பொது செய்தி

தமிழ்நாடு

உடற்பயிற்சி கூடங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள்: தமிழக அரசு அறிவிப்பு

Updated : ஆக 07, 2020 | Added : ஆக 07, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement

சென்னை; தமிழகத்தில், உடற்பயிற்சிக் கூடங்கள், 10ம் தேதி முதல் செயல்பட, முதல்வர் அனுமதி அளித்துள்ளார். அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை, வருவாய் துறை, நேற்று வெளியிட்டது.



latest tamil news



அதில் கூறியிருப்பதாவது:நோய் கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள, உடற்பயிற்சிக் கூடங்கள், அப்பகுதி இயல்பான பகுதியாக அறிவிக்கப்படும் வரை திறக்கக் கூடாது. கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக, அரசு வெளியிட்டுள்ள வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.உடற்பயிற்சிக் கூடத்தில், 50 வயதிற்கு மேற்பட்டோர், இணை நோய் உள்ளவர்கள், கர்ப்பிணியர், 15 வயதிற்குட்பட்ட சிறுவர்களை அனுமதிக்கக் கூடாது.

ஒவ்வொருவருக்கும் இடையே, 6 அடி இடைவெளியை பின்பற்ற வேண்டும்.அனைவரும் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும். உடற்பயிற்சி செய்யும்போது, முகத்திற்கு கவசம் அணிந்து கொள்ளலாம். அடிக்கடி கைகளை சோப்பால் கழுவ வேண்டும். உடற்பயிற்சிக் கூடத்தில் துப்புவதை, தடை செய்ய வேண்டும்.


latest tamil news



ஒரு குழுவுக்கும், மற்றொரு குழுவுக்கும் இடையே, குறைந்தது, 15 முதல், 30 நிமிடங்கள் இடைவெளி இருக்க வேண்டும். நோய் கட்டுப்பாட்டு பகுதியிலிருந்து வரும் பணியாளர்கள் உட்பட, யாரையும் அனுமதிக்கக் கூடாது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளன.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raj - Chennai ,இந்தியா
07-ஆக-202012:42:05 IST Report Abuse
Raj திட்டம் போட்டு திருடுர கூட்டம் திருடி கொன்டே இருக்குது.
Rate this:
Cancel
elango -  ( Posted via: Dinamalar Android App )
07-ஆக-202009:07:31 IST Report Abuse
elango First abolish E Pass and open the economy.Opening Gym is not important and I wonder who will go .
Rate this:
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
07-ஆக-202008:07:02 IST Report Abuse
Sampath Kumar அப்படியே பார்களை திறக்கலாம் ஆல்கஹால் ஒரு கிருமி நாசினி எனவே சரக்கு அடிக்கும் முன்பு கைகள் முகம் எல்லாம் தடவி வீட்டு ஒரு டேபிளுக்கு ஒருத்தர் என்ற வீதத்தில் நடத்தலாம் அரசுக்கு வருமானம் வரும் குடிமக்களும் சந்தோஷமாக இருப்பார்கள் செய்வார்களா ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X