பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் ஒரே நாளில் 6,488 பேர் கொரோனாவிலிருந்து மீண்டனர்

Updated : ஆக 07, 2020 | Added : ஆக 07, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில் இன்று (ஆக.,07) ஒரே நாளில் கொரோனா பாதிக்கப்பட்ட 6,488 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் மொத்தம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 2.27 லட்சத்தை கடந்தது.தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் இன்று 5,880 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதில், 5,856 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். வெளிமாநிலம், வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் 24 பேர். இதனால்
CoronaVirus, CoronaCases, Tamilnadu, Discharge, TN_CoronaUpdates, TN_Health, TN_FightsCorona, Corona, TNGovt, Covid-19, PositiveCases, தமிழகம், கொரோனா, வைரஸ், பாதிப்பு, உயிரிழப்பு, டிஸ்சார்ஜ்

சென்னை: தமிழகத்தில் இன்று (ஆக.,07) ஒரே நாளில் கொரோனா பாதிக்கப்பட்ட 6,488 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் மொத்தம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 2.27 லட்சத்தை கடந்தது.

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் இன்று 5,880 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதில், 5,856 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். வெளிமாநிலம், வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் 24 பேர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,85,024 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 126 ஆய்வகங்கள் (அரசு-61 மற்றும் தனியார்-65) மூலமாக, இன்று மட்டும் 67,352 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை 30 லட்சத்து 88 ஆயிரத்து 066 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.


latest tamil news



இன்று கொரோனா உறுதியானவர்களில், 3,445 பேர் ஆண்கள், 2,435 பேர் பெண்கள். கொரோனா பாதித்த, ஆண்களின் மொத்த எண்ணிக்கை 1,72,334 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 1,12,663 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 27 ஆகவும் உள்ளது. இன்று மட்டும் 6,488 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 27 ஆயிரத்து 575 ஆக உள்ளது.

இன்று மட்டும் கொரோனா பாதித்த 119 பேர் உயிரிழந்தனர். அதில், 41 பேர் தனியார் மருத்துவமனையிலும், 78 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 4,690 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 52,759 பேர் சிகிச்சையில் உள்ளனர். 12 வயது வரை உள்ள சிறுவர், சிறுமிகள் என 14 ஆயிரத்து 053 பேர், 13 முதல் 60 வரை உள்ளவர்கள் 2 லட்சத்து 35 ஆயிரத்து 184 பேரும், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 35 ஆயிரத்து 787 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ram -  ( Posted via: Dinamalar Android App )
08-ஆக-202017:34:32 IST Report Abuse
Ram இதுபோன்ற நேர்மறை செய்திகளை வெளியிட 2 மாதத்திற்கு முன் நாம் யோசனை கொடுத்தோம். பரவாயில்லை, இப்போதாவது கிடைத்ததே.
Rate this:
Cancel
Chandramoulli - Mumbai,இந்தியா
08-ஆக-202008:07:30 IST Report Abuse
Chandramoulli தமிழகத்தின் ஆட்சியில் மழை வளம் நன்றாக உள்ளது. வருண பகவான் கருணை மிக அருமை. விவசாயம் பெருகட்டும். மக்கள் வாழ்வாதாரம் செழிக்கட்டும்
Rate this:
Cancel
08-ஆக-202007:48:19 IST Report Abuse
Vadivelu Shanmugam முக கவசம் அணிவதும் சமூக இடைவெளி கடைப்பிடிப்பதும் கூட்டமாக நின்று பேசாதிருப்பதுவும் கடைப்பிடித்தால் கொரானா தாக்குமா தாக்காதா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X