பொது செய்தி

தமிழ்நாடு

தமிழக பொறியியல் கல்லூரிகளுக்கு ஆக.,12 முதல் ஆன்லைன் வகுப்புகள் துவக்கம்

Updated : ஆக 07, 2020 | Added : ஆக 07, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

சென்னை: தமிழகத்தில் அண்ணா பல்கலை கீழ் உள்ள பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு வரும் ஆக.,12 முதல் ஆன்லைன் வகுப்புகள் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



latest tamil news



கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் முதல் பொறியியல் கல்லூரிகள் மூடப்பட்டு இருந்தன. இந்நிலையில் மாணவர்களின் எதிர்கால கல்வி பாதிக்கப்படாத வகையில் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்த அரசு முடிவெடுத்துள்ளது.

அக்.26 வரை வாரத்தில் 6 நாட்கள் வகுப்புகள் நடைபெறும் என அண்ணா பல்கலை அறிவித்துள்ளது. நடப்பு பருவத்திற்கான தேர்வு அக்.,28 முதல் நவ.,9 வரை நடக்கும் என்றும் அடுத்த பருவத்திற்கான வகுப்புகள் டிச.,14 முதல் துவங்கும் என அண்ணா பல்கலை அறிவித்துள்ளது. இதனால் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் ஆன்லைன் வகுப்புகளுக்கு தயாராக வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது. தனியார் பொறியியல் கல்லூரிகள் ஆன்லைன் வகுப்புகள் மற்றும் தேர்வு தொடர்பாக அவை முடிவெடுத்துக் கொள்ளலாம் என அண்ணா பல்கலை மேலும் தெரிவித்துள்ளது.


