காங்., - சீன ஒப்பந்தம் கையெழுத்து: மனுவை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்

Updated : ஆக 09, 2020 | Added : ஆக 07, 2020 | கருத்துகள் (15)
Share
Advertisement
Congress, China, Supreme Court, SC, காங்கிரஸ், சீனா, ஒப்பந்தம், உச்ச நீதிமன்றம்

புதுடில்லி: 'காங்கிரஸ் கட்சிக்கும் - சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும், 2008ல் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தம் பற்றி, சி.பி.ஐ., அல்லது என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு விசாரிக்க உத்தரவிட வேண்டும்' என கோரி தாக்கல் செய்த பொது நல மனுவை, உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.


மனு தாக்கல்


கடந்த ஜூன், 15ம்தேதி, லடாக் எல்லையில், சீன ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இந்த விவகாரத்தில், காங்கிரஸ், மத்திய அரசை கடுமையாக விமர்சித்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், பா.ஜ., தலைவர் நட்டா, '2008ல், சீனாவைஆளும் சீன கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ் கட்சியே இடையே, புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது' என, குற்றம்சாட்டினார்.

இதை, காங்கிரஸ் மறுக்கவும் இல்லை; ஒப்புக் கொள்ளவும் இல்லை. இதையடுத்து, இந்த ஒப்பந்தம் பற்றி, சி.பி.ஐ., அல்லது என்.ஐ.ஏ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கோரி, டில்லியை சேர்ந்த வழக்கறிஞர் எஸ்.எஸ்.ஜா, கோவாவை சேர்ந்த, 'கோவா குரோனிகல்' என்ற செய்தி இணையளத்தின் ஆசிரியர் சாவியோ ரோட்ரிகஸ் ஆகியோர், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனு, தலைமை நீதிபதி பாப்டே தலைமையிலான அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் மகேஷ் ஜெத்மலானி கூறியதாவது: சீனாவில் உள்ள ஒரே கட்சி, சீன கம்யூனிஸ்ட் கட்சி. சீன அரசுக்கு, கம்யூ. கட்சிக்கும் வித்தியாசமில்லை.


ஒப்பந்தம்


அந்த கட்சியுடன், கடந்த, 2008ல் கையெழுத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் பற்றி, காங்கிரஸ் இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை. இந்த ஒப்பந்தம், எதற்காக கையெழுத்தானது என்பது பற்றி விசாரிக்க வேண்டும். மத்தியில் கூட்டணி ஆட்சிக்கு தலைமை வகித்து வந்த காங்கிரஸ், இந்த ஒப்பந்தத்தில் இடம் பெற்றுள்ள எந்த விபரங்களையும், தெரிவிக்காமல் மறைத்துள்ளது, சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

சீன தலைநகர் பீஜிங்கில், காங்கிரஸ் தலைவரும், மத்தியில் ஆட்சி செய்த, ஐ.மு., கூட்டணியின் தலைவருமான சோனியா முன்னிலையில், இந்த ஒப்பந்தத்தில் காங்கிரஸ் சார்பில் ராகுல் கையெழுத்திட்டுள்ளார். இந்த ஒப்பந்தம் கையெழுத்தான பின், 2013ம் ஆண்டுவரை, 600க்கும் அதிகமான முறை, சீன ராணுவம், இந்திய எல்லையில் ஊடுருவியுள்ளது.

தகவல் அறியும் உரிமை சட்டத்தை கொண்டு வந்த காங்கிரஸ், இந்த ஒப்பந்தம் பற்றி எதுவும் தெரிவிக்காதது ஏன்... அதனால், இந்த ஒப்பந்தம் பற்றி, முழுமையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு, ஜெத்மலானி கூறினார்.

இதன் பின், நீதிபதிகள் கூறியதாவது: ஒரு அரசியல் கட்சி, சீன அரசுடன் ஒப்பபந்தம் செய்துகொள்ள முடியுமா... இது பற்றி, சட்டத்தில் எதுவும் கூறப்படவில்லை. நாங்கள் கேட்டதும் இல்லை. வாபஸ்மேலும், இந்த ஒப்பந்தம் பற்றி சி.பி.ஐ,. அல்லது என்.ஐ.ஏ., விசாரணை கோரி, மனுதாரர்கள், முதலில் உயர் நீதிமன்றத்தை அணுகாதது ஏன்?

நாட்டின் பாதுகாப்பு சம்பந்தப்பட்டது என்றாலும், உயர் நீதிமன்றத்தை தான், முதலில் அணுகியிருக்க வேண்டும். மனுவை மனுதாரர்கள் வாபஸ் பெற கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு, நீதிபதிகள் கூறினார். இதையடுத்து, மனுவை மனுதாரர்கள் சார்பில், ராம்ஜெத்மலானி வாபஸ் பெற்றார்.

ஒப்பந்தம் பற்றி உச்ச நீதிமன்றம் தெரிவித்த கருத்துகள் பற்றி, பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கூறியதாவது:சீ ன அரசுடன், காங்கிரஸ் செய்த ஒப்பந்தம் பற்றி, உச்ச நீதிமன்றமே அதிர்ச்சி தெரிவித்துள்ளது.இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட, சோனியாவும், அவரது மகன் ராகுலும் தான், இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும்.

ராஜிவ் அறகட்டளைக்கு நிதி பெறுவதற்காகவும், இந்திய சந்தையை சீன நிறுவனங்களுக்கு திறந்து விடுவதற்காகவும், இந்த ஒப்பந்தம் கையெழுத்தானதை, இருவரும் ஒப்புக் கொள்வரா?இவ்வாறு, நட்டா கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Madhusoodhana Ramachandran - Chennai,இந்தியா
08-ஆக-202019:37:15 IST Report Abuse
Madhusoodhana Ramachandran மகாபலிபுரம் நம்நாட்டில் குடிமக்கள் முன்னிலையில் நடந்தது. திருட்டு தனமாக நடக்க வில்லை. இதில் ஒருஒப்பந்தமும் கையொப்பம் செய்வ வில்லை. ஒரு நன் மடிப்பிற்க்காகக் இரு நாடுகள் தலைவர்கள் சந்திப்பு. மாற்று டூரிஸ்ட் டெவெலப்மெண்ட்டிற்க்காக.
Rate this:
Cancel
Amirthalingam Shanmugam - Trichy,இந்தியா
08-ஆக-202013:15:45 IST Report Abuse
Amirthalingam Shanmugam ஒரு கட்சி (ஆட்சியில் நிலையில்லாதது , கூட்டணி ஆட்சி நடக்கும் பொது ) அண்டை நாட்டோடு அல்லது கட்சியுடனோ மர்மமான புரிந்துணர்வு ஒப்பந்தம் போடுவது என்பது நாட்டின் இறையாண்மையை கேள்விக்கும் மற்றும் கேலிக்கும் உண்டாகும் என்பதை இதுவரைக்கும் அறியாத அறிவுஜீவிகள் நாட்டில் இருக்கிறார்கள் ,நாட்டையும் ஆண்டு கொண்டியிருக்கிறார்கள் என்பது ,ஒவ்வரு இந்திய குடிமகனும் தலைகுனிந்து வெட்கப்படவேண்டிய விஷயம்.
Rate this:
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
08-ஆக-202011:21:07 IST Report Abuse
vbs manian மகாபலிபுரத்தில் இந்தியா பிரதமரும் சீனாவின் அதிபரும் சந்தித்தார்கள். இரண்டு கட்சிகள் சந்திக்கவில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X