பொது செய்தி

இந்தியா

ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசி: ஆக.,12ல் பதிவு செய்ய தீவிரம்

Updated : ஆக 08, 2020 | Added : ஆக 08, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
Russia, Corona Vaccine, coronavirus, russia coronavirus, ரஷ்யா, கொரோனா, வைரஸ், தடுப்பூசி, பதிவு, ஆகஸ்ட்12

மாஸ்கோ: ரஷ்யாவின் கமலேயா நிறுவனம் உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசி ஆக.,12ம் தேதி பதிவு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக நாடுகளை உலுக்கிவரும் கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க, உலக ஆராய்ச்சியாளர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கான தடுப்பூசியை தயாரித்து, சோதனைகளை முடித்து, பொதுமக்கள் உபயோகத்துக்கு கொண்டு வருவதில் இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்கா, ரஷ்யா என பல நாடுகளும் போட்டி போட்டு வருகின்றன. இந்த நாடுகளில் தடுப்பூசிகள், மருத்துவ பரிசோதனையில் உள்ளன. இந்நிலையில், ரஷ்யாவின் கமலேயா நிறுவனம் உருவாக்கியுள்ள தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் பரிசோதனைகள் நிறைவு அடைந்துள்ளது. இந்த தடுப்பூசியை முறைப்படி பதிவு செய்வதற்கான பணிகள் முழுவீச்சில் நடக்கின்றன.


latest tamil news



இதுகுறித்து ரஷ்ய சுகாதாரத் துறை அமைச்சர் முரஸ்கோ கூறியதாவது: உலகின் முதல் கொரோனா தடுப்பு மருந்து ஆகஸ்ட் 12ம் தேதி பதிவு செய்யப்படவுள்ளது. 2020 அக்டோபர் முதல் தடுப்பூசி மருந்துகள் பெருமளவில் உற்பத்தி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தடுப்பூசி தொடர்பான அனைத்துச் செலவுகளும் பட்ஜெட்டில் அடங்கும். இந்தத் தருணத்தில் மூன்றாம் கட்டம் நடந்து கொண்டிருக்கிறது. பரிசோதனை முயற்சிகள் மிக முக்கியம். நாங்கள் தடுப்பு மருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதை நன்கு உணர்ந்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S. Narayanan - Chennai,இந்தியா
08-ஆக-202017:56:56 IST Report Abuse
S. Narayanan நல்ல விஷயம். விரைந்து முடிவெடுங்கள் நன்றி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X