திருவனந்தபுரம்: கேரள மாநிலம் மூணாறில் இன்று காலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் 17 பேர் பலியாகினர். இந்நிலையில், அம்மாநில மக்களுக்கு மேலும் கவலை அளிக்கும் வகையில், இரவில் விமான விபத்து நிகழ்ந்துள்ளது. இவ்விபத்தில் குழந்தை உட்பட 11 பேர் பலியாகி உள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
கேரளாவில் பெய்து வரும் கனமழையால் இடுக்கி ராஜமலையில், நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 17 பேர் பலியாகி உள்ளனர். 80 பேர் மாயமாகி உள்ளதால், இதில் பலர் உயிரிழந்திருக்க கூடும் என அஞ்சப்படுகிறது. இதில் 50க்கும் மேற்பட்ட தமிழர்களும் மாயமாகி உள்ளனர். இது கேரள மக்களுக்கு சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

காலையில் இத்துயர சம்பவம் நடந்த நிலையில், மாலையில், கோழிக்கோடில் விமான விபத்து ஏற்பட்டது. துபாயிலிருந்து 191 பயணிகளுடன் திரும்பிய விமானம், கோழிக்கோடு விமான நிலையத்தில் தரையிறங்கிய போது, ஓடுதளத்தில் மோதி இரண்டாக பிளந்தது. இதில் விமானி, ஒரு குழந்தை உள்ளிட்ட 15 பேர் பலியாகினர். பலர் கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. ஒரே நாளில் கேரளாவில் நடந்த இரு துயர சம்பவங்களால், அம்மாநில மக்கள் சோகத்தில் மூழ்கி உள்ளனர்.

தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE