பொது செய்தி

இந்தியா

தங்கத்தின் மதிப்பில் 90 சதவீத கடன்: ரிசர்வ் வங்கி உத்தரவு

Updated : ஆக 07, 2020 | Added : ஆக 07, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
தங்கம், கடன், ரிசர்வ் வங்கி, RBI, Reserve Bank, gold, loan, bank,

புதுடில்லி: தங்கத்தின் மதிப்பில் 90 சதவீதம் வரை கடன் அளிக்கலாம் என வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது.

இது தொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கை: விவசாயம் சாராத காரணங்களுக்காக, தங்க நகைகள் மற்றும் ஆபரணங்களுக்காக வழங்கப்படும் கடன் அளவை 75 சதவீதத்தில் இருந்து90 சதவீதமாக உயர்த்தப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்த சலுகை 2021 மார்ச் 31 வரை பயன்படுத்தலலாம். கொரோனா பாதிப்பில் இருந்து மீள்வதற்கு தொழில்முனைவோர் மற்றும் சிறு வணிகர்களுக்கு இந்த உத்தரவு உதவும் என ரிசர்வ் வங்கியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


latest tamil news


தற்போது, விவசாயம் சாராத காரணங்களுக்காக தங்க நகை மற்றும் ஆபரணங்களுக்கு, அவற்றின் மதிப்பில் 75 சதவீதம் வரை கடன் வழங்கப்பட்டு வருகிறது. தங்கத்தின் விலை, வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ள நிலையில், அவற்றின் மதிப்பில் வழங்கப்படும் கடன் அளவை ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது. இந்த ஆண்டு 40 சதவீதம் வரை விலை உயர்ந்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajan - Alloliya,இந்தியா
07-ஆக-202019:24:35 IST Report Abuse
Rajan இறகு ஒரு moorka தீயமுக அல்லக்கை சங்கீ ஒளியணும்னுது, அப்போ தானே ஹிந்துக்களை என்ன வேணா சொல்லலாம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X