். மாவட்ட செயலர் பதவி கொடுக்காதது, என் அதிருப்திக்கு காரணம் இல்லை; குடும்ப அரசியல் தான் காரணம்.

வயதானதால், பணம் இல்லாததால், தி.மு.க.,விலிருந்து ஓரம் கட்டப்பட்டேன். தி.மு.க.,விலிருந்து யாரையும் அழைக்கவில்லை. உழைப்பவர்களுக்கு, அக்கட்சியில் மரியாதை இல்லை.முன்னாள் அமைச்சர் துரைமுருகன் குறித்து நிறைய விஷயங்கள் சொல்லலாம்; பின்னர் பேசுகிறேன். இவ்வாறு, அவர் கூறினார்.


மேலும் ஒரு எம்.எல்.ஏ.,அணி மாறுகிறார்?

வட மாவட்டத்தைச் சேர்ந்த, தி.மு.க., - எம்.எல்.ஏ., ஒருவர், துரைமுருகனின் தீவிர ஆதரவாளர். இவர், பொதுப்பணித் துறையில், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள, 'கான்ட்ராக்ட்' பணிகளை செய்து வருகிறார். அவரது தொகுதியை, வரும் சட்டசபை தேர்தலில், வேறு ஒருவருக்கு ஒதுக்க உறுதி அளிக்கப்பட்டதாக தெரிகிறது. இதனால், கடும் அதிருப்தி அடைந்துள்ள அவர், விரைவில், அ.தி.மு.க., ஆதரவாளராக மாறலாம் என, ஆளுங்கட்சி வட்டாரத்தில் பேசப்படுகிறது.

- நமது நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (110)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sathya Dhara - chennai,இந்தியா
14-ஆக-202014:28:07 IST Report Abuse
Sathya Dhara திருட்டு முரட்டு கழக தலைமை ஆடிய ஆட்டம் போதும். இனியாவது தாழ்த்த்தப்பட்ட வகுப்பினை சேர்ந்த ஒருவருக்கு தலைவர் பதவி பொது செயலாளர் பதவி பொருளாளர் பதவி அனைத்தையும் வழங்கவும். இல்லாவிடில் அடுத்த தேர்தலில் அனைத்து மக்களும். சமுதாய நீதியை மறுத்த துரோகிகளுக்கு பொய்மொழி பொய்மொழி பொய்டாலின் பொய்நிதி கும்பலை மொத்தமாக புறக்கணித்து பாதிக்க பட்ட மக்கள் பாடம் புகட்ட வேண்டும்.
Rate this:
Cancel
vanthiyadevan - chennai,இந்தியா
14-ஆக-202008:07:22 IST Report Abuse
vanthiyadevan பெங்களூருருவில் பட்டியல் இன MLA தாக்கப்படுகிறார், காவல் நிலையம் தாக்கபடுகிறது தமிழக அரசியல் வாதிகள் அனைவரும் வாய் திறக்கவில்லை. வைகோ,ஸ்டாலின், திருமாவளவன், அருணன்,வீரமணி இங்கிருக்கும் பெங்களுரூ மக்களுக்கு குரல் கொடுக்கவில்லை. தமிழகத்திலும் குரல் கொடுப்பதில்லை. இவர்களால் மக்களுககு என்ன பயன்?, மக்களுக்கு இவர்கள் எப்படி பாதுகாப்பு கொடுப்பார்கள்? தமிழக மக்கள் தானே தன் தலையில் மண்ணை போட்டுகொள்ளாம்லிருந்தால் சரி.
Rate this:
Sathya Dhara - chennai,இந்தியா
14-ஆக-202019:47:37 IST Report Abuse
Sathya Dhara "இவர்களால் மக்களுககு என்ன பயன் ...?"....... திரு வந்திய தேவன் அவர்களே.....மிக மிக பெரும் பயன் அடைந்து உள்ளோம். சற்றே நினைத்துப்பாருங்கள். மக்களுக்கு சேவை செய்ய ...பொய் சொல்லி வஞ்சகம் செய்து...வாக்குகள் பெற்று ...."சிறிதும் சேவை மனப்பான்மை இன்றி.....மன சாட்சியின்றி.... அளவிட முடியாத அளவு கொள்ளையும், புரட்டும் செய்து....எந்த அளவு ...நம்பிய மக்களை ஏமாற்ற முடியும்......வஞ்சகத்தின் எல்லை என்ன.....துரோகத்தின் எல்லை என்ன....துன்பத்தின் எல்லை என்ன....இப்படியும் தேசத்திற்கு மொழிக்கு மக்களின் வளர்ச்சிக்கு கல்வியின் வளர்ச்சிக்கு குந்தகம் செய்யும் எண்ணத்தோடு இருக்க முடியுமா.......கொள்ளை ஒன்றே பிரதானம் என்று வாழ்ந்து.....உத்தமன் போல் வேஷம் போட முடியும்........மக்களின் காதில் பூ வைப்பது அல்ல.....ஊட்டி மலர்க்கண்காட்சியும் மொத்தமாக ஏற்ற முடியும்....என்பதை நிரூபணம் செய்து......தீயவர்களின் உச்சம் என்ன என்று நமக்கு புரிந்து கொள்ளும் அளவினுக்கு அடையாளம் காட்டினார்கள்.....அல்லவா அது நாம் பெற்ற பயன் அல்லவா ......இல்லையாயின் ...இன்னும் இவர்கள் ஏதோ நமக்கு சாதனை செய்து காட்டப்போகின்றார்கள். தேனும் பாலும் ஓடும், கல்வி பரிணமிக்கும். தமிழகம் உலக அளவில் சிறப்பு எய்தும் என்று நம்பி........தீயவர்களுக்கு இனி ஒட்டு போட மாட்டோம் அல்லவா......முக்கியமாக ...இவர்களால் நாம் பெற்ற பயன்......."இனி யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பது நமது பிரச்னை அல்ல.......யார் வரக்கூடாது.....வந்து விடவே கூடாது என்று சிந்தனை செய்ய வைத்து விட்டார்களே.....அது நாம் பெற்றுள்ள அருமையான பயன் அல்லவா....?...
Rate this:
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
13-ஆக-202011:22:46 IST Report Abuse
Malick Raja திமுகாவில் போர்க்கொடி உயரவில்லை .. மாறாக பொற்கொடியாகவே இருக்கும் .. இனி திமுக ஆட்சிக்கு தடையேதும் இருக்காது அதற்குத்தான் பிஜேபி துணை புரியும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X