latest tamil news


முன்னதாக மாநில உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், தமிழகத்திலுள்ள பல்கலை துணை வேந்தர்களுடன் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டார். அதில் பாடங்கள் குறைப்பு, ரத்து செய்யப்பட்ட தேர்வுகளுக்கு மதிப்பெண் வழங்கல் போன்ற விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டன. இதனிடையே தமிழகத்திலுள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இரண்டு ஷிப்டு முறையை நீக்கி அரசு உத்தரவிட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
07-ஆக-202023:13:14 IST Report Abuse
மலரின் மகள் அண்ணா பல்கலையின் தரம் என்றோ தாழ்ந்து விட்டது. அனைத்து பொறியியல் கலோரிகளையும் அண்ணா பல்கலை வசம் இணைத்தது வரலாற்று பிழை எனலாம். வெறும் நான்கே நான்கு கல்லூரிகளை மட்டுமே வைத்து நடத்திய அதுவும் இணைப்பு கல்லூரிகள் அல்ல, அனுபவமே இல்லாத பல்கலையின் கட்டுப்பாட்டில் அனைத்து பொறியியல் கல்லூரிகளையும் கொணர்ந்து அதற்கு தகுந்தபடி துணைவேந்தர் உட்பட பல்வேறு பகுதிகளுக்கு மற்ற பல்கலையில் இருந்து தகுதியானவர்களை கூட ஏற்காமல் இவர்கள் பல்கலை மூலமாகவே அனைத்தையும் செய்தது முதல் அனைத்தும் சரியாக இல்லை. இரண்டாம் வருடத்தில் இருந்து பாலிடெக்னீக் முடித்த மாணவர்களுடன் சேர்க்கையை வைத்து கொண்டு ஒவ்வொரு வகுப்பிலும் 66 மாணாக்கர்களை வைத்து கொண்டு எப்படி ஒன்லைன் பாடம் நடத்துவது. அதற்கான இணையவேகம் ஆசிரியரின் லேப்டாப் மற்றும் நெட்டில் இருக்கிறதா? அதிவேக லப்டப்பை ஆசிரியர் வைத்துள்ளாரா? மாணவர்களிடம் கூட சிறந்த திறனுள்ள லேப்டாப் இருக்கிறதா என்ன? எல்லோரும் இலவசமாக கிடைக்கும் ஜூம் ஆப் மூலமாக பாடம் நடத்தவேண்டிய நிலை. அதில் அதிக பட்சம் நாற்பது நிமிடத்திற்கு மேல் வகுப்புக்கள் தொடர முடியாது. பொரியல் வகுப்புக்கள் ஐம்பது நிமிடங்கள் செல்கின்றன. அடுத்ததாக ஓய்வினிறி இடைவிடாது வகுப்புக்கள் இருக்கும் வகுப்பறையில் பொருளியியல் பாடத்தை பொறுத்தவரையில். அதற்கு ஒவ்வொரு நாளைக்கும் குறைந்தது ஐந்து ஜி பி டாட்டா தேவை படும் ஒவ்வொருவருக்கும். ஓரளவு வேகத்தில் அதிக பட்சமாக மூன்று ஜி பி டாட்டா ஐந்நூறு ருபாய் செலவில் பெறலாம், அதற்கு மேலாக கூடுதலாக செலவு செய்து பெறவேண்டும். அடுத்து லேப்டாப் பட்டேரிகள் கூடுதல் நேரத்திற்கு பயனுரா. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்சார பிரச்சினைவேறு, இந்த லட்சணத்தில் ஆறு நாட்கள் பாடம் என்றால் மாணவர்கள் படிப்பது எப்போது. அதுவும் வரும் டிசம்பர் இல் தேர்வு வேறு உண்டாம். தற்போதுள்ள நிலையில் கடந்த நான்கு மாதங்களாக வெறும் முப்பது சதவீதத்திலிருந்து அதிக பட்சமாக ஐம்பது சதவீத சம்பளம் தான் ஆசிரியர்களுக்கு தனியார் கல்லூரிகள் வழங்கு கின்றன. ஒட்டு மொத்த கொங்கு மண்டலத்திலும் விசாரித்து பாருங்கள் உண்மை புரியும். ஆசிரியர்கள் குடும்பத்தை நடத்தி செல்லவே பணம் போதாதா நிலையில் எப்படி அவர்கள் இப்போது புதிதாக ஒரு சிறந்த லேப்டாப் வாங்க முடியும்? மேலும் ஒரு வாரத்தில் எப்படி அவர்களால் புதிய முறைக்கு தயாராக முடியும். இன்னமும் எந்த ஆசிரியர் எந்த பாடம் எடுப்பது என்று கூட முடிவு செய்திருக்க மாட்டார்கள் குறிப்பாக தனியார் கலோரிகளில். பல கல்லூரிகளில் வருடாந்திர வெகேஷன் விடுமுறைக்கு முன்பு ஆசிரியர்களை வேலையிலிருந்து நீக்கி விட்டதாகவும், அடுத்த வருடம் கல்லூரி திறந்த பின்பு மறுபடியும் சேர்த்து கொள்வதாகவும் தான் ஏற்பாடு. வேகாசன் ஊதியம் தருவதை தவிர்ப்பதற்காக. பலர் இந்த நேரத்தில் தான் ஒரு கல்லூரியில் இருந்து மாரு கல்லூரிக்கு மாறுவர், குறிப்பாக கொண்டு மணடலத்து தனியார் கல்லூரிகளில். கலோரி திறந்து ஒரு வாரம் கழித்தே ஆசிரியர்கள் பணியில் புதிதாக சேரவேண்டும் என்பது அங்குள்ள நிலை. சம்பளத்தை எவ்வளவுக்கு எவ்வளவு தவிர்க்கவும் குறைக்கவும் முடியுமோ அதை செய்யும் யுக்தி அது. பல்கலை எதையும் கண்டு கொள்ளாது. தனியார் கல்லூரிகளுக்கு ஆதரவாக செயல்படும். ஆசிரியர்களின் அனைத்து சான்றிதழ்களையும் கல்லூரிகள் வாங்கி வைத்து கொள்வதை நியாயபடுத்தும் பல்கலை அல்லவா. பழைய கல்வி முறை முழுதும் மறைந்து புதிய தேசிய கல்வி கொள்கையில் அண்ணா பல்கலை போன்ற நிரைய பெட்டிகளை இழுத்து செல்லும் நீராவி எஞ்சின் பல்கலை ரயில் வண்டி மாற்றம் பெரும். புதிய தேசிய கல்வி கொள்கை முறையால் நமது கல்வியின் பல்வேறு தவறுகள் திருத்தப்படும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X