நிலச்சரிவில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம்: மோடி நிவாரணம்

Updated : ஆக 07, 2020 | Added : ஆக 07, 2020
Share
Advertisement
நிலச்சரிவு, உயிரிழப்பு, மோடி, நிவாரணம், இடுக்கி, கேரளா

இடுக்கி: கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறில் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவில் சிக்கி 80 பேர் மாயமானார்கள். 17 பேர் உயிரிழந்தனர். மண்ணில் புதைந்தவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மூணாறின் ராஜமாலா என்ற இடத்தில் பெட்டிமுடி டிவிஷனில் உள்ள டீ எஸ்டேட் பகுதியில், நேற்று (ஆக., 06) இரவு பெய்த கனமழை காரணமாக அதிகாலை 4:30 மணியளவில், நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 20க்கும் மேற்பட்ட வீடுகள் மண்ணில் புதைந்தன. அங்கு வசித்த 80 பேர் மாயமாகினர். அதில் இருந்து தப்பித்த சிலர், தகவல் தெரிவித்ததை தொடர்ந்து, 100க்கும் மேற்பட்டோர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். கனமழை காரணமாக, மீட்பு பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.


latest tamil news



தற்போது வரை 15 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், 17 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 9 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது. இரவு முழுவதும் மீட்புப்பணி நடைபெறும் என இடுக்கி மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்தார். டுவிட்டரில் அவர் பதிவிட்டுள்ளதாவது: கேரளாவில் இடுக்கி, ராஜமலை பகுதியில் நிலச்சரிவு காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டது. துயரமான இந்நேரத்தில், என் எண்ணங்கள் யாவும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வழங்க என்.டி.ஆர்.எஃப் படையினர் துரிதமாக செயல்பட்டு வருகின்றனர். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.


latest tamil news



நிவாரணம்:


நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். மேலும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கவும் பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X