பொது செய்தி

இந்தியா

தரையிறக்க பயிற்சியை நிறைவு செய்த இந்திய வீரர்கள்

Updated : ஆக 07, 2020 | Added : ஆக 07, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
Gaganyaan, Astronauts, CompleteTraining, Abnormal, DescentModuleLanding, Russia, ககன்யான், விண்வெளி, வீரர்கள், ரஷ்யா

புதுடில்லி: ககன்யான் திட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்ட நான்கு இந்திய விண்வெளி வீரர்கள், அசாதாரண தரையிறக்கத்தின் போது மேற்கொள்ள வேண்டிய குழு நடவடிக்கை குறித்த பயிற்சியை நிறைவு செய்துள்ளதாக ரஷ்ய விண்வெளி ஆய்வு மையமான ரோஸ்கோஸ்மோஸ் தெரிவித்துள்ளது.

விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் ககன்யான் திட்டம், வரும், 2022ம் ஆண்டு செயல்படுத்தப்படவுள்ளது. 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான இந்த திட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள நான்கு வீரர்களுக்கு ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில், பிப்ரவரி 10ம் தேதி முதல், விண்வெளி வீரர்களுக்கு பிரத்யேக பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. இடையில் கொரோனா பாதிப்பு காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்ட பயிற்சிகள் மீண்டும் உடனடியாக துவங்கின. இதனிடையே கொரோனா காரணமாக ககன்யான் திட்டத்தை செயல்படுவத்துவதில் காலதாமதம் ஏற்படலாமென இஸ்ரோ தெரிவித்துள்ளது.


latest tamil news


காகரின் விண்வெளி பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வரும் விண்வெளி வீரர்களுக்கு வரும் 2021ம் ஆண்டு முதல் காலாண்டில் பயிற்சிகள் நிறைவடையும். வழக்கமான மருத்துவ மற்றும் உடற்பயிற்சி, ரஷ்ய மொழியைக் கற்றுக்கொள்வது மற்றும் சோயுஸ் குழு விண்கலத்தின் உள்ளமைவு, கட்டமைப்பு மற்றும் அமைப்புகளை படிப்பது உள்ளிட்டவை வீரர்களுக்கான பயிற்சியில் அடங்கும்.

இந்நிலையில் ரஷ்ய விண்வெளி ஆய்வு மையத்தின் துணை நிறுவனமான கிளாவ்கோஸ்மோஸ் வெளியிட்ட அறிக்கையில், 'இந்திய விண்வெளி வீரர்கள் அசாதாரண தரையிறக்கத்தின் போது கடைப்பிடிக்க வேண்டிய குழு நடவடிக்கைகள் குறித்த பயிற்சியை முடித்துள்ளனர்: 2020ம் ஆண்டு பிப்ரவரியில் குளிர்காலத்தில் மரங்கள் மற்றும் சதுப்பு நிலங்களிலும், ஜூனில் நீர் மேற்பரப்பில், ஜூலையில் தரைப்பரப்பிலும் பயிற்சி நிறைவடைந்தது. விண்வெளி வீரர்கள் நல்ல உடல்நலத்துடனும், பயிற்சியை தொடர்வதில் உறுதியாக உள்ளனர்' என தெரிவித்துள்ளது.


latest tamil news


ஜூன் 2020ல், இந்திய விண்வெளி வீரர்கள், குறுகிய கால எடை இல்லாத ஐ.எல் -76 எம்.டி.கே சிறப்பு ஆய்வக விமானத்தில் பயிற்சி பெற்றனர். ஜூலை மாதத்தில், ஹெலிகாப்டரில் ஏற பயிற்சி பெற்றனர். அதே நேரத்தில் தரையிறங்கும் இடத்திலிருந்து வெளியேறுவது குறித்து பயிற்சி பெற்றனர் என அதன் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்வெளி வீரர்களின் உடல்நிலை தினசரி அடிப்படையில் கண்காணிக்கப்படுகிறது. மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, ஜி.சி.டி.சி டாக்டர்கள் முழு உடல் மருத்துவ பரிசோதனையை நடத்துகிறார்கள். இந்திய விண்வெளி வீரர்களின் முயற்சி மற்றும் உத்வேகத்திற்கு ஜி.சி.டி.சி பயிற்சியாளர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். பயிற்சி செயல்முறைக்கு மிகவும் தீவிரமான மற்றும் மிகவும் தொழில்முறை அணுகுமுறையுடன் இந்திய விண்வெளி வீரர்கள் செயல்படுவதாக தெரிவித்துள்ளனர். ரஷ்யாவில் பயிற்சியை நிறைவு செய்த பின்னர், இந்தியாவில் மையத்தில் விண்வெளி வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ரவிச்சந்திரன் முத்துவேல் (தோழர் சே பீனிக்ஸ்) வாழ்த்துக்கள்
Rate this:
Cancel
Sampathkumar Sampath - Karur,இந்தியா
07-ஆக-202017:02:48 IST Report Abuse
Sampathkumar Sampath குட் லக் .....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X