அமெரிக்காவில் டிக்டாக், வீசாட் செயலிகளுக்கு தடை: டிரம்ப் அதிரடி உத்தரவு

Updated : ஆக 07, 2020 | Added : ஆக 07, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
Trump, Banning, TikTok, WeChat, US, America, டிரம்ப், டிக்டாக், வீசாட், செயலிகள், தடை, அமெரிக்கா

வாஷிங்டன்: சீன நிறுவனத்தின் டிக்டாக், வீசாட் ஆகிய செல்போன் செயலிகள் அமெரிக்காவின் பாதுகாப்பு மற்றும் பொருளதாார வளர்ச்சிக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகக் குறிப்பிட்டு தடை விதித்து அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி சீனாவின் டிக்டாக், வீசாட், ஹலோ உள்ளிட்ட சுமார் 106 செயலிகளுக்கு இந்தியா தடை விதித்திருந்தது. இந்தியாவின் இந்த செயலை அமெரிக்கா பாராட்டியது.

இந்நிலையில், டிக்டாக் உள்ளிட்ட சில சீன செயலிகளால் தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் காரணமாக அமெரிக்காவிலும் டிக்டாக்கிற்கு விரைவில் தடை விதிக்கப்படும் என அதிபர் டிரம்ப் அறிவித்திருந்தார். இந்நிலையில், சீன நிறுவனங்களின் செயலிகளான டிக்டாக், வீசாட் ஆகியவற்றை தடை விதித்து டிரம்ப் உத்தரவிட்டார். இது அடுத்த 45 நாட்களில் இருந்து நடைமுறைக்கு வரும் எனவும் தெரிவித்தார்.


latest tamil news


இது குறித்து டிரம்ப் பிறப்பித்த உத்தரவு: சீன நிறுவனங்கள் உருவாக்கிய செல்போன் செயலிகள் அமெரிக்காவில் பரந்து கிடக்கின்றன. இந்த செயலிகளால் தேசப் பாதுகாப்பு, வெளியுறவுக் கொள்கை, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஆகியவற்றுக்கு அச்சுறுத்தல் இருக்கிறது எனத் தெரியவந்துள்ளது. சீனாவின் பைட்டான்ஸ் நிறுவனம் உருவாக்கிய டிக்டாக் செயலி, அதைப் பயன்படுத்துவோரின் விவரங்களை தானாகவே அபகரித்துக்கொள்கிறது. அமெரிக்க மக்களின் தனிப்பட்ட விவரங்கள், சொத்து விவரங்கள் போன்றவற்றை செயலி மூலம் சீன கம்யூனிஸ்ட் கட்சி அறிந்து கொள்ள முடியும். இதன் மூலம் அமெரிக்க மக்களின், அதிகாரிகளின், ஒப்பந்ததாரர்களின் தனிப்பட்ட விவரங்களை அறியவும், அவர்களின் நடமாட்டதைத் கண்காணிக்கவும், மிரட்டவும் முடியும்.


latest tamil news


இந்த அச்சுறுத்தலால் டிக்டாக் செயலிக்கு தடைவிதித்து உத்தரவிடுகிறேன். இந்த தடை உத்தரவை அமல்படுத்த வர்த்தகத்துறை அமைச்சகத்துக்கு அதிகாரம் அளிக்கிறேன். அதேபோல சீனாவின் டென்சென்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனம் வெளியிட்ட வீசாட் சமூக வலைத்தளம், மற்றும் பணம் அனுப்பும் தளத்தையும் தடை செய்ய உத்தரவிட்டுள்ளேன். டிக்டாக், வீசாட் இரு செயலிகளும் பயன்பாட்டாளர்களின் விவரங்களை தானாகவே எடுத்துக்கொள்ளக் கூடியவை. அமெரிக்கர்கர்களின் தனிப்பட்ட விவரங்களை அறிய சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு உதவுபவை. இரு உத்தரவுகளும் அடுத்த 45 நாட்களில் இருந்து நடைமுறைக்குவரும். இவ்வாறு டிரம்ப் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Covaxin  (திமுக ஒழியும், தாமரை மலரும் பாருங்கடா) அடிச்சான் பாரு அப்பாய்ண்ட்மென்ட் ஆர்டர்...
Rate this:
Cancel
Chandramoulli - Mumbai,இந்தியா
07-ஆக-202016:58:33 IST Report Abuse
Chandramoulli நல்ல முடிவு . ஒவ்வொரு நாடும் சீனாவை பொருளாதார ரீதியில் நசுக்க வேண்டும். அப்போது தான் சப்பை மூக்கன் அடங்குவான்
Rate this:
Cancel
ராமதாசன் - chennai,இந்தியா
07-ஆக-202016:38:12 IST Report Abuse
ராமதாசன் இந்தியா தடை செய்த போது கம்பு சுற்றிய போலி போராளிகள் இப்போ என்ன சொல்ல போகிறார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X