பொது செய்தி

இந்தியா

கோழிக்கோடு விமான விபத்தில் இறந்த பைலட் சாதே யார்?

Added : ஆக 08, 2020 | கருத்துகள் (20)
Share
Advertisement
கோழிக்கோடு: கேரளாவில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில் விமானி சாதே உள்பட 19 பேர் பலியாகினர். இந்நிலையில் சாதே குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.துபாயில் இருந்த வந்த 'ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்' விமானம் கோழிக்கோடு விமான நிலையத்தில், ஓடுதளத்தில் இறங்கிய போது விபத்துக்குள்ளானதில் விமானி டி.எம். சாதே உள்பட 19 பேர் பலியாகினர். இந்நிலையில், உயிரிழந்த விமானி
air india Pilot, Deepak Vasanth Sathe, Sathe, Kerala, Air India, ஏர்இந்தியா, விமானி, சாதே

கோழிக்கோடு: கேரளாவில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில் விமானி சாதே உள்பட 19 பேர் பலியாகினர். இந்நிலையில் சாதே குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

துபாயில் இருந்த வந்த 'ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்' விமானம் கோழிக்கோடு விமான நிலையத்தில், ஓடுதளத்தில் இறங்கிய போது விபத்துக்குள்ளானதில் விமானி டி.எம். சாதே உள்பட 19 பேர் பலியாகினர். இந்நிலையில், உயிரிழந்த விமானி டி.எம்.சாதே குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. மும்பையை சேர்ந்த இவர், 1981ம் ஆண்டு, புனேவில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாடமியில் சேர்ந்து, சிறந்த வீரருக்கான Sword of Honour என்ற தங்கப் பதக்கத்துடன் தேர்ச்சி பெற்றுள்ளார். பின்னர் இந்திய விமானப்படையில், விமானியாக சேர்ந்த சாதே, 22 ஆண்டுகள் போர் விமானங்களை இயக்கி வந்துள்ளார்.


latest tamil news


விமானப்படையில் பல்வேறு பிரிவுகளில், 2003ம் ஆண்டு வரை, 22 ஆண்டுகள் அவர் சிறப்பாக பணியாற்றியுள்ளார். 2003ம் ஆண்டு விமானப்படையில் இருந்து ஓய்வு பெற்ற சாதே, ஏர் இந்தியாவில் சேர்ந்து, பயணிகள் விமான விமானியாக பணியாற்றி வந்தார். முதலில், ஏர் பஸ் 310-ரக பெரிய விமானங்களை இயக்கி வந்த இவர், பின்னர் போயிங் 737 ரக விமானங்களை இயக்கி வந்தார். சாதே, மிகுந்த தொழில் நிபுணத்துவமும், அனுபவமும் வாய்ந்தவர் என்று சக விமானிகளும், அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SENTHIL - tirumalai,இந்தியா
08-ஆக-202019:02:01 IST Report Abuse
SENTHIL வீர வணக்கம். ஆழ்ந்த இரங்கல்.
Rate this:
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
08-ஆக-202018:15:09 IST Report Abuse
மலரின் மகள் உயிர் தியாகம் என்றே தெரிகிறது. நமது விமானப்படையின் வீரர் என்பதால் அவர் மனநிலை நன்கு புரிந்து கொள்ள முடிகிறது. விமானத்தை சிறப்பாக இறக்குவதற்கு விமானி முயன்றிருக்கிறார். என்ன காரணத்தாலோ சக்கரங்கள் தன்னிலை தடுமாறி இருக்கிறது. அதை அறிந்து கொண்ட விமானிகள் தங்கள் உயிர் போனாலும் பரவாயில்லை என்றே கருதி விமானத்தை கடினப்பட்டு நிறுத்த முயரன்றிருக்கிறார்கள். விமானத்தின் அனைத்து முயற்சிகளையும் திறம்பட செய்து அவர்கள் செய்த முழு முயற்சியால் மட்டுமே உயிர் சேதங்கள் பெருமளவில் தவிர்க்க பட்டிருக்கின்றன. விமானம் முன்பகுதியில் உடைந்து விடும் என்பதை அறிந்து முதலாவதாக தங்கள் இன்னுயிரை ஈந்து பெரும்பாலான பயனியர்களை காத்து ரட்சித்திருக்கிறார்கள் என்று தான் தெரியவருகிறது. இவர்களின் தியாகத்திற்கு தலைவணங்கு வதற்கு முன்பு எனக்கு கண்ணீர் துளிகளே பெருக்கெடுக்கின்றன. பச்சிளம் குழந்தைகளை விமானத்தின் முன்பகுதியில் இடமளிப்பது சரிதானா என்றும் அவர்களை பாதுகாப்பு மிகுந்த பகுதி என்று அறியும் பகுதியில் இடம் தரலாம் என்று ஆலோசனை தரவும் விழைகிறோம். இந்த பேரிடர் இயற்கையின் சீற்றத்தில் நடந்த தவறு தான். ஆழ்ந்த வருத்தங்கள் மேலிடுகிறது. மிகவும் கடினமான தருணத்தில் விமானிகள் இருவரும் கஷ்டப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்தோருக்காக விமானத்தை இயக்க விளைந்திருக்கிறார்கள். பயணிகளின் பேட்டி மற்றும் இந்த விமான நிலைய ஓடுபாதை, இப்போதைய நிலையிலான மிகவும் கடினமான கால நிலை அனைத்தையும் அறிந்து தான் ஒட்டி இருக்கிறார்கள். வெளிநாடுகளில் கட்டிட வேலை போன்ற கூலி வேலை செய்து குடும்பத்தை காப்பாற்று தொழிலாளிகள் வேலை இழந்து தவிக்கிறார்கள் அவர்களுக்கு தம்மால் ஆனா சிறு உதவி என்று விமானத்தை திறம்படைத்தான் இயக்கி இருக்கிறார்கள்.
Rate this:
Cancel
Darmavan - Chennai,இந்தியா
08-ஆக-202018:06:37 IST Report Abuse
Darmavan ஏர் இந்தியாவை மூடுவதுதான் ஒரே வழி
Rate this:
Subramaniyam Veeranathan - Bangalore,இந்தியா
08-ஆக-202019:12:12 IST Report Abuse
Subramaniyam Veeranathanஎந்த ஏர்லேன்ஸ் என்றாலும் இதுபோன்ற விபத்துகள் நடக்கத்தான் செய்யும். அப்படிப்பார்த்தால் வீட்டில் இருந்தவர்கள் ஏன் நீலகிரியில் நிலச்சரிவால் உயிர்இழந்தார்கள். தற்போது உலகமே சரியில்லை அதற்காக உலகத்தேயே அழித்துவிடவேண்டும் என்று சொல்லுகிறார் போல. உலகிலேயே அதிக திறமைவாய்ந்