நிரவ் மோடியின் காவல் ஆக.27 வரை நீட்டிப்பு

Updated : ஆக 07, 2020 | Added : ஆக 07, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
PNB scam, Nirav Modi, Nirav Modi case

லண்டன்: ரூ.13 ஆயிரம் கோடி வங்கி கடன் மோசடி வழக்கில் லண்டனில் கைதாகி சிறையில் உள்ள வைர வியாபாரி நிரவ் மோடியின் காவல் ஆக.27-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டது.

பிரபல வைர வியாபாரி நிரவ்மோடி,49 , தனது உறவினர் மெகுல் சோக்சியுடன் சேர்ந்து பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13 ஆயிரம் கோடி கடன்பெற்று திரும்ப செலுத்தாமல் வெளிநாட்டுக்கு தப்பி ஓடினர்.

லண்டனில் தலைமறைவாக இருந்த நிரவ் மோடி கடந்த மார்ச் மாதம் ஸ்காட்லாந்து யார்டு போலீசாரால் கைது செய்யப்பட்டு லண்டன் வாண்ட்ஸ் வோர்த் சிறையில் அடைக்கப்பட்டார். வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம் நிரவ் மோடி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.


latest tamil news




இந்நிலையில் அவரது காவல் முடிவடைய இருந்ததால், சிறையில் இருந்தபடி, காணொலி காட்சி மூலம் லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் கோர்ட்டு நீதிபதி வனேசா பரைட்சர் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். ஆக.27-ம்தேதி வரை காவலை நீட்டித்து உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை செப். 7-ம் தேதி ஒத்தி வைத்தார்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
r ganesan - kk nagar chennai,இந்தியா
07-ஆக-202011:38:18 IST Report Abuse
r ganesan மோடி இந்த வழக்குகளில் அவ்வளவு கவனம் செலுத்துவது கிடையாது. இது வரை ஒரு ஊழல் குற்றவாளி கூட தண்டிக்கப்பட்டது கிடையாது. மன்மோஹன் காலத்திலாவது இரு பெரும் அரசியல்வாதிகள் தண்டனை அடைந்தனர். நாமெல்லாம் நம்பிக்கொண்டு இருப்பது வேறு. நடப்பது வேறு.
Rate this:
Cancel
Chandramoulli - Mumbai,இந்தியா
07-ஆக-202009:45:12 IST Report Abuse
Chandramoulli இந்தியாவில் நீதி துறையில் ஏகப்பட்ட ஓட்டைகள் இருக்கும் வரை இந்த மாதிரி பொருளாதார குற்றம் செய்தவர்களை ஒன்றும் செய்ய முடியாது. இதுதான் இந்தியாவின் தலையெழுத்து.
Rate this:
Cancel
தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா
07-ஆக-202007:06:38 IST Report Abuse
தமிழ் மைந்தன் ஆகஸ்ட் இறுதிவரை ராகுலுக்கு நிம்மதி....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X