ரஷ்ய கொரோனா தடுப்பூசியால் ஆபத்து நேரலாம் என எச்சரிக்கை| Russia coronavirus vaccine might not be the best, warn scientists | Dinamalar

ரஷ்ய கொரோனா தடுப்பூசியால் ஆபத்து நேரலாம் என எச்சரிக்கை

Updated : ஆக 08, 2020 | Added : ஆக 08, 2020
Share
மாஸ்கோ : 'ரஷ்யா அவசர கதியில் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியால் ஆபத்து நேரலாம்' என, விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.உலகில், முதன் முதலாக, 'ஸ்புட்னிக்' செயற்கைக்கோளை விண்ணில் ஏவிய பெருமை, ரஷ்யாவுக்கு உள்ளது. அதுபோல, உலகில் முதன் முதலாக, கொரோனா வுக்கு தடுப்பூசி கண்டுபிடித்த பெருமையைப் பெற, ரஷ்யா தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதன் மூலம், சர்வதேச அளவில், தன் மதிப்பை
russia, coronavirus, covid 19, coronavirus vaccine, ரஷ்யா, கொரோனா, தடுப்பூசி, ஆபத்து, எச்சரிக்கை

மாஸ்கோ : 'ரஷ்யா அவசர கதியில் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியால் ஆபத்து நேரலாம்' என, விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.உலகில், முதன் முதலாக, 'ஸ்புட்னிக்' செயற்கைக்கோளை விண்ணில் ஏவிய பெருமை, ரஷ்யாவுக்கு உள்ளது.


latest tamil newsஅதுபோல, உலகில் முதன் முதலாக, கொரோனா வுக்கு தடுப்பூசி கண்டுபிடித்த பெருமையைப் பெற, ரஷ்யா தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதன் மூலம், சர்வதேச அளவில், தன் மதிப்பை உயர்த்திக் கொள்ள, அந்நாடு திட்டமிட்டுள்ளது.இதையொட்டி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், சில மாதங்களுக்கு முன், கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட அனைத்து புதிய மருந்துகளின் ஆய்வுக் காலத்தையும் குறைத்து உத்தரவிட்டார்.


வெளியிடவில்லை

இதையடுத்து, ரஷ்யாவின் கமாலியா ஆய்வு மையம், கொரோனா தடுப்பூசி மருந்தை கண்டுபிடித்து விட்டதாக அறிவித்துள்ளது. இம்மையம், மனிதர்களிடம், இரு கட்டங்களாக தடுப்பூசி மருந்தை செலுத்தி சோதனை செய்ததாக தெரிவித்துள்ளது.ஆனால் இம்மையம், மூன்றாம் கட்ட சோதனையை மேற்கொள்வதற்கு முன், கொரோனா தடுப்பூசி மருந்தை தயாரித்து, சந்தைப்படுத்த, ஓரிரு நாட்களில் அனுமதி வழங்கப்படும் என, தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, செப்டம்பரில் தடுப்பூசி தயாரித்து, அக்டோபரில் விற்பனைக்கு கொண்டு வர, ரஷ்யா திட்டமிட்டுள்ளது.

கமாலியா ஆய்வு மையம், இரு மாதங்களுக்கு முன், ஒரு டஜனுக்கு மேற்பட்டோரிடம் முதற்கட்ட பரிசோதனையை மேற்கொண்டது. அதன் முடிவையும், ஆதாரங்களையும், ரஷ்யா இதுவரை வெளியிடவில்லை. இது குறித்து, ரஷ்ய ஆய்வக நிறுவனங்கள் கேட்டதற்கு, தடுப்பூசி மருந்தை, தானும், சில ஆய்வாளர்களும் உடலில் செலுத்தி பரிசோதித்ததாக, கமாலியா ஆய்வு மையத்தின் தலைவர், அலெக்சாண்டர் கின்ட்பர்க் தெரிவித்தார்.இதை ஏற்க மறுத்த ஆய்வக நிறுவனங்கள், தரமான பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என, ரஷ்ய அரசுக்கு கடிதம் எழுதின.அதை மீறி, இரண்டாம் கட்ட ஆய்வுக்கு ரஷ்ய அரசு அனுமதி அளித்தது.

இதையடுத்து, ராணுவத்தினர் உட்பட, 76 பேருக்கு, தடுப்பூசி மருந்து செலுத்தப்பட்டது. இதில், திரவ மருந்து செலுத்திய ராணுவத்தினருக்கு பக்க விளைவு ஏதும் ஏற்படவில்லை என்றும், திட மருந்தால் சிலர் பாதிக்கப்பட்டதாகவும், தகவல் வெளியாகியுள்ளது.


எச்சரிக்கை

இத்தகைய சூழலில், மூன்றாம் கட்ட ஆய்வை மேற்கொள்ளாமல், தடுப்பூசி மருந்து தயாரிக்க அனுமதி அளிப்பது ஆபத்தானது' என, விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

இது குறித்து ஜார்ஜ் டவுன் பல்கலை, சுகாதார வல்லுனர், லாரன்ஸ் கோஸ்டின் கூறியதாவது: ரஷ்யா, விதிமுறைகளை பின்பற்றாமல், கொரோனா தடுப்பூசியை வெளியிடுவதால் எந்த பயனும் இருக்காது. மாறாக, சுகாதார சீர்கேடு தான் ஏற்படும். ஆய்வு முடிவுகள் வந்த பின் தான், தடுப்பூசி மருந்தின் தன்மை தெரியும்.இவ்வாறு, அவர் கூறினார்.

பிரச்னையை உருவாக்கும் சீனாவும், ரஷ்யாவும், தடுப்பூசியை தயாரித்து விற்பனை செய்யும் முன், அதை ஆய்வுக்கு உட்படுத்தும் என, நம்புகிறேன். ஆய்வுகளை முழுமையாக முடிக்காமல், தடுப்பூசி தயார் என அறிவித்து, வினியோகிக்க முயற்சிப்பது, பிரச்னையை தான் உருவாக்கும்.
ஆன்டனி பாசி
தலைவர்,


அமெரிக்க தொற்றுநோய் தடுப்பு கழகம்

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X