பொது செய்தி

தமிழ்நாடு

மானாமதுரை கண்மாய் துார்வார கோரிக்கை

Added : ஆக 07, 2020
Share
Advertisement
மானாமதுரை:மானாமதுரையில், பாசன வசதி பெறும் கண்மாய் வரத்து கால்வாய் துார்வாராமல், முட்புதர்கள் மண்டிக்கிடப்பதால், 500 ஏக்கர் பாசன வசதி பெற முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனர்.இக்கண்மாய் 117 எக்டேர் பரப்பளவு கொண்டது. இப்பகுதியில் 500 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். கடந்த சில ஆண்டாக மழையின்றி கண்மாய் வரண்டதோடு, வைகை ஆற்றில் இருந்து கண்மாய்க்கு வரும்
 மானாமதுரை கண்மாய் துார்வார கோரிக்கை

மானாமதுரை:மானாமதுரையில், பாசன வசதி பெறும் கண்மாய் வரத்து கால்வாய் துார்வாராமல், முட்புதர்கள் மண்டிக்கிடப்பதால், 500 ஏக்கர் பாசன வசதி பெற முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனர்.

இக்கண்மாய் 117 எக்டேர் பரப்பளவு கொண்டது. இப்பகுதியில் 500 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். கடந்த சில ஆண்டாக மழையின்றி கண்மாய் வரண்டதோடு, வைகை ஆற்றில் இருந்து கண்மாய்க்கு வரும் கிருங்காங்கோட்டை அருகே உள்ள வரத்து கால்வாய் சேதமுற்றுள்ளன. இதனால் கண்மாய்க்கு வைகை நீர் வரத்தின்றி முட்புதர்கள் மண்டிக்கிடக்கிறது.

இந்த கண்மாயினை துார்வாரி, வரத்து கால்வாயினை செப்பனிட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X