சென்னை: வீடுகள் தோறும் நாளை (ஆக.,9) விளக்கேற்றி கந்தசஷ்டி ஒலிக்க செய்து கடவுள் முருகனை வழிபடும் படி தமிழக பா.ஜ. மற்றும் பரிவார் அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன.
கந்தசஷ்டி கவசத்தை இழிவுப்படுத்திய கயவர் கூட்டத்திற்கு எதிராக வேல் பூஜை நடத்த தமிழக பா.ஜ. அழைப்பு விடுத்துள்ளது. ஆடி மாதம் சஷ்டி தினமான நாளை மாலை 6:00 மணிக்கு அவரவர் வீடுகளில் விளக்கேற்றி கந்தசஷ்டி ஒலிக்க செய்து கடவுள் முருகனை வழிபடும் படி பொதுமக்களுக்கு பா.ஜ. வேண்டுகோள் விடுத்துள்ளது.

புத்தகம் வழங்கல்
நாளை வேல் பூஜை நடக்க உள்ளதையொட்டி அனைவருக்கும் கந்த சஷ்டி புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி சென்னை கோயம்பேட்டில் உள்ள தமிழக பா.ஜ. தலைவர் முருகன் வீட்டில் நேற்று நடந்தது.கந்த சஷ்டி புத்தகங்களை முருகன் வழங்கினார்.
ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் கூறியதாவது: தமிழகத்தில் சமீப காலமாக கடவுள் மறுப்பு என்ற பெயரில் கடவுள்களை இழிவாக பழிப்பவர் கூட்டம் ஒன்று தலைதுாக்கியுள்ளது. இனி எவருக்கும் அந்த எண்ணம் கூட வரக் கூடாது. எனவே நமது பக்தியை சக்தியை அவர்களுக்கு உணர்த்த வேண்டும்.
இதற்காக நாளை நம் பலத்தை காட்டுவோம். அன்று மாலை 6:00 மணிக்கு அவரவர் வீட்டின் முன் கோலமிட்டு முருகன் படம் அல்லது வேல் வைத்து பூஜை செய்து கந்த சஷ்டி கவசம் பாட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE