புதிய இந்தியாவுக்கான மிகச் சிறந்த அடித்தளம்: கல்வி கொள்கை குறித்து பிரதமர் பெருமிதம்!

Updated : ஆக 09, 2020 | Added : ஆக 07, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement
NEP 2020, PM, Modi, NEP, பிரதமர், மோடி, புதிய கல்வி கொள்கை

புதுடில்லி: ''புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தேசிய கல்வி கொள்கை, புதிய இந்தியாவை அமைப்பதற்கான மிகச் சிறந்த அடித்தளமாக இருக்கும்; இதை நடைமுறைப்படுத்துவதில் உறுதியாக இருக்கிறேன்,'' என, பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

நம் நாட்டில், 34 ஆண்டுகளாக அமலில் உள்ள கல்வி கொள்கைக்கு பதிலாக, புதிய கல்வி கொள்கையை மத்திய அரசு உருவாக்கியுள்ளது.


புதுமை:

கல்வியாளர்கள், மாணவர்கள், பெற்றோர் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் கருத்துகளை கேட்டு, பல்வேறு புதுமையான அம்சங்களுடன் உருவாகியுள்ள இந்த கல்வி கொள்கைக்கு, மத்திய அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. ஐந்தாம் வகுப்பு வரை, மாணவர்களுக்கு தாய்மொழியில் கல்வி கற்பிப்பது உள்ளிட்ட சில அம்சங்கள், அனைத்து தரப்பினரின் வரவேற்பை பெற்றுள்ளன.

இந்த புதிய கல்வி கொள்கை குறித்து, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் மத்திய அரசு இறங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, 'புதிய கல்வி கொள்கையால் உயர் கல்வியில் ஏற்படும் சீர்திருத்தம்' என்ற தலைப்பிலான மாநாடுக்கு, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், பல்கலை மானிய குழு ஆகியவை ஏற்பாடு செய்திருந்தன.

'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நடந்த இந்த மாநாட்டை துவக்கி வைத்து, பிரதமர் மோடி பேசியதாவது: புதிய கல்வி கொள்கை குறித்து, நாடு முழுதும் இருந்து பல தரப்பினரும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்; இது வரவேற்கத்தக்க விஷயம். இதனால், நாட்டின் கல்வி அமைப்பு மேம்படும். பெரும்பாலானோர், இந்த கல்வி கொள்கையை வரவேற்றுள்ளனர். அதே நேரத்தில், கல்வி கொள்கையில் பாகுபாடு இருப்பதாகவோ, ஒரு சார்புடன் இருப்பதாகவோ, யாருமே கருத்து தெரிவிக்காதது மகிழ்ச்சி அளிக்கிறது.

இந்த கல்வி கொள்கையின் முக்கிய அம்சமே, மாணவர்கள் ஐந்தாம் வகுப்பு வரை, தங்கள் தாய்மொழியில் கல்வி கற்பது தான். இதன் வாயிலாக, குழந்தைகள், பாடங்களை முன்பை விட, மிக நன்றாக புரிந்து கொள்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இளம் வயதிலேயே பாடங்களை தெளிவாக படிப்பதன் வாயிலாக, எதிர்காலத்தில் அவர்கள் மிக உயர்ந்த இடத்துக்கு செல்ல முடியும். அடுத்த கட்டமாக, இந்த கொள்கையை எப்படி நடைமுறைப்படுத்துவது என்பது தான், மிகப் பெரிய கேள்வியாக உள்ளது; இது, ஒரு சவாலான விஷயமாகவே இருக்கும்.

இந்த கல்வி கொள்கையை நடைமுறைப்படுத்த, நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இந்த விஷயத்தில், நீங்கள் ஒவ்வொருவரும் நேரடியாக இந்த கல்வி கொள்கையுடன் சம்பந்தப்பட்டுள்ளீர்கள். பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும், புதிய கல்வி கொள்கையை நடைமுறைப்படுத்த ஆதரவு தந்துள்ள நிலையில், அரசியல் ரீதியாக அதை அமல்படுத்துவதற்கு, நான் முழு ஆதரவு அளிப்பேன். இந்த விஷயத்தில், நான் எப்போதும் உங்களுடன் இருப்பேன்.

நம் நாட்டில் பல ஆண்டுகளாக கல்வி கொள்கையில் மாற்றம் செய்யப்படவில்லை. இதனால், புதியவற்றை கற்பதற்கான ஆர்வம், அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை சிந்திக்கும் தன்மை ஆகியவற்றை இழந்து விட்டோம். அதற்கு பதிலாக, ஒரு மந்தை தனத்துடன் செயல்படும் சமூகமாக மாறி விட்டோம். புதிய விஷயங்களை சிந்திப்பதற்கான தன்மையை வளர்த்துக் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

கல்வி கற்பதற்கான நோக்கம் இல்லாவிட்டால், இளைய சமுதாயத்தினரால், புதிய கண்டுபிடிப்புகளுக்கான திறனை வளர்த்துக் கொள்ள முடியாது. நம் நாட்டை, வளர்ச்சி அடைந்த நாடாக மாற்றுவதற்கு, புதிய கல்வி கொள்கை மிகவும் முக்கியம். நாட்டின் வளர்ச்சியை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல, சீர்திருத்தமே சரியான வழி. அதற்கு இளைஞர்கள் தயாராக உள்ளனர் .புதிய இந்தியாவை அமைப்பதற்கான அடித்தளமாக புதிய கல்வி கொள்கை இருக்கும். இதற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு அளிக்க வேண்டும். இவ்வாறு, பிரதமர் பேசினார்.


எப்படி சிந்திக்க வேண்டும்?

வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக நேற்று நடந்த மாநாட்டில், புதிய கல்வி கொள்கை தொடர்பாக, பிரதமர் மேலும் பேசியதாவது:கல்வி கொள்கையில் மாற்றங்கள் தேவை என்பதை, தற்போதைய மாறி வரும் உலக நிகழ்வுகள் வலியுறுத்துகின்றன. கல்வியை பொறுத்தவரை, 'என்ன சிந்திக்க வேண்டும்' என்பதற்கு தான், இதுவரை முக்கியத்துவம் அளித்து வந்தோம். ஆனால், புதிய கல்வி கொள்கையில், 'எப்படி சிந்திக்க வேண்டும்' என்பதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

இது, 'டிஜிட்டல்' யுகம். மாறி வரும் நிகழ்வுகளுக்கு ஏற்ப, நம்மை நாம் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். இந்தியர்களை அதிகாரம் மிக்கவர்களாகவும், வாய்ப்புகளை எளிதாக அடையும் திறமை மிக்கவர்களாகவும் மாற்றுவதை, புதிய கல்வி கொள்கை உறுதி செய்கிறது. தனி நபர்கள், பல ஆண்டுகளாக, வாழ்க்கை முழுதும் ஒரு தொழிலை மட்டுமே நம்பியிருக்கும் நிலையை மாற்ற வேண்டும். அதற்கு ஏற்ப, ஒவ்வொரு தனி நபரின் திறமையையும் மேம்படுத்துவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தி தர வேண்டும்.

'திறமையுடன் கூடிய, மனிதநேயமிக்க உள்ள சமுதாயத்தை உருவாக்குவதே, கல்வி கொள்கையின் நோக்கமாக இருக்க வேண்டும்' என, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அடிக்கடி கூறுவார்.நம் நாட்டுக்கு மிகச் சிறந்த மாணவர்கள், தொழில் நிபுணர்கள், மனிதநேயமிக்கவர்களை உருவாக்கி தருவதே, புதிய கல்வி கொள்கையின் முக்கிய அம்சம். இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Janarthanan (குடும்ப ஆட்சிக்கு முடிவுரை எழுத வேண்டும்) கூகுள பிச்சை பிடித்து கொண்டு தொங்கும் குடும்ப அடிமைகளே அவர் படித்தது மத்திய அரசு பள்ளியில், உரு போட்டு பாஸ் ஆக்கும் சமசீர் கல்வி அல்ல ??? பல சுந்தர் பிச்சை உருவாக்க தான் புதிய கல்வி திட்டம் உதவ போகிறது
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
08-ஆக-202010:03:43 IST Report Abuse
sankaseshan நல்ல நல்ல பாயிண்ட்ஸ் எடுத்து கொடுப்பார்
Rate this:
Cancel
Chandramoulli - Mumbai,இந்தியா
08-ஆக-202009:13:14 IST Report Abuse
Chandramoulli கல்விமுறை சிறந்ததாக உள்ளது. தமிழகத்தில் பணிசெய்யும் ஆசிரியர்கள் ஒரு கூட்டத்தை சார்ந்தவர்களாக இருக்கிறார்கள் . மாணவர்களை அழிவு பாதைக்கு எடுத்து செல்கிறார்களோ என்ற அச்சம் உள்ளது. இதற்கு மாற்று உபயம் ஏதாவது உண்டா . சங்கங்கள் தேவையா இப்போது . போலீஸ்க்கு சங்கம் இல்லை என்பதை போல் கல்வித்துறைக்கு சங்கம் என்ற ஒன்றே இருக்க கூடாது என்ற நடைமுறையை கொண்டு வரவேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X