அரை நிர்வாண உடல் ஓவியம்: ஆபாசத்தை பரப்பும் செயல் என ரெஹானாவிற்கு ‛குட்டு'

Updated : ஆக 07, 2020 | Added : ஆக 07, 2020 | கருத்துகள் (18)
Share
Advertisement
SpreadingObscenity, SupremeCourt, RehanaFathima

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: குழந்தைகளை வைத்து தனது அரை நிர்வாண உடலில் ஓவியம் வரைந்ததாக குற்றம்சாட்டப்பட்ட ரெஹானாவின் முன் ஜாமின் மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது. மேலும், இது ஆபாசத்தை பரப்பும் செயல் எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

கடந்த 2018 செப்டம்பரில் அனைத்து வயது பெண்களும் சபரிமலை செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததை தொடர்ந்து, சமூக ஆர்வலர் ரெஹானா பாத்திமா சபரிமலை கோவிலுக்குள் செல்ல முயன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். இந்நிலையில், கடந்த ஜூன் 19ம் தேதி, தனது அரை நிர்வாண உடலில் தனது மகன் மற்றும் மகள் ஓவியம் வரைந்த ஒரு யூடியூப் வீடியோவை பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார். இது பெரும் சர்ச்சையான நிலையில், தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் ஜாமினில் வெளிவராத வகையில் அவர் மீது திருவல்லா போலீஸ் வழக்குப்பதிவு செய்தது.


latest tamil news


இந்நிலையில் தான் கைதாகாமல் இருக்க கேரள ஐகோர்ட்டில் ரெஹானா முன் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்தார். ஆனால் கேரள ஐகோர்ட் அவரது மனுவை தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டை நாடினார். இன்று விசாரணைக்கு வந்த அந்த வழக்கை சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், முன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தனர். மேலும், ‛இது ஆபாசத்தை பரப்பும் செயல். நீங்கள் இதை ஏன் செய்கிறீர்கள்? நீங்கள் ஒரு சமூக ஆர்வலராக இருக்கலாம். ஆனால் இது என்ன வகையான முட்டாள்தனம்? இது சமூகத்தில் மிகவும் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த செயலிலிருந்து வளர்ந்து வரும் குழந்தைகளுக்கு என்ன நன்மை கிடைக்கும்?,' என நீதிபதிகள் கேள்வியெழுப்பினர்.

Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வெற்றிக்கொடிகட்டு - - மதராஸ்:-),இந்தியா
08-ஆக-202011:38:04 IST Report Abuse
வெற்றிக்கொடிகட்டு "இன்று விசாரணைக்கு வந்த அந்த வழக்கை சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், முன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தனர்." ஓரினச்சேர்க்கை, கள்ளத்தொடர்பு இதெல்லாம் தப்பில்லன்னு சொன்ன அதே நீதிமன்றம் இவளைக் கண்டிச்சிருக்கு
Rate this:
Cancel
konanki - Chennai,இந்தியா
08-ஆக-202011:28:27 IST Report Abuse
konanki இவருக்கு பெயில் மறுக்கப்பட்டதை கண்டித்து தமிழகத்தில் சுடலு , குருமா , சைக்கோ , டேனியல் , செபாஸ்டியன் , ஓசி சோறு நாரமணி , பியூஸ் போனவர் , தகர முத்து , மிருக புத்ரன், கரி கொளம்பு பேராசிரியர் , உண்டி குலுக்கிகள் மரீனா சமாதியில் போராட்டம், ஆர்பாட்டம்
Rate this:
Cancel
konanki - Chennai,இந்தியா
08-ஆக-202011:24:28 IST Report Abuse
konanki கேரளா அரசாங்க சேட்டன்களின் நெருங்கிய நண்பர் இவர். ஜாமின் மறுக்க பட்டாலும் ஜெயிலில் சகல சௌகரிக்கயடோடு ஆடம்பர வாழ்கை வாழ்வார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X