பொது செய்தி

இந்தியா

டில்லி பல்கலை இறுதி ஆண்டு மாணவர்களுக்கு ஆன்லைனில் தேர்வு; ஐகோர்ட் அனுமதி

Updated : ஆக 07, 2020 | Added : ஆக 07, 2020
Share
Advertisement

புதுடில்லி: டில்லி பல்கலைக்கழக இறுதி ஆண்டு மாணவர்களுக்கு, ஆன்லைனில் 'திறந்த புத்தக தேர்வு'களை அட்டவணைப்படி நடத்த, டில்லி உயர்நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.



latest tamil news



டில்லி பல்கலைக்கழகத்தின் இறுதி ஆண்டு மாணவர்களுக்கு, ஆன்லைன் வாயிலாக, திறந்த புத்தகத் தேர்வுகளை (Open Book Exams) நடத்த, நீண்ட விவாதங்களுக்கு பின், டில்லி உயர்நீதிமன்றம் இன்று அனுமதியளித்துள்ளது. இது ஆக., 10ம் தேதி முதல் இது நடைமுறைக்கு வருகிறது.

இதுகுறித்து நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் தெரிவித்துள்ளதாவது:
டில்லி பல்கலைக்கழக இறுதி ஆண்டு மாணவர்கள், பல்கலையின் இணையதளத்தில் இருந்து, வினாத்தாள்களை பதிவிறக்கம் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும். அல்லது, தேர்வு படிவத்தில் மாணவர்கள் குறிப்பிட்டுள்ள அவர்களது மின்னஞ்சல் முகவரிக்கு வினாத்தாள்களை அனுப்ப வேண்டும்.
மாணவர்கள் தங்களது விடைத்தாள்களின் படங்களை இணையத்தில் பதிவேற்றலாம். அல்லது பல்கலைக்கு மின்னஞ்சல் அனுப்பலாம். தேர்வு எழுதுவதற்கு இரண்டு மணிநேரம் கொடுக்கப்படுகிறது. இதுதவிர, விடைத்தாளைப் பதிவேற்ற கூடுதல் நேரமும் கொடுக்க வேண்டும்.


latest tamil news



மாணவர்கள் தங்களது விடைத்தாள்களை சமர்ப்பித்த பின், விடைத்தாள் கிடைக்கப்பெற்றதற்கான குறுஞ்செய்தியை மாணவர்களது மின்னஞ்சல்களுக்கு அனுப்ப வேண்டும்.மேலும், அனைத்து மாணவர்களிடமிருந்தும் விடைத்தாள்களை பெறும் அளவிற்கு மின்னஞ்சல் முகவரிக்கு போதுமான திறன் இருப்பதை பல்கலைக்கழகம் உறுதிப்படுத்த வேண்டும். பல்கலையின் அனைத்து நோடல் அதிகாரிகள், பங்கேற்கும் கல்லூரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் மின்னஞ்சல் முகவரிகளை ஆக., 8ம் தேதி வெளியிட வேண்டும்.


latest tamil news



வினாத்தாள்களை பதிவிறக்குவது மற்றும் பதிவேற்றுவதில் சிக்கல்கள் ஏற்பட்டால், பல்கலையின் குறை தீர்க்கும் அதிகாரிக்கு மின்னஞ்சல் அனுப்பும் வசதியை மாணவர்களுக்கு கொடுக்க வேண்டும். அவர் மாணவரிடமிருந்து தகவல் பெற்ற 48 மணி நேரத்திற்குள் பிரச்சினையை தீர்க்க வேண்டும். டில்லி ஐகோர்ட்டின் முன்னாள் நீதிபதி ஒருவர் இதை ஒருங்கிணைக்கும் குழுவின் தலைவராக இருப்பார்.

முடிவுகள் விரைவில் அறிவிக்க ஏதுவாக, மாணவர்களின் விடைத்தாள்களை ஒரே நேரத்தில் திருத்தும் அனைத்து ஆசிரியர்களுக்கும் அனுப்ப வேண்டும்.
இவ்வாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X