கோழிக்கோடு: கேரள விமான விபத்தில், விமானி டி.எம்.சாதே, ஒரு குழந்தை உள்ளிட்ட 15 பேர் உயிரிழந்ததாகவும், 123 பேர் காயமடைந்ததாகவும், இதில் 15 பேர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும் மலப்புரம் எஸ்.பி தெரிவித்துள்ளார்.

துபாயிலிருந்து 191 பேருடன் வந்த 'ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்' விமானம், கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்தில், தரையிறங்கும் போது விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் விமானம் இரண்டாக பிளந்து சிதைந்தது. விமானத்தில் 174 பயணிகள், 10 குழந்தைகள், 5 பணிப்பெண்கள், 2 விமானிகள் பயணித்துள்ளனர்.

விமானத்தில் பயணித்த விமானி சாதே, ஒரு குழந்தை உட்பட 15 பேர் பலியானதாக மலப்புரம் எஸ்.பி., தகவல் தெரிவித்துள்ளார். 123 பேர் காயமடைந்ததாகவும், இதில் 15 பேர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தை சேர்ந்தவர்கள்:
விபத்துக்குள்ளான விமானத்தில் தமிழகத்தை சேர்ந்த முகமது ஜிடான் பைசல் பாபு, ஷனிஜா பைசல்பாபு, ஷாலா ஷாஜகான் ஆகியோர் பயணித்ததாக, ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE