மேற்கு வங்க சட்டசபை தேர்தலுக்கு பா.ஜ., ஆயத்தம்! மம்தா கட்சியை வீழ்த்த அதிரடி வியூகங்கள் தயார்

Updated : ஆக 09, 2020 | Added : ஆக 08, 2020 | கருத்துகள் (16)
Share
Advertisement
BJP, Mamata Banerjee, Amit Shah, West Bengal CM, மம்தா ,பாஜ, மேற்கு வங்கம், அமித் ஷா

மேற்கு வங்கத்தில், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில், மம்தா பானர்ஜியின் திரிணமுல் காங்கிரஸ் கட்சியை வீழ்த்தும் வகையில், அதிரடி வியூகங்களை பா.ஜ., வகுத்துள்ளது. முக்கியமாக, மேற்கு வங்க மண்ணின் மைந்தரும், ஜன சங்கத்தின் மறைந்த தலைவருமான, ஷியாமா பிரசாத் முகர்ஜியின் புகழை முன்னிறுத்தி தேர்தலை எதிர்கொள்ள, பா.ஜ., திட்டமிட்டுள்ளது. இதற்கு அச்சாரமாக, உறுப்பினர்கள் சேர்க்கை திட்டத்தை, பா,ஜ., நேற்று துவக்கியுள்ளது.

மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான, திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. 1977ம் ஆண்டு முதல், இடதுசாரிகளின் கோட்டையாக இருந்த மேற்கு வங்கத்துக்கு, 2011ல், மம்தா பானர்ஜி முடிவு கட்டினார். அதன் பின், மாநிலத்தில், திரிணமுல் காங்., கட்சியின் கொடி உயர பறந்து வருகிறது.


அசத்தல்:

இந்நிலையில், மேற்கு வங்கத்தில், பா.ஜ.,வால், ஒரு தொகுதியில் வெற்றி பெறுவதே அதிசயமாக இருந்தது. 2014 லோக்சபா தேர்தலில், நாடு முழுதும் மோடி அலை வீசிய நிலையிலும், மேற்கு வங்கத்தில் இரண்டு இடங்களில் தான் பா.ஜ., வென்றது. கடந்த, 2016 சட்டசபை தேர்தலிலும், பா.ஜ.,வால் ஐந்து தொகுதிகளில் கூட வெற்றி பெற முடியவில்லை. என்றாலும், பா.ஜ.,வின் ஓட்டு சதவீதம் அதிகரித்தது.

இதையடுத்து, மாநிலத்தில் பா.ஜ.,வை வலிமையாக்க, அப்போதைய தலைவர் அமித் ஷா கடும் நடவடிக்கைகள் மேற்கொண்டார். இதன் பலனாக, 2019 லோக்சபா தேர்தலில், மாநிலத்தில், 42 தொகுதிகளில், 18ல் வென்று பா.ஜ., அசத்தியது. இதனால், 2021ல் நடக்கும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, ஆட்சியை பிடித்து விட முடியும் என்ற நம்பிக்கை, பா.ஜ.,வுக்கு ஏற்பட்டது. இதையடுத்து, முதல்வர் மம்தா பானர்ஜி, பா.ஜ.,வையே பிரதான எதிரியாக கருதி வருகிறார்.

மேற்கு வங்க சட்டசபை தேர்தல் நடக்க இன்னும், எட்டு மாதங்கள் உள்ளன. ஆனால், அதற்கு இப்போதே ஆயுத்தமாகி வரும் பா.ஜ., மம்தாவின் திரிணமுல் காங்.,கை வீழ்த்தி, ஆட்சியை பிடிக்க பல வியூகங்களை வகுத்துள்ளது.


பா.ஜ., மேலிடம் உத்தரவு:

பா.ஜ.,வின் முந்தைய அமைப்பான ஜன சங்கத்தை தோற்றுவித்தவர், ஷியாமா பிரசாத் முகர்ஜி. இவர், மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர். இவரை முன்னிலைப்படுத்தி, தேர்தலில் மக்களிடம் உணர்வு பூர்வமாக பிரசாரம் செய்ய பா.ஜ., திட்டமிட்டுள்ளது. இதையடுத்து, ஷியாமா பிரசாத் முகர்ஜி குறித்த புகழை, மேற்கு வங்கத்தின் மூலை முடுக்கெல்லாம் பரப்ப, அனைத்து ஏற்பாடுகளையும் செய்யும்படி, அம்மாநில நிர்வாகிகளுக்கு பா.ஜ., மேலிடம் உத்தரவிட்டுள்ளது.


நடவடிக்கை:

இதற்கு அச்சாரமாக, பிரதமர் மோடி, 150 ஆண்டு பழமையான கோல்கட்டா துறைமுகத்துக்கு, கடந்த ஜனவரியில், ஷியாமா பிரசாத் முகர்ஜியின் பெயரை சூட்டினார். கடந்த மாதம், கோல்கட்டாவில் உள்ள கவர்னர் மாளிகையில், ஷியாமா பிரசாத் முகர்ஜியின் பிறந்த நாளை, முதன்முறையாக கொண்டாடியதோடு, அவரது பெரிய அளவிலான படத்தையும், கவர்னர் ஜக்தீப் தன்கர் திறந்து வைத்தார். தவிர, கோல்கட்டாவில் உள்ள ஷியாமா பிரசாத் முகர்ஜி வாழ்ந்த இல்லத்தை, மத்திய அரசின் சார்பில், நினைவிடம் ஆக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதோடு முகர்ஜி குறித்த கடிதங்கள், பிரசுரங்கள் என, அனைத்தையும் புதுப்பிக்கும்படியும், மேற்கு வங்க அரசியல் மற்றும் தேசிய அரசியலில், அவரது பணிகளை மறுபிரசுரம் செய்யும்படியும், மத்திய ஆவண காப்பகம் உள்ளிட்ட துறைகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், பா.ஜ., வட்டாரங்கள் தெரிவித்தன. சட்டசபை தேர்தலுக்கு தயாராகும் வகையில், 'என் குடும்பம்; பா.ஜ., குடும்பம்' என்ற தலைப்பில் உறுப்பினர் சேர்ப்பு திட்டத்தை, மாநிலத்தில் பா.ஜ., நேற்று துவக்கியது.


