காஷ்மீரில் பஞ்., தலைவரை கொன்ற பயங்கரவாதிகள்

Updated : ஆக 07, 2020 | Added : ஆக 07, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
காஷ்மீர், பஞ்சாயத்து தலைவர், பாதுகாப்புபடை, சுட்டுக்கொலை,

ஸ்ரீநகர்: காஷ்மீரின் தெற்கு பகுதியில் உள்ள காசிகுந்த் பகுதியில், கிராம பஞ்சாயத்து தலைவரான, பா.ஜ.,வை சேர்ந்த சஜத் அகமது கந்தேவை பயங்கரவாதிகள் சுட்டு கொன்றனர்.

கடந்த 48 மணி நேரத்தில் பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு உள்ளான 2 வது பஞ்சாயத்து தலைவர் இவர் ஆவார். கடந்த ஆண்டு நவ., முதல் பயங்கரவாதிகளின் தாக்குதலில் உயிரிழக்கும் 3வது பஞ்சாயத்து தலைவர் இவர் ஆவார்.
இது தொடர்பாக போலீசார் கூறுகையில், சுதந்திர தினத்தை முன்னிட்டு பஞ்சாயத்து தலைவர்கள் அனைவரும் ஒரே இடத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டனர். கொல்லப்பட்ட பஞ்சாயத்து தலைவர், இன்று காலை முகாமில் இருந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். வீட்டில் 20 மீ., தொலைவில் அவர் சென்ற போது, பயங்கரவாதிகள் சுட்டனர். இதில், படுகாயமடைந்த அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

கடந்த செவ்வாய் அன்று பா.ஜ.,வை சேர்ந்த ஆரிப் அஹமது என்ற பஞ்சாயத்து தலைவரை பயங்கரவாதிகள் சுட்டனர். இதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து, பா.ஜ.,வை சேர்ந்த 6 பஞ்சாயத்து உறுப்பினர்கள் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். இதனையடுத்து, பஞ்., தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என பா.ஜ., தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


latest tamil news



கடந்த 2018 ல் அக்., மற்றும் டிச., ல் தேர்தல் நடந்தது. இதில் வெற்றி பெற்றவர்களை, மாநிலத்தின் அடுத்த தலைவர்கள் எனவும், ஜனநாயகம் எனவும் பா.ஜ., கூறியிருந்தது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
08-ஆக-202005:02:01 IST Report Abuse
J.V. Iyer உடனே பாகிஸ்தானுக்கு உதை கொடுப்பார்களா?
Rate this:
Cancel
M.COM.N.K.K. - Vedaranyam ,இந்தியா
07-ஆக-202021:07:28 IST Report Abuse
M.COM.N.K.K. இன்னும் நாம் புரிந்து கொள்ளவே இல்லை என்று நினைக்கிறோம் பாகிஸ்தானின் சில பகுதிகளில் போராட்டம் நடந்தவண்ணம் உள்ளது அதை நாம் சரியாக பயன்படுத்தினாலே போதும் இந்த மாதிரி செயல்கள் கண்டிப்பாக நடக்காது இதை ஏன் இன்னும் நாம் தாமதிக்கிறோம் என்பது புரியாத புதிராகவே உள்ளது.பாகிஸ்தான் தீவிரவாதிகளை உருவாக்கும் பொழுது நாமும் அதுபோல்தான் செயல்படவேண்டும் இல்லையேல் இது போன்ற செயல்கள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கும் அடிக்கு அடி உதைக்கு உதய் இதை பின்பற்றினால்தான் நாம் நிம்மதியாக இருக்கலாம் இல்லையேல் கேள்விக்குறிதான்
Rate this:
Cancel
Janarthanan (குடும்ப ஆட்சிக்கு முடிவுரை எழுத வேண்டும்) சொந்த காஸ்மீரிகளை, அவர்கள் மதத்தினரை எதற்கு கொல்லுகிறார்கள் மூர்க்க கூட்டம்?? உங்க மதகோட்ப்பாடு இதை தான் கற்று தருகிறதா? நல்ல கொள்கைகள் சொந்த மக்களை சுட்டு கொல்லு?? எவனும் கண்டனம் தெரிவிக்க மாட்டானுங்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X