'சமூக ஊடகங்கள் வெறுப்பைத் தூண்டுகின்றன': இளவரசர் ஹாரி குற்றச்சாட்டு

Updated : ஆக 07, 2020 | Added : ஆக 07, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement

வாஷிங்டன்: 'சமூக ஊடகங்கள் வெறுப்பை தூண்டுகின்றன. எனவே, அவற்றில் விளம்பரங்கள் கொடுப்பதை நிறுவனங்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும்' என, இங்கிலாந்து இளவரசர் ஹாரி வலியுறுத்தி உள்ளார்.latest tamil newsஇங்கிலாந்து அரச குடும்பத்தில் இருந்து கடந்த மார்ச் மாதம் விலகிய, இளவரசர் ஹாரி - மேகன் தம்பதி, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், அமெரிக்க வணிக இதழான 'பாஸ்ட் கம்பெனி'யில், 'சமூக ஊடகங்கள் எங்களைப் பிரிக்கின்றன. ஒன்றாக, நாங்கள் அதை மறுவடிவமைப்பு செய்து வருகிறோம்' என்ற தலைப்பிலான கட்டுரையில், தானும், தனது மனைவி மேகனும், இது குறித்து கடந்த சில வாரங்களாக வணிக நிறுவன தலைவர்கள் மற்றும் சந்தைப்படுத்தல் நிர்வாகிகளை அழைத்து பேசியதாக தெரிவித்துள்ளார். அந்த கட்டுரையில் ஹாரி மேலும் கூறியிருப்பதாவது:


latest tamil newsஆன்லைன் சமூகங்கள் வெறுப்பை விட இரக்கத்தினால் அதிகம் வரையறுக்கப்பட வேண்டும். தவறான தகவலுக்கு பதிலாக உண்மையையும்; அநீதி மற்றும் பயமுறுத்துவதற்கு பதிலாக சமத்துவத்தையும்; ஆயுதம் ஏந்துவதற்கு பதிலாக சுதந்திர பேச்சையும் கொண்டாட வேண்டும்.

ஆன்லைன் விளம்பரங்களை வாங்கும் நிறுவனங்களைப் பொறுத்தவரை, வெறுப்பு மற்றும் இனவெறி, தேசியவாதம் மற்றும் யூத எதிர்ப்பு, ஆபத்தான தவறான தகவல் மற்றும் வன்முறை மற்றும் மதவெறியை ஊக்குவிக்கும் ஆன்லைன் கலாச்சாரத்தை சந்தேகத்திற்கு இடமின்றி மறுப்பது முக்கியமான விஷயமாகும். நிறுவனங்கள் ஆன்லைன் தளங்களுக்கு நிதியளிப்பது மற்றும் ஆதரிக்கும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் எந்த ஒரு நிறுவனத்தின் பெயர்களையும் குறிப்பிடாமல், கருத்து தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மேகன், 'சில நேரங்களில் இளம் பெண்கள், மிகுந்த வலியை தரும் எதிர்மறை ஆன்லைன் உரையாடலை, நேர்மறையுடன் மூழ்கடிக்க வேண்டும்' எனக் கேட்டுகொண்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mindum vasantham - madurai,இந்தியா
07-ஆக-202020:48:18 IST Report Abuse
mindum vasantham neraya peru கண்டமேனிக்கு பேசுறானுங்க
Rate this:
Cancel
Kavi - Karur,இந்தியா
07-ஆக-202019:25:53 IST Report Abuse
Kavi மிகவும் சரியான கருத்து.
Rate this:
Cancel
thamodaran chinnasamy - chennai,இந்தியா
07-ஆக-202017:00:07 IST Report Abuse
thamodaran chinnasamy நேர்மையான குற்றச்சாட்டு , சமூக ஊடககங்கள் தான் பல்வேறு வெறுப்பை தங்களின் சுயலாபத்திற்காக மட்டுமே சார்ந்து செயல் படுகிறது. வேறுஒன்றும் சொல்வதற்கு இல்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X