சீரம் நிறுவனம் தடுப்பூசி விற்பனை; பில்கேட்ஸ் அறக்கட்டளை உதவி| Covid-19: Serum Institute caps proposed vaccine price at Rs 225/dose | Dinamalar

பொது செய்தி

இந்தியா

சீரம் நிறுவனம் தடுப்பூசி விற்பனை; பில்கேட்ஸ் அறக்கட்டளை உதவி

Updated : ஆக 08, 2020 | Added : ஆக 08, 2020 | கருத்துகள் (9)
Share
Corona Vaccine, Serum Institute, COVID-19, சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா, கொரோனா, தடுப்பூசி, தடுப்பு மருந்து

புனே: 'சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா' நிறுவனம், கொரோனா தடுப்பூசி மருந்தை தயாரித்து, சந்தைப்படுத்துவது தொடர்பாக, பில்கேட்ஸ் அறக்கட்டளையுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

மஹாராஷ்டிராவின் புனே நகரைச் சேர்ந்த, சீரம் நிறுவனம், உலகிலேயே அதிக அளவிலான தடுப்பூசி மருந்து தயாரிப்பு நிறுவனமாக விளங்குகிறது. இந்நிறுவனம், பிரிட்டனின் ஆக்ஸ்போர்ட் பல்கலை உருவாக்கியுள்ள, 'கோவிஷீல்டு' என்ற கொரோனா தடுப்பூசி மருந்தை, 'ஆஸ்ட்ரா ஜெனகா' நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்க உள்ளது. தற்போது, இரண்டாம் கட்டமாக, மனிதர்களுக்கு தடுப்பூசி மருந்து செலுத்தி பரிசோதித்து வருகிறது.


latest tamil news


இந்நிலையில், இந்தியா மற்றும் குறைந்த வருவாய் உள்ள நாடுகளுக்கு தடுப்பூசி மருந்து வழங்குவது தொடர்பாக, சீரம் நிறுவனம், 'பில் அண்டு மெலிந்தா கேட்ஸ்' அறக்கட்டளையுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம், சீரம், 10 கோடி, 'டோஸ்' கோவிஷீல்டு தடுப்பூசி மருந்தை உள்நாட்டிலும், வளரும் நாடுகளுக்கும் வழங்க வழி ஏற்பட்டுள்ளது. தடுப்பூசி மருந்து கண்டுபிடிப்பிற்காக, சீரம், 3,375 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது. இந்நிறுவனத்தின் தொழிற்சாலையில், நிமிடத்திற்கு, 500 டோஸ் கொரோனா தடுப்பூசி மருந்து தயாரிக்கும் வசதி உள்ளது.


ஒரு 'டோஸ்' ரூ.225


சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனம், கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி மருந்தின் விலையை அறிவித்துள்ளது. 'கொரோனா தடுப்பூசி மருந்து, ஒரு டோஸ், 225 ரூபாய் என்ற விலையில், 92 நாடுகளில் விற்பனைக்கு வரும்' என, அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X