சிறப்பு பகுதிகள்

பேச்சு, பேட்டி, அறிக்கை

குண்டு வெடிப்பு இல்லாத ஓராண்டு

Updated : ஆக 08, 2020 | Added : ஆக 08, 2020 | கருத்துகள் (31)
Share
Advertisement
குண்டு வெடிப்பு இல்லாத ஓராண்டு

காஷ்மீரில், 75 லட்சம் மக்கள், சிறையில் அடைக்கப்பட்டுள்ளது போல, தனிமைப்படுத்தப்பட்டு, ஓராண்டு நிறைவடைந்துள்ளது. அவர்கள் பற்றி, அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும், நேர்மையாக சிந்திக்கும் மக்களும் நினைப்பரா?


'கடந்த ஓராண்டாக, அங்கு குண்டுவெடிப்புகளும் கிடையாது; தாக்குதல்களும் இல்லை...' என, நிம்மதி தெரிவிக்கத் தோன்றும் வகையில், காங்கிரசை சேர்ந்த முன்னாள் மத்திய நிதிஅமைச்சர் சிதம்பரம் அறிக்கை.



'இட்லி சாப்பிட்டார்; சட்னி தொட்டுக்கிட்டார்' என, புளுகியதை போல, 'கொரோனா பரிசோதனை முடிவுகள் உடனுக்குடன் தருகிறோம்' என, தமிழக அரசு பொய் சொன்னதற்கு, நீதிமன்றமே குட்டியுள்ளது. எனவே, முடிவுகளை உடனுக்குடன் அறிவிக்கவேண்டும்.


' உடனுக்குடன் அறிவிக்க இது என்ன லாட்டரியா; உடனடியாக நீங்கள் தெரிந்து என்ன செய்யப் போகிறீர்கள்...' என கேட்கத்தோன்றும் வகையில் தி.மு.க., இளைஞரணி செயலர் உதயநிதி ஸ்டாலின் அறிக்கை


தமிழக, பா.ஜ.,வில் சேர்வதற்காக, பதவியை நான் ராஜினாமா செய்யவில்லை. அரசியலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகத் தான், ராஜினாமா செய்துள்ளேன். இதற்காக ஓர் அமைப்பை ஏற்படுத்தி செயல்படுகிறேன்.


latest tamil news




'அரசியலில் குதிக்கும் பலரும், மாற்றத்தை தான் விரும்புகின்றனர்; எனினும், அந்த மாற்றம், எந்த கடையில் விற்கப்படுகிறது என்பது தான் அவர்களுக்கு இன்னும் தெரியவில்லை...' என, கிண்டல் செய்யத் தோன்றும் வகையில், ஐ.பி.எஸ்., அதிகாரி பதவியை ராஜினாமா செய்துள்ள அண்ணாமலை பேட்டி.



கொரோனாவால், பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித் துறை மிகவும் பரிதாபமாக உள்ளன. இத்துறைகள் மூலம் ஆண்டுக்கு, 1 லட்சம் கோடி ரூபாய் வருவாய் வந்து கொண்டு இருந்தது; அரசின் திட்டங்களுக்கு, முக்கிய பங்களிப்பாக இருந்தது.


'எல்லா துறைகளும் இப்படித் தானே பாதிக்கப்பட்டுள்ளன...' என, கூறத் தோன்றும் வகையில், தமிழக பத்திரப்பதிவு துறை அமைச்சர் வீரமணி பேட்டி.



தர்மபுரி ரயில்வே ஸ்டேஷன் வளாகத்தில் உள்ள, முருகன், விநாயகர் கோவில் சீரமைப்புக்கு, அதிகாரிகள் தடை விதித்துள்ளனர். பல ஆண்டுகளாக பொதுமக்கள் வழிபட்டு வரும் இந்த கோவில் பணிக்கான தடையை, அதிகாரிகள் திரும்ப பெற வேண்டும்.


'சமீப காலமாக, தி.மு.க., கோவில்கள், ஹிந்துக்கள் மீது அதிக அக்கறை காட்டுகிறது என்பதற்கு, உங்கள் கோரிக்கையும் ஓர் அடையாளம்...' என, சொல்லத் தோன்றும் வகையில், தர்மபுரி, தி.மு.க., - எம்.பி., செந்தில்குமார் பேட்டி.

Advertisement


வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RaajaRaja Cholan - Perungudi,சிங்கப்பூர்
16-ஆக-202011:55:52 IST Report Abuse
RaajaRaja Cholan உலக அயோக்கியன் , இவன், இருபது ஆண்டுகளுக்கு முன்பு இவன் உடை , பேச்சு படிப்பு ஆகியவற்றை வைத்து மிக நல்ல அரசியாயவாதி என்று நினைத்தால் இவன் அமைதிப்படை அமாவாசை விட மோசமானவன்
Rate this:
Cancel
Srinivasan Rangarajan - Tiruchengode,இந்தியா
09-ஆக-202009:09:04 IST Report Abuse
Srinivasan Rangarajan நான் தேவகோட்டை- ஐ சேர்த்தவன். அங்குள்ள நகரத்தார் அனைவருமே சிறந்த சிவ பக்தர்கள். கோயில்களுக்கு தாராளமாக நிதி வழங்குவார்கள். பெரும்பலானவர்கள் கழுத்தில் ருத்திராக்ஷம் இருக்கும், அதே போல் நிறைய பள்ளிக்கூடங்கள் கல்லூரிகள் நிறுவி கல்வி பணியிலும் சிறந்து விளங்குகிறார்கள். ஈட்டிய செல்வத்தை பொது மக்களுக்கு பயன்படுமாறு செய்வதில் அவர்களுக்கு இணை கிடையாது. அந்த வகையில் சிதம்பரம் ஒரு கரும் புள்ளியே. தன மகனையும் அவ்வாறே வளர்த்து வைத்துள்ளார்.
Rate this:
வெற்றிக்கொடிகட்டு - - மதராஸ்:-),இந்தியா
09-ஆக-202011:58:47 IST Report Abuse
வெற்றிக்கொடிகட்டுஇவன்குடும்பத்தோட சேர்ந்து கோல்மால்புர குடும்பம் கெட்டதா, இல்லை அந்த குடும்பத்தோட சேர்ந்து இவன் குடும்பம் கெட்டதா ? கண்டுபுடிக்க முடியாது...
Rate this:
Cancel
Lakshmipathi S - Bangalore,இந்தியா
09-ஆக-202008:43:54 IST Report Abuse
Lakshmipathi S ஆக மொத்தமும் சிதம்பரத்திற்கு எதிரான கருத்துக்களாக உள்ளது கண்டு அவருக்கு மனம் எப்படி இருக்கும். பெரிய நகரத்தார் குடும்பத்தில் பிறந்து இவ்வளவு கேவலமாக பெயர் எடுத்திருப்பது அந்த சமூக மக்களுக்கு ஏற்பட்டுள்ள கரும்புள்ளி. இதை கருதியாவது வாழ்நாளில் எஞ்சியுள்ள காலத்தில் அவரது செயல்பாட்டில் நல்ல மாற்றம் ஏற்பட்டு மக்களிடம் நல்ல பெயர் எடுக்க வேண்டும் .தோன்றின் புகழோடு தோன்றுக ஆகுதிலர் தோன்றலின் தோன்றாமை நன்று. \திருக்குறள் : 236\
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X