அடுத்தாண்டு ஜூலை வரை வீட்டிலிருந்து வேலை: பேஸ்புக் அறிவிப்பு

Updated : ஆக 07, 2020 | Added : ஆக 07, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
Facebook, Work From Home, coronavirus, covid 19, பேஸ்புக், வொர்க் ப்ரம் ஹோம், பணி, 2021, ஜூலை

வாஷிங்டன்: கொரோனா வைரஸ் பாதிப்புகள் தொடர்ந்து உச்சத்தில் இருப்பதால் பேஸ்புக் நிறுவனம் தனது ஊழியர்களை 2021ம் ஆண்டு ஜூலை வரை வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதிப்பதாக அறிவித்துள்ளது.

உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸ் தொற்றால் பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்தே பணிபுரிய அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பல நிறுவனங்கள் இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பாததால், டுவிட்டர் போன்ற நிறுவனங்கள் தனது ஊழியர்களை காலவரையின்றி வேலை செய்ய கேட்டுக்கொண்டது. அதேபோல், கூகுள் நிறுவனம், 2021ம் ஆண்டு ஜூன் இறுதி வரை பணியாற்ற அறிவுறுத்தியுள்ளது.


latest tamil news


இந்நிலையில் பேஸ்புக் நிறுவனமும் தங்கள் ஊழியர்களை அடுத்தாண்டு ஜூலை மாதம் வரை வீட்டில் இருந்து பணிபுரிய அனுமதித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் வீட்டிலிருந்து வேலை செய்வதற்கான தேவைகளை நிவர்த்தி செய்ய, ஊழியர்கள் ஒவ்வொருவருக்கும் 1,000 டாலர் நிதியும் கொடுக்கிறது. இது குறித்து பேஸ்புக் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் அனுப்பிய மின்னஞ்சலில், ‛ இது சுகாதாரம் மற்றும் அரசாங்க நிபுணர்களின் வழிகாட்டுதலின் அடிப்படையில், ஆலோசனை செய்து எடுக்கப்பட்ட முடிவாகும்,' என தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
07-ஆக-202015:31:09 IST Report Abuse
skv srinivasankrishnaveni மக்கள் எல்லாம் செய்தபாவம் என்னய்யா ஒருதப்பும் செய்யலே குறைஞ்சது நாங்கல்லாம் கோயிலுக்குப்போவோம் சாமிகும்பிட்டுட்டு வரி=உம்போதே அடுத்தநாளுக்கு தேவையான காய்கனிகளும்வங்கிஜிண்டுவந்துருவோம் இப்போது பிக்பாங்ஸ்கிட் அமேசான் என்று செயின் ஷா ப்ஸ் காரனுகளே பஞ்சம்பிழைக்குறானுக வயறு எரியுது டிவிலே கண்றாவி ஒரு இழவும் இல்லே முகமூடியை போட்டுண்ட சி கேம்கள் பேசற்துஒண்ணுமே புரியலே சரியான தரித்திரம் தான் இந்த கொரோனா என்றார் அரக்கன் , இந்தகொரோனாவால் கொடிலேபஞ்சம்பிழைப்பவர்கள் தனியார் ஆசுபத்திரிகளே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X