கோழிக்கோடு விமான விபத்து: அதிகாரிகள் குழு விசாரணை

Updated : ஆக 08, 2020 | Added : ஆக 08, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
Probe launched ,Kerala plane crash, 2 teams , arrive in state

மலப்புரம்: கோழிக்கோடு விமான விபத்து குறித்து விசாரணையை உள்நாட்டு விமானப்போக்குவரத்துறை துவக்கியுள்ளது.

வந்தே பாரத்' திட்டத்தின் கீழ், துபாயில் இருந்து, கேரளாவிற்கு, ஏர் இந்தியா எக்ஸ்பிரசின் போயிங் விமானம், நேற்றிரவு வந்தது.இதில், 174 பயணியர் உட்பட, 191 பேர் இருந்தனர். இந்த விமானம், மலப்புரம் மாவட்டம், கோழிக்கோடு அருகே உள்ள கரிப்பூர் விமான நிலையத்தில், நேற்று இரவு, 7:40 மணிக்கு தரைஇறங்கியது; அப்போது, விபத்துக்குள்ளானது. ஓடுபாதையில்இருந்து விலகி, பள்ளத்தில் விழுந்து, இரண்டாக பிளந்தது.


latest tamil newsஇந்த விபத்தில், பைலட் உட்பட, 16 பயணியர் பலியாயினர்; 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.இந்த விபத்து குறித்து மத்திய உள்நாட்டு விமான போக்குவரத்துதுறை அமைச்சகத்தின் கீழ் உள்ள ஏ.ஏ.ஐ.பி.) எனப்படும் விமான விபத்து குறித்த விசாரணைக்குழு விசாரணையை துவக்கியது.

இது குறித்து மத்திய அமைச்சர் ஹர்தீப்சிங் புரி டுவிட்டரில் கூறியது, நடந்த சம்பவம் வேதனை அளிக்கிறது. மீட்பு பணிகள் நிறைவடைந்தன. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து முறையான விசாரணை நடத்த விமான விபத்து தொடர்பான (ஏ.ஏ.ஐ.பி.)விசாரணை குழுவினர் இரண்டு பிரிவுகளாக இன்று கோழிக்கோடு சென்று விசாரணையை துவக்கி முதற்கட்ட அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
நிலா - மதுரை,இந்தியா
08-ஆக-202010:16:27 IST Report Abuse
நிலா விபத்தில் சிக்கிக்கொண்ட விமானம் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தட்பவெப்ப நிலை ஒரு காரணமாயிருந்தாலும் இந்திய விமானங்கள் யாவும் பயணிக்க திறனற்றவை இன்று ஜெர்மனியின் லுப்தான்ஸா ,பிரிட்டிஷ் ஏர்வேஸ் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இவைகளில் பயணம் செய்துள்ளேன் மிகவும் அருமையாக இருக்கும் பயணம் ஆனால் இந்திய விமானங்கள் ஜெட் ஏர்வேஸ், ஏர் இண்டியா, இண்டிகோ ஸ்பைஸ் ஜெட் இவைகளில் தரம் மிகவும் கேவலமாகயிருக்கும் நிற்ககூட முடியாது தலையில் தட்டும் விமானத்தின் மேல் பகுதி இறங்கும் வசதி அதை விட மட்டம் இந்தியா மற்ற நாடுகளை பார்த்தாவது நம் நாட்டின் விமானங்களை மேம்படுத்தலாம் பயணிப்பது உயிர்கள் ஜடமில்லை இனி இந்த மாதிரி விபத்து ஏற்படாமல் இருக்க கடவுளை பிராத்திப்போம் விமான விபத்தில் இருந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
08-ஆக-202006:29:37 IST Report Abuse
தல புராணம் கோவில் கட்டுறதுலே காட்டின தீவிரத்தை, அதானிக்கு விமானநிலைய பராமரிப்பு ஒப்பந்தங்களை தாரை வார்க்கும் ஆர்வத்தில் சிறிதளவு DGCA செய்ய சொன்ன மாற்றங்களை கோழிக்கோடு விமான நிலையத்தில் காலாகாலத்தில் செய்திருந்தால், இந்த விபத்தை நிச்சயம் தவிர்த்திருக்க முடியும்.. ராமர் காப்பாத்தலை..
Rate this:
natesa - ,
08-ஆக-202007:25:07 IST Report Abuse
natesa not product from covid 19 also...
Rate this:
Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா
08-ஆக-202013:06:41 IST Report Abuse
Dr. Suriyaஏன் உங்க அல்லா கூட காப்பதில்லைன்னு வட்சிக்காலமுள்ள.........
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X