உயிரிழந்த விமானி இந்திய விமானப் படையின் முன்னாள் பைலட்

Updated : ஆக 08, 2020 | Added : ஆக 08, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement
Air India Express, aircraft, Air India, flight, Dubai, Kozhikode

கோழிக்கோடு: கேரள விமான விபத்தில் உயிரிழந்த விமானியான, விங் கமாண்டர் தீபக் வசந்த் சாதே, இந்திய விமானப் படையின் முன்னாள் பைலட்டாக இருந்தவர் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

வந்தே பாரத் திட்டத்தின் கீழ், துபாயிலிருந்து 191 பேருடன் வந்த 'ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்' விமானம், கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்தில், தரையிறங்கும் போது, விழுந்து விபத்துக்குள்ளானது. நேற்று(ஆக.,7) இரவு 7.40 மணியளவில், நடந்த இந்த விபத்தில், விமானம் இரண்டாக பிளந்து சிதைந்தது. விமானத்தில் பயணித்தவர்களில், விமானி விங் கமாண்டர், தீபக் வசந்த் சாதே, குழந்தை உட்பட 16 பேர் பலியாகி உள்ளனர்.


latest tamil news



இந்நிலையில், உயிரிழந்த விமானியான விங் கமாண்டர் சாதே, ஏர் இந்தியாவில் பணிக்கு சேரும் முன், இந்திய விமானப் படையின் பைலட்டாக இருந்துள்ளார். சாதே குறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது: சாதே, மிகவும் தொழில் நிபுணத்துவம் வாய்ந்தவர். அவருக்கு 58 என்டிஏ தங்கப் பதக்கம் வழங்கப்பட்டுள்ளது. இந்திய விமானப் படையில் சோதனை பைலட்டாக இருந்தவர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Amirthalingam Shanmugam - Trichy,இந்தியா
08-ஆக-202012:54:41 IST Report Abuse
Amirthalingam Shanmugam பயணியர் விமானம் ஓட்டுபவர்களுக்கு வயது வரம்பு என்ன?
Rate this:
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
08-ஆக-202010:13:27 IST Report Abuse
மலரின் மகள் மனித சக்தி ஒன்றும் அவ்வளவு பெரியதில்லை, எவ்வளவுதான் அறிவு வளர்ந்தாலும். இறை நம்பிக்கை கொண்டு கூட்டு பிரார்த்தனை செய்வோம். இறைவன் படைத்த உலகில் மனிதனுக்கு பல கடைமைகள் உண்டு. உலக ஜீவராசிகளுக்கெல்லாம் உணவு ஓட்டுவதும் மனிதனின் கடைமைகளே. அவைகளை கொன்று உண்டு தனது வாழ்வு தன் உடல் தான் முக்கியம் என்று தன்னலமின்றி அனைத்து ஜீவண்களுக்கும் உணவளிப்போம். பாரதியார் காக்கை குருவிகள் எங்கள் ஜாதி என்று பாடியதும் அவைகளுக்கும் உணவளித்தார் வறுமையிலும். உணவு உற்பத்தி பெருக்கி வேளாண் இயற்கை முறை சார்ந்து இறைவனை பிரார்த்தித்து அன்பும் அறமும் செழித்தோங்க வாழ்வோம். விண்ணில் பறந்து தாயகம் தொட்டவர்கள் திரும்ப இயலா விண்ணிற்கே சென்று விட்டனர். இறைவனின் நிழலில் அவர்கள் ஆத்மா சாந்தி அடையட்டும். சிகிச்சையால் உள்ளோர் பூரண குணமடைந்து சிறப்பான புது வாழ்க்கை வாழ தெய்வத்தை வணங்குவோம். புத்தம் சரணம் கச்சாமி,
Rate this:
Cancel
K.ANBARASAN - muscat,ஓமன்
08-ஆக-202010:04:27 IST Report Abuse
K.ANBARASAN ஆழ்ந்த இரங்கல்கள்.ஓடு பாதை மிகவும் சிறிதாக ஒரு பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்திருப்பது விதி முறைகளை மீறிய ஒன்றாகும். இது நல்ல பைலட் ஐ பலிகடா ஆக்கி இருக்கிறது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X