காலையில் நிலச்சரிவு; இரவில் விமான விபத்து; சோகத்தில் கேரள மக்கள்

Updated : ஆக 07, 2020 | Added : ஆக 07, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் மூணாறில் இன்று காலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் 17 பேர் பலியாகினர். இந்நிலையில், அம்மாநில மக்களுக்கு மேலும் கவலை அளிக்கும் வகையில், இரவில் விமான விபத்து நிகழ்ந்துள்ளது. இவ்விபத்தில் குழந்தை உட்பட 11 பேர் பலியாகி உள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.கேரளாவில் பெய்து வரும் கனமழையால் இடுக்கி ராஜமலையில், நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 17 பேர்
Air India Express, aircraft, overshooting, runway, Air India, flight, passengers, Dubai, Kozhikode

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் மூணாறில் இன்று காலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் 17 பேர் பலியாகினர். இந்நிலையில், அம்மாநில மக்களுக்கு மேலும் கவலை அளிக்கும் வகையில், இரவில் விமான விபத்து நிகழ்ந்துள்ளது. இவ்விபத்தில் குழந்தை உட்பட 11 பேர் பலியாகி உள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

கேரளாவில் பெய்து வரும் கனமழையால் இடுக்கி ராஜமலையில், நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 17 பேர் பலியாகி உள்ளனர். 80 பேர் மாயமாகி உள்ளதால், இதில் பலர் உயிரிழந்திருக்க கூடும் என அஞ்சப்படுகிறது. இதில் 50க்கும் மேற்பட்ட தமிழர்களும் மாயமாகி உள்ளனர். இது கேரள மக்களுக்கு சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


latest tamil news



காலையில் இத்துயர சம்பவம் நடந்த நிலையில், மாலையில், கோழிக்கோடில் விமான விபத்து ஏற்பட்டது. துபாயிலிருந்து 191 பயணிகளுடன் திரும்பிய விமானம், கோழிக்கோடு விமான நிலையத்தில் தரையிறங்கிய போது, ஓடுதளத்தில் மோதி இரண்டாக பிளந்தது. இதில் விமானி, ஒரு குழந்தை உள்ளிட்ட 15 பேர் பலியாகினர். பலர் கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. ஒரே நாளில் கேரளாவில் நடந்த இரு துயர சம்பவங்களால், அம்மாநில மக்கள் சோகத்தில் மூழ்கி உள்ளனர்.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jayvee - chennai,இந்தியா
08-ஆக-202016:07:22 IST Report Abuse
Jayvee பீனாய் விஜயன் போன்றவர்கள் ஆட்சியில் இருந்தால் இதுதான் நடக்கும்.. சாத்தானின் பூமியாக மாறிய கேரளம்.. கிருத்துவம், துலுக்கம் மற்றும் கம்யூனிசம் இவை அனைத்தும் ஷைத்தான்களின் மார்க்கம்
Rate this:
Cancel
Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா
08-ஆக-202007:37:14 IST Report Abuse
Thiagarajan Kodandaraman முதல்வரின் அட்டூழியம் கடவுளின் கோபம்
Rate this:
Cancel
தமிழன்..சேரநாடு இந்த சங்கிகளுக்கு எதுலதா அரசியல் பேசோனும்னு விவஸ்தையே இல்லை..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X