சிறப்பு பகுதிகள்

கந்தனுக்கு அரோஹரா

வீடுகளில் கந்த சஷ்டி கவசம்: இந்து முன்னணி அழைப்பு

Added : ஆக 07, 2020
Share
Advertisement

திருப்பூர்: வீடுகள் தோறும் வரும், 9ம் தேதி கந்த சஷ்டி கவசம் படிக்க மக்களுக்கு இந்து முன்னணி அழைப்பு விடுத்துள்ளது.

இதுகுறித்து இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் விடுத்துள்ள அறிக்கை:: தமிழகத்தில் சமீப காலமாக, கடவுள் மறுப்பு என்ற பெயரில் இந்து கடவுள்களை இழிவாக பழிப்பவர் கூட்டம் ஒன்று தலைதுாக்கியது. மக்களின் ஒருமித்த ஆன்மீக உணர்வால், இன்று அந்த கூட்டம் கதிகலங்கி நிற்கிறது. இதுபோன்று, கடவுளை பழிப்பவர் கூட்டம், இனி ஒருபோதும் தலை துாக்க கூடாது. இனி எவருக்கும் அந்த எண்ணம் கூட வரக் கூடாது. எனவே, நமது பக்தியை, சக்தியை அவர்களுக்கு உணர்த்த வேண்டும். வரும் 9ம் தேதி(நாளை) நமது பலத்தை காட்டுவோம். அன்றைய தினம், அவரவர் வீட்டின் முன்பு கோலமிட வேண்டும். மாலை, 6:01 மணிக்கு வீட்டின் வாசலில் கந்தர் சஷ்டி கவசம் சொல்ல வேண்டும். வீட்டின் வாசலில் முருகன் படம் அல்லது வேல் வைத்து வேல் பூஜை செய்ய வேண்டும். லட்சக்கணக்கானவர்களை ஈடுபட வைப்பது, நம் ஒவ்வொருவரின் கடமையாகும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X