பயிற்சி விமானங்கள் வாங்கியதில் ஊழல்; 14 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை

Updated : ஆக 09, 2020 | Added : ஆக 07, 2020 | கருத்துகள் (12)
Share
Advertisement
Pilatus aircraft scam, ED, raids, பயிற்சி விமானங்கள், ஊழல், அமலாக்கத் துறை, சோதனை

புதுடில்லி; விமான படைக்கு, பயிற்சி விமானங்கள் வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்துள்ளதாக கூறப்பட்ட புகாரின் அடிப்படையில், மூன்று மாநிலங்களில், 14 இடங்களில், அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.


லஞ்சம்


கடந்த, 2009ல், பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான, காங்., ஆட்சி நடந்தபோது, விமான படைக்கு, 75 பயிற்சி விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்திற்கு ஏலம் நடந்தது. இதில், 2,895 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்தை, சுவிட்சர்லாந்தின், 'பிலாட்டஸ் ஏர்கிராப்ட் லிமிடட்' என்ற நிறுவனம், ஏலத்தில் எடுத்தது. அதற்கான ஒப்பந்தம், 2012ல் கையெழுத்தானது.

இதையடுத்து, அந்த ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. அதில், 'ஆப்செட் இந்தியா சொல்யூஷன்' என்ற நிறுவனத்தின் அதிபர் சஞ்சய் பண்டாரிக்கு தொடர்பு இருப்பதும், அந்த ஒப்பந்தத்திற்காக, பிலாட்டஸ் நிறுவனத்திடம் இருந்து, 350 கோடி ரூபாயை, அவர் லஞ்சமாக பெற்றுள்ளதும் தெரியவந்தது. இந்த விவகாரத்தில், கடந்த ஆண்டு ஜூன் மாதம், சி.பி.ஐ., வழக்குப் பதிவு செய்தது.


வழக்குப் பதிவு


இதில், சஞ்சய் பண்டாரி, ராணுவ அமைச்சகம் மற்றும் இந்திய விமான படையின் சில அதிகாரிகள், பிலாட்டஸ் நிறுவனம் உள்ளிட்டோரின் பெயர்களும் சேர்க்கப்பட்டன. முறைகேடாக சொத்துக்கள் வைத்துள்ள புகாரில், சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறை, ஏற்கனவே, ஆயுத வியாபாரியான பண்டாரி மீது, தனித்தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றன.

இந்நிலையில், விமான ஒப்பந்த வழக்கில், பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ், இவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ள அமலாக்கத் துறை, அதில் தொடர்பு உள்ளோருக்குச் சொந்தமான இடங்களில், நேற்று அதிரடி சோதனையில் ஈடுபட்டது. டில்லி, குருகிராம் மற்றும் சூரத்தில் உள்ள, 14 இடங்களில், அமலாக்கத் துறை அதிகாரிகள், சோதனையில் ஈடுபட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

Advertisement
வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Indhuindian - Chennai,இந்தியா
09-ஆக-202018:56:55 IST Report Abuse
Indhuindian பிரிக்க முடியாதது - காங்கிரஸும் உஷலும் பிறிந்தே இருப்பது - காங்கிரஸும் நேர்மையும் சேரமுடியாதது - காங்கிரஸும் எதிர் காட்சிதலைவர்களை ஏசாமல் இருப்பதும் சேர்ந்தே இருப்பது - காங்கிரஸும் ஒரு குடும்பத்துக்கு அடிமைத்தனமும்
Rate this:
Cancel
08-ஆக-202014:48:51 IST Report Abuse
நக்கல் பப்பு இதில் மோடியை குறை சொல்லலாம் என்று பார்த்தால் இது நடந்தது 2009ம் ஆண்டு... போற போக்குல காங்கிரஸ், கூட்டணிகள் அடித்த கொள்ளையை விசாரிக்க தனி அமலாக்கத்துறை வேண்டும் போல...
Rate this:
Cancel
Balasubramanian Ramanathan - vadakupatti,இந்தியா
08-ஆக-202011:47:06 IST Report Abuse
Balasubramanian Ramanathan எவர்ஒருவரும் எத்தனை முயன்றாலும் மன்மோகன் சிங்கை இயக்கிய அந்த சாவியின் பெயரை, திறமையை எந்த காலத்திலும் அழிக்கமுடியாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X