பொது செய்தி

இந்தியா

மருத்துவ வசதி இல்லாத கிராமங்களில் கொரோனா தொற்று அதிகரிப்பு

Updated : ஆக 07, 2020 | Added : ஆக 07, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

புதுடில்லி: இந்தியாவில் உள்ள அதிகப்படியான மாநிலங்களில், பெருநகரங்களில் மட்டுமே மருத்துவ கட்டமைப்பு போதுமான அளவில் உள்ளது. சிறு நகரங்கள் மற்றும் கிராமங்களில் மருத்துவ வசதிகள் போதுமான அளவில் இல்லை. இந்நிலையில், மருத்துவக் கட்டமைப்பில் மிகவும் பின்தங்கியுள்ள சில மாநிலங்களில், கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக, கிராமப் புறங்களில் அதிகப்படியான கொரோனா பாதிப்பு பதிவாகி வருகிறது.



latest tamil news




மஹாராஷ்டிரா, குஜராத் மற்றும் மேற்குவங்கத்தில் பெருநகரங்களில் மட்டுமே கொரோனா நோய்த்தொற்று அதிகமாகப் பரவி இருக்கிறது. ஆனால், உத்திரப்பிரதேசம், பீகார், ஒடிசா மற்றும் ஆந்திராவில் கிராமப்புறங்களில் தான் கொரோனா பரவல் அதிகப்படியாக உள்ளது.

குறிப்பாக, உத்தர பிரதேசத்தில் கொரோனா பாதிப்பு, 27 சதவீதம் மட்டுமே நகரங்களில் பதிவாகியுள்ளது. மீதமுள்ள 73 சதவீதம் கிராமங்களில் பதிவாகியுள்ளது. இதேபோல், பீகார் மாநிலத்திலும் 27.8 சதவீதம் மட்டுமே நகரங்களில் பதிவாகியுள்ளது; அதிகப்படியான தொற்று கிராமங்களில் தான் பதிவாகியுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.


latest tamil news



கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கத் தேவையான படுக்கை வசதிகள் பீகாரில் இல்லை. மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், மிகக் குறைவான படுக்கை வசதிகள் உள்ள மாநிலமாக பீகார் உள்ளது. அங்கு கிராமங்களில் அதிக நோய்த்தொற்று இருப்பதால், பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ வசதிகள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. ஒடிசா, ஆந்திராவிலும் இதே நிலை நீடிக்கிறது.


latest tamil news



''ஒரு சில பகுதிகளில் மட்டுமே அதிக கொரோனா பாதிப்பு இருக்கிறது. மற்றப் பகுதிகளில் ஊரடங்கைத் தளர்த்துவது குறித்த நம்பிக்கையை இது எங்களுக்கு அளிக்கிறது. இதுவரை நகர்ப்புறப் பகுதிகள் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளன' என, கொரோனா தொற்றுக்கான மருத்துவ அவசரநிலை நிர்வாக திட்டத்துக்கு தலைமை வகிக்கும் வி.கே.பால் தெரிவித்திருந்தார். ஆனால் இந்தக் கூற்று நிச்சயமற்ற நிலைக்குள் நுழைந்திருக்கிறது. வெளி மாநிலங்களுக்கு வேலைக்குச் சென்ற புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பியதால், கிராமங்களில் மட்டுமின்றி பரவலாக தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளது,'' என, மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S. Narayanan - Chennai,இந்தியா
07-ஆக-202020:12:19 IST Report Abuse
S. Narayanan இது அந்தந்த மாநிலங்களுக்கு தெரியாதா.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X