பொது செய்தி

இந்தியா

புதிய கல்விக்கொள்கையில் எந்த பாகுபாடும் இல்லை: மோடி

Updated : ஆக 07, 2020 | Added : ஆக 07, 2020 | கருத்துகள் (23)
Share
Advertisement
NEP, MODI, NARENDRA MODI, NATIONAL EDUCATION POLICY, கல்விக்கொள்கை, புதியகல்விக்கொள்கை, மாணவர்கள், பிரதமர் மோடி, மோடி

புதுடில்லி: புதிய கல்விக்கொள்கையில், எந்தவிதமான பாகுபாடும் இல்லை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

புதிய கல்விக்கொள்கையில் உயர் கல்வி சீர்திருத்தங்கள் மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது:
*பல ஆண்டுகளாக இந்திய கல்வி முறையில் பெரிய மாற்றங்கள் எதுவும் இல்லை.
*பல ஆய்வுக்கு பிறகே புதிய கல்வி கொள்கை உருவாக்கம்
*அனைத்து தரப்புகளின் கருத்துகளை கேட்ட பிறகு, கல்விக்கொள்கை இறுதி செய்யப்பட்டது
*கல்வி கொள்கையை அமல்படுத்துவது புதிய சவாலாக இருக்கும்
*கல்வி கொள்கையில் எந்தவித பாகுபாடும் இல்லை.
*கல்விக்கொள்கையில் மிகப்பெரிய சீர்திருத்தத்தை கண்டு சிலர் வருத்தமடைந்துள்ளனர்.
*முன்னேறி செல்ல சீர்திருத்தமே ஒரே வழி
*தேசிய கல்வி கொள்கையில், எந்தவிதமான சார்புகளும் இல்லை.
*பல்வேறு துறைகளை சேர்ந்தவர்கள், வெவ்வேறு சித்தாந்தங்களை சேர்ந்தவர்கள் கல்வி கொள்கை குறித்து கருத்துகளை தெரிவிக்கின்றனர்.
*இந்தியாவை வலுவான நாடாக உருவாக்க வளர்ச்சியை அதிகரிக்க புதிய கல்விக்கொள்கை உதவும்
*ஆரோக்கியமான விவாதங்கள் கல்வித்துறையை வளர்ச்சி அடைய செய்யும்
*முழுமையான கல்வி என்பதே தற்போதைய தேவை. இதற்காக புதிய கல்வி கொள்கை கொண்டு வரப்பட்டுள்ளது.
*எதிர்காலத்திற்கு இளைஞர்கள் தயாராக உள்ளனர், என்பதை இந்த சீர்திருத்தம் உறுதி செய்கிறது
*வருங்கால சந்ததிகளை வரும் காலங்களில் வரும் சவால்களை சந்திக்க தயார்படுத்தும்


latest tamil news*மாணவர்களின் கற்பனை திறனை ஊக்குவிக்கும் வகையில் புதிய கல்வி கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.
*21ம் நூற்றாண்டிற்கான அடிதளத்தை புதிய கல்வி கொள்கை அமைக்கும்
*முறையான கல்வி தற்போது தேவை என்பதற்காக புதிய கல்வி கொள்கை கொண்டு வரப்பட்டுள்ளது.
*பள்ளிக்கல்வயை புதிய முறையில் வடிவமைப்பதன் மூலம் நமது மாணவர்களை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்லும்
*இந்தியாவை வலுவான நாடாக உருவாக்குவதற்கு கல்வி கொள்கை உதவும்
*தாய்மொழியிலேயே கல்வி கற்பது மூலம் மாணவர்கள் சிறப்பாக கல்வி கற்க முடியும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
*அதனால் தான் 5ம் வகுப்பு வரையில் தாய்மொழியில் கல்வி கற்க வேண்டும் எனக்கூறப்பட்டுள்ளது.
*வெறுமனே பாடங்களை படிப்பதைவிட கேள்வி கேட்கவும், ஆய்ந்தறியும் வகையில், புதிய கல்விக்கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.
*சர்வதேச குடிமகன்களாக இருக்க வேண்டும். ஆனால், நமது வேர்களை மறக்கக்கூடாது
*கல்விக்கொள்கை மாற்றத்தை நாம் அனைவரும் ஏற்று கொள்ள வேண்டும். அதற்கு நாம் தயாராக வேண்டும்.
*பாடதிட்டங்களை மாற்றுவதற்கு மாணவர்களுக்கு தற்போது சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது.
*நல்ல குடிமகன்களை உருவாக்கும் முயற்சி வெற்றிபெற வேண்டுமானால் மாணவர்கள் சமூக சூழ்நிலையோடு மாணவர்கள் கல்வி கற்க வேண்டும்
*திறமை மற்றும் தொழில்நுட்பம் ஆகியவை நமது வளங்கள்.
*தொழில்நுட்பம் மூலம் நமது சமூகத்தின் கடைகோடியில் இருக்கும் மாணவர் வரை கல்வியை கொண்டு செல்ல முடியும்.
*கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கு இடையேயான இடைவெளியை குறைக்க முயற்சி செய்யப்படும்
*ஆய்வு செய்வதிலும், அதனை குறைப்பதிலும் உள்ள இடைவெளியை புதிய கல்வி கொள்கை குறைக்கிறது
*கல்வியின் நோக்கமே சிறந்த மனிதர்களை உருவாக்குவதுதான் என்பதை முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் சுட்டிகாட்டியுள்ளார். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sriram Narashum L - Jamnagar,இந்தியா
07-ஆக-202017:52:02 IST Report Abuse
Sriram Narashum L நானும் திரு .மருத்துவர் ராமதாஸ் ஏன் ஏதிக்கிறார் என பார்த்தால் அவரும் காலேஜ் ,பள்ளிக்கூடம் நடத்தி கொண்டிருக்கிறார் என தெரிந்த பொழுது இவரும் இதற்குத்தான் எதிக்கிறார் . இதை பார்க்கும் போது இவர்கள் எல்லாம் மக்களை வியாபார பொருளாக தான் பார்க்கிறார் .
Rate this:
Cancel
தமிழ்வேள் - திருவள்ளூர் ,இந்தியா
07-ஆக-202017:26:53 IST Report Abuse
தமிழ்வேள் இந்த திராவிட கடசிகளுக்கு இந்த ஆண்டோடு சமாதிகட்டாவிட்டால் தமிழன் கதி அதோகதி .....எனவே கூடிய சீக்கிரம் கவர்னர் ஆடசி கொண்டுவந்து மத்திய அரசின் சீர்திருத்தங்களை இங்கு அமலுக்கு கொண்டுவரவேண்டும் ..நிச்சயம் பொது ஜனம் ஆதரிக்கும் எதிர்ப்பது முழுவதும் திராவிட கான் கிராஸ் கம்மி அல்லக்கை அயோக்கியர்கள் மட்டுமே .மத்திய அரசு இவர்களை பற்றி கவலைப்படத் தேவையில்லை மக்கள் மத்திய அரசின் பக்கம் ...
Rate this:
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
07-ஆக-202017:19:13 IST Report Abuse
வெகுளி அரசு பள்ளிகளில் எல்லாமே இலவசமா சொல்லி குடுத்துடீங்கன்னா திராவிட கல்வி தந்தைகளின் கல்வி வியாபாரம் படுத்துருமே மோடிஜி..... அவங்கள மீண்டும் கருப்பு பலூன் விட வச்சுருவீங்க போலிருக்கே....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X