மக்கள் பதிலடி கொடுப்பர்:

இதை, மாநில தலைவர்திலிப் கோஷ் துவக்கி வைத்தார். உறுப்பினர்சேர்க்கைக்காக, இலவசதொலைபேசி எண்ணையும் பா.ஜ., வெளியிட்டு உள்ளது. இதையொட்டி, பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, 'வீடியோ'வில் வாழ்த்து செய்தி அனுப்பியிருந்தார். அதில், 'உறுப்பினர் சேர்க்கை பெரும் வெற்றி பெறும். இந்த வெற்றி, அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தலில் பெறப் போகும் வெற்றிக்கு எடுத்துக்காட்டாக இருக்கும்' என, கூறியுள்ளார்.

மாநில பா.ஜ., தலைவர் திலிப் கோஷ் கூறியதாவது: மம்தா பானர்ஜி மீது, மேற்கு வங்க மக்கள் கோபத்தில் உள்ளனர். இது, அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தலில் தெரியும். எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே, வங்கதேசத்திலிருந்து ஊடுருவியவர்களுக்கு ஆதரவாக, மம்தா செயல்படுகிறார். இதற்கு, மேற்கு வங்க மக்கள் சரியான பதிலடி கொடுப்பர்.இவ்வாறு, அவர் கூறினார்.


மர்மமாக மரணித்தவர்:

பா.ஜ.,வின் முன்னோடியான அகில பாரதிய ஜன சங்கம் என்ற கட்சியை நிறுவியர், டாக்டர் ஷியாமா பிரசாத் முகர்ஜி. 1951 முதல், 1977 வரை செயல்பட்ட அந்த கட்சி தான், பின்னாளில் பா.ஜ.,வாக உருவெடுத்தது.மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஷியாமா பிரசாத் முகர்ஜி, தேசிய அரசியலில் மிக முக்கிய பங்காற்றினார்.

மறைந்த பிரதமர் நேருவின் அமைச்சரவையில், தொழில் துறை அமைச்சராகவும் இருந்தார். காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யக் கோரி, அவர் தீவிரமாக செயல்பட்ட நிலையில், அம்மாநிலத்திற்கு சென்றபோது, ஸ்ரீநகரில் சிறை வைக்கப்பட்டார். அப்போது, மர்மமான முறையில் அவர் சிறையிலேயே இறந்து போனார் என்பது குறிப்பிடத்தக்கது.


அமித் ஷா ஐடியா இது:

'மேற்கு வங்க சட்டசபை தேர்தலில், ஷியாமா பிரசாத் முகர்ஜியை முன்னிலைப்படுத்த வேண்டும் என்பது, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் ஐடியா. மண்ணின் மைந்தன் என்ற வகையில், இத்தனை ஆண்டுகளாக மறைக்கப்பட்ட அவரது புகழை, வீதி வீதியாக எடுத்துச் செல்வோம்' என, மாநில பா.ஜ., தலைவர்கள் கூறினர்.'


‛நாயகனாக முடியாது'

பா.ஜ., பிரசார வியூகம் குறித்து, திரிணமுல் காங்., வட்டாரங்கள் கூறியதாவது: முதலில் தீனதயாள் உபாத்யாவை முன்னிலைப்படுத்த முயன்று பார்த்தனர்; முடியவில்லை. இப்போது, ஷியாமா பிரசாத் முகர்ஜி என்கின்றனர். அவர் ஒருபோதும் மேற்கு வங்க நாயகனாக முடியாது. அவர் உயிரோடு இருந்த காலத்தில், இங்கு போற்றப்பட்டவர் அல்ல. சுதந்திர போராட்டத்தில், சிறைக்கே செல்லாத ஒரே மேற்கு வங்க தலைவர் இவர் மட்டுமே. கல்வித் துறை சிறக்க பணியாற்றியதைத் தவிர, வேறெந்த பங்களிப்பும் இவருக்கு இல்லை. இவ்வாறு, அந்த வட்டாரங்கள் கூறின.

- நமது டில்லி நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pannadai Pandian - wuxi,சீனா
08-ஆக-202023:03:33 IST Report Abuse
Pannadai Pandian தீதி அவுட்......மீன் கடையில் வியாபாரம் செய்யலாம்....
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
08-ஆக-202018:49:11 IST Report Abuse
Endrum Indian ஒரு வியூகம் கூட முஸ்லீம் பேகம் மும்தாஜ் ஆட்சியை வீழ்த்த முடியாது. ஏன்??? ஈ வீ எம் பூராவும் டி எம் சி குண்டர்கள் கையில் ஒட்டு போடுவது இங்கு மக்களே அல்ல டி எம் சி குண்டர்கள் தான்
Rate this:
Cancel
08-ஆக-202015:37:25 IST Report Abuse
Indian Kumar ( Nallavarkal  Aatchikku VARAVENDUM ) வங்கத்தில் வெற்றி வாகை சூடுமா பாஜக என்பது எல்லாம் வல்ல பெருமானுக்கு மட்டுமே தெரியும் . எறும்பு ஊற ஊற கல்லும் தேய்த்தான் செய்யும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X