எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

தொழில் முறை பயணத்திற்கான 'இ - பாஸ்' பெறுவதில் குழப்பம்

Added : ஆக 07, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
 தொழில் முறை, இ - பாஸ், குழப்பம்

தொழில் நிமித்தமான, 'இ - பாஸ்' பெறுவதில் பல்வேறு குழப்பம் தொடர்கிறது. 'தொழில்முறை, 'இ - பாஸ்' பெறுவோர், குறிப்பிட்ட மண்டலத்திற்குள் மட்டுமே செல்ல முடியும்; பிற மண்டலம் செல்லவும், அங்கிருந்து திரும்பி வரவும், தனி நபர், 'இ - பாஸ்' பெற வேண்டும்' என, அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

கொரோனா பரவலை தடுக்க, ஆக., 31 வரை, ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல, 'இ - பாஸ்' பெற வேண்டும்.திருமணம், இறப்பு, மருத்துவ சிகிச்சை போன்றவைகளுக்கு, தனி நபர், 'இ - பாஸ்' வழங்கப்படுகிறது. தொழில் நிமித்தமாக செல்ல, பிரத்யேகமாக, 'இ - பாஸ்' வழங்கப்படுகிறது.தொழில் நிமித்தமாக, 'இ - பாஸ்' செல்வோர், தமிழகம் முழுதும் சென்று வர அனுமதிக்கப்பட்டது. தற்போது, குறிப்பிட்ட மண்டலத்திற்குள் உள்ள மாவட்டங்களுக்கு மட்டுமே செல்ல முடியும்; பிற மாவட்டங்களுக்கு போக முடியாத வகையில், மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


குழப்பம்

இதுகுறித்து, தொழில் முனைவோர் கூறியதாவது:சென்னையில் உள்ள நான், தொழில் நிமித்தமாக, 'இ - பாஸ்' பெற்று, மாநிலம் முழுதும் செல்ல முடிந்தது. தற்போது, சென்னையில் இருந்து விண்ணப்பித்தால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களை உள்ளடக்கிய, சென்னை மண்டலத்திற்குள் செல்ல மட்டுமே, அனுமதி தரப்படுகிறது.வேறு எங்கு செல்ல விண்ணப்பித்தாலும், தொழில் நிமித்த பயணத்திற்கு அனுமதி கிடைக்கவில்லை. அப்புறம் எப்படி, தொழில்களை கவனிக்க முடியும்.அதிகாரிகளிடம் கேட்டால், சரியான பதில் இல்லை. மொத்தத்தில், 'இ - பாஸ்' நடைமுறையில் பெரும் குழப்பமாக உள்ளது. இதற்கு தீர்வு காண வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

இதுகுறித்து, தமிழ்நாடு மின்னாளுமை முகமை இயக்க அதிகாரிகள் கூறியதாவது:தொழில் நிறுவனங்கள் பெயரில், டிராவல்ஸ் நிறுவனங்கள், 'இ - பாஸ்' பெற்று, பிற நபர்களை அழைத்து செல்வதாக புகார்கள் வந்தன. மொத்தமாக வழங்கப்படும், 'இ-பாஸ்'களில், யார் யார் செல்வர் என்ற விபரம் தரப்படுவதில்லை. இது, அவர்களுக்கு சாதகமாகி விடுகிறது.இதைக் கட்டுப்படுத்தவே, மாநிலம் முழுதுக்குமான அனுமதி ரத்து செய்யப்பட்டு, மண்டலத்திற்குள் மட்டும் அனுமதி வழங்கப்படுகிறது. இதர மண்டலத்திற்குள் செல்வோர், தனிநபர் அனுமதி பெற்றுச் செல்ல வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

தொழில் நிமித்தமாக செல்லும், தனி நபர்களுக்கும், மண்டலங்களுக்குள் மட்டுமே அனுமதி தரப்படுகிறது என்று கேட்டால், 'தொழில் முறைக்கான அனுமதி என்றால், ஒட்டுமொத்தமாக இந்த நடைமுறையை தான் பின்பற்ற அரசு அறிவுறுத்தி உள்ளது. இதுபற்றி எல்லாம், அரசுதான் தெளிவுபடுத்த வேண்டும்' என்றனர்.

அரசின் உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டபோது, 'இ - பாஸ் நடைமுறையில் சில சிக்கல்கள் உள்ளதாக தகவல்கள் வருகின்றன. இதில் தளர்வுகள் அளிக்க, அரசு ஆலோசித்து வருகிறது. விரைவில், அதற்கான அறிவிப்பு வெளியாகும்' என்றனர்.


43 லட்சம் விண்ணப்பம் நிராகரிப்பு


* ஊரடங்கில், திருமணம், இறப்பு, மருத்துவ சிகிச்சைக்கு செல்லுதல் போன்ற காரணங்களுக்காக, வெளியூர் செல்ல, 58.50 லட்சம் தனிநபர்கள் விண்ணப்பித்துள்ளனர். பிற மாநிலங்கள் செல்லவும், பிற மாநிலங்களில் இருந்து தமிழகம் வரவும், 10 லட்சம் விண்ணப்பங்களும் அடக்கம்.இதில், 19.16 லட்சம் பேருக்கு அனுமதி தரப்பட்டுள்ளது; 39 லட்சம் பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன; 37 ஆயிரத்து, 800 விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன

* தொழில் நிமித்தமாக பயணம் மேற்கொள்ள, எட்டு லட்சம் விண்ணப்பங்கள் பதிவாகி உள்ளன. இதில், 2.25 லட்சம் விண்ணப்பங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளன; 4.75 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன; 1 லட்சம் விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன

* மொத்தம், 'இ - பாஸ்' கோரி வந்த, 66.50 லட்சம் விண்ணப்பங்களில், 43.75 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

- நமது நிருபர் --

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
07-ஆக-202023:33:36 IST Report Abuse
நஜுமுதீன் உண்மை தான் ,விதிமீறல்கள் உள்ளன, அவரவர் உயிர் அவர்கள் கையில்,தயவு செய்து ஈபாஸ் தடை விதிக்கவும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X