பொது செய்தி

இந்தியா

கோழிக்கோடு விமான விபத்து: ரன்வே பாதுகாப்பாக இல்லை

Updated : ஆக 08, 2020 | Added : ஆக 08, 2020 | கருத்துகள் (23)
Share
Advertisement

கோழிக்கோடு: கோழிக்கோடு விமான விபத்து நடந்த கரிப்பூர் விமானநிலையம் பாதுகாப்பாக இல்லை என விமான போக்குவரத்து பாதுகாப்பு ஆலோசனை கமிட்டி உறுப்பினர் மோகன் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.latest tamil newsபாதுகாப்பின்மை குறித்து அவர் 9 வருடங்களுக்கு முன்பே தெரிவித்திருந்தார். மங்களூருவில் ஏற்பட்ட விமான விபத்து சமயத்தில் இது பற்றி அவர் எச்சரிக்கை விடுத்திருந்தார். ஆனால், அப்போது அது கண்டு கொள்ளப்பட வில்லை என தெரிவித்துள்ளார்.


latest tamil news


தற்போது விமான விபத்து ஏற்பட்டுள்ள கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையம் மலை மீது அமைந்துள்ள 'டேபிள் டாப்' விமானநிலையம். இதன் ஓடு பாதையின் முடிவில் போதுமான நீட்டிக்கப்பட்ட பகுதி (buffer zone) இல்லை என தெரிவித்துள்ளார். 'பொதுவாக 240 மீட்டர் தூரத்திற்கு நீட்டிக்கப்பட்டிருக்க வேண்டும் ஆனால் கரிப்பூர் விமான நிலையத்தில் 90 மீட்டர் வரை தான் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஓடுபாதையின் இருபக்கமும் போதுமான இடம் இல்லை. 100 மீட்டருக்கு பதிலாக 75 மீட்டராக உள்ளது. மேலும், மழைக் காலங்களில் டேபிள் டாப் ஓடு பாதயைில் விமானம் இறங்குவதற்கு போதுமான வழகாட்டு நெறிமுறைகள் இல்லை' இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement
வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balaji - Chennai,இந்தியா
08-ஆக-202018:44:02 IST Report Abuse
Balaji பல வருடங்களாக இயங்கிவரும் விமானநிலையம் தான் இது. குறை சொல்லுவதை நிறுத்திக்கொள்ளலாம். விபத்துக்கள் நடப்பது எதிர்பார்த்து நடப்பதல்ல. விமானத்தின் கியர் கூட தகராறு செய்திருக்கிறது என்று கேள்வி. விமானம் சரியாக இருந்திருந்து விமானநிலைய ஓடுதளம் தான் பிரச்சினை என்றால் அருகில் உள்ள கொச்சிக்கோ அல்லது மங்களூருக்கோ மாற்றி விட்டிருக்கும் முடிவு எடுத்திருப்பார்கள் என்றே தோன்றுகிறது. எதிர்பாராத விமான கோளாறே இதற்க்கு காரணம் என்றே தோன்றுகிறது...
Rate this:
Cancel
Vijay D Ratnam - Chennai,இந்தியா
08-ஆக-202018:36:50 IST Report Abuse
Vijay D Ratnam கோழிக்கோடு விமான நிலையத்தை இழுத்து பூட்டுங்கய்யா. அதான் கேரளாவுக்கு திருவனந்தபுரம், கொச்சி இரண்டு சர்வதேச விமான நிலையங்கள் இருக்குதுல்ல. அது போதும். அந்நியச் செலாவணியை கொட்டிக்கொடுக்கும் கோயம்புத்தூர் விமான நிலையத்தை டெவலப் செய்யுங்கள்.
Rate this:
Cancel
Tamilnesan - Muscat,ஓமன்
08-ஆக-202017:22:59 IST Report Abuse
Tamilnesan அறுபது வருடங்களுக்கு மேல் ஆட்சி செய்தவர்களின் அவலங்கள் தொடர்கிறது. ஒன்பது வருடங்களுக்கு முன்பே இந்த விமான தளம் ஆபத்தானது மேலும் பயனற்றது என்று சொல்லியும் எப்படி விமானங்கள் இயக்க சம்மதித்தார்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நிரந்தர பணி நீக்கம் செய்யப்படுவதுடன் அவர்கள் மீது நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும். ஆனால், இந்தியாவில் இதை செய்ய மாட்டார்கள். விமானி தங்க பதக்கம் வாங்கியவர் என்பதுடன், மிகுந்த கவனத்துடன் செயல்பட்டதால் உயிர் சேதம் குறைக்கப்பட்டுள்ளது. ஆழ்ந்த அனுதாபங்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X