பொது செய்தி

இந்தியா

கோழிக்கோடு விமான விபத்து - கறுப்புப் பெட்டி கண்டுபிடிப்பு; பலி 19 ஆக உயர்வு

Updated : ஆக 08, 2020 | Added : ஆக 08, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
Air India, Plane Crash, Kozhikode Air Crash, Kozhikode news, air india plane crash, ஏர்இந்தியா, விமானம், விபத்து, கறுப்புப்பெட்டி, கண்டுபிடிப்பு, பலி எண்ணிக்கை

கோழிக்கோடு: கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்தில் விபத்துக்குள்ளான விமானத்தின் கறுப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது. மேலும், விபத்தில் உயிரிழந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

வந்தே பாரத் திட்டத்தின் கீழ், துபாயிலிருந்து 191 பேருடன் வந்த 'ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்' விமானம், கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்தில், தரையிறங்கும் போது, விழுந்து விபத்துக்குள்ளானது. நேற்று(ஆக.,7) இரவு 7.40 மணியளவில், நடந்த இந்த விபத்தில், விமானம் இரண்டாக பிளந்து சிதைந்தது. விமானத்தில் பயணித்தவர்களில், விமானி விங் கமாண்டர், தீபக் வசந்த் சாதே, குழந்தை உட்பட 19 பேர் பலியாகி உள்ளனர்.


latest tamil news


இந்நிலையில், விபத்துக்குள்ளான விமானத்தின் கறுப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கறுப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டதன் மூலம் விபத்து ஏற்பட்டதற்கான காரணம் கண்டறிய வாய்ப்புள்ளது. மேலும், விமான விபத்தில் உயிரிழந்த ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் உடன் பயணித்த பலருக்கு தொற்று பரவியிருக்க வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது. விபத்து பகுதியில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டவர்கள் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தியதாகவும், அவர்களை கொரோனா பரிசோதனை மேற்கொள்ள உள்ளதாகவும் கேரள சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S. Narayanan - Chennai,இந்தியா
08-ஆக-202017:47:40 IST Report Abuse
S. Narayanan மிகவும் பரிதாபம்.
Rate this:
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
08-ஆக-202014:31:41 IST Report Abuse
தமிழ்வேல் கறுப்புப் பெட்டி என்று கூறப்படும் பெட்டியின் நிறம் ஆரஞ்சு.
Rate this:
Janarthanan (குடும்ப ஆட்சிக்கு முடிவுரை எழுத வேண்டும்)கருப்பு பெட்டிக்கு காவி நிறம் அடித்து விட்டார்கள என்று கிளம்பி வந்தாலும் வருவார்கள் குடும்ப அடிமை கூட்டம் ????...
Rate this:
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
09-ஆக-202015:52:15 IST Report Abuse
தமிழ்வேல் இது ஒன்னுதான் பாக்கி. இதுக்கும் பூசுனாலும் பூசிடுவானுவோ. எல்லாத்தையும் தன்னுடைமை ஆக்கிக்கிறது ஒரு நல்ல எண்ணம்தான். ஆரஞ்சு என்றால் காவி நிறம் என்று இப்போதுதான் கேள்விப்படுகின்றேன். பேட்டி பிறந்த போதே அது ஆரஞ்சாகத்தான் பிறந்தது. காரணம் சுலபமாகக் கண்ணில் படுவதற்கு....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X