விமான விபத்தில் 173 பேர் காயம்; 15 பேர் கவலைக்கிடம்: மலப்புரம் எஸ்.பி

Updated : ஆக 07, 2020 | Added : ஆக 07, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

கோழிக்கோடு: கேரள விமான விபத்தில், விமானி டி.எம்.சாதே, ஒரு குழந்தை உள்ளிட்ட 15 பேர் உயிரிழந்ததாகவும், 123 பேர் காயமடைந்ததாகவும், இதில் 15 பேர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும் மலப்புரம் எஸ்.பி தெரிவித்துள்ளார்.



latest tamil news



துபாயிலிருந்து 191 பேருடன் வந்த 'ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்' விமானம், கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்தில், தரையிறங்கும் போது விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் விமானம் இரண்டாக பிளந்து சிதைந்தது. விமானத்தில் 174 பயணிகள், 10 குழந்தைகள், 5 பணிப்பெண்கள், 2 விமானிகள் பயணித்துள்ளனர்.



latest tamil news


விமானத்தில் பயணித்த விமானி சாதே, ஒரு குழந்தை உட்பட 15 பேர் பலியானதாக மலப்புரம் எஸ்.பி., தகவல் தெரிவித்துள்ளார். 123 பேர் காயமடைந்ததாகவும், இதில் 15 பேர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


latest tamil news




தமிழகத்தை சேர்ந்தவர்கள்:


விபத்துக்குள்ளான விமானத்தில் தமிழகத்தை சேர்ந்த முகமது ஜிடான் பைசல் பாபு, ஷனிஜா பைசல்பாபு, ஷாலா ஷாஜகான் ஆகியோர் பயணித்ததாக, ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தல புராணம் - மதுரை,இந்தியா
08-ஆக-202006:33:01 IST Report Abuse
தல புராணம் கோவில் கட்டுறதுலே காட்டின தீவிரத்தை, அதானிக்கு விமானநிலைய பராமரிப்பு ஒப்பந்தங்களை தாரை வார்க்கும் ஆர்வத்தில், ராஜஸ்தான் மாநில ஆட்சியை கவிழ்க்க செலவிடும் நேரத்தில் சிறிதளவு DGCA செய்ய சொன்ன மாற்றங்களை கவனித்து கோழிக்கோடு விமான நிலையத்தில் காலாகாலத்தில் செய்திருந்தால், இந்த விபத்தை நிச்சயம் தவிர்த்திருக்க முடியும்.. ராமர் காப்பாத்தலை..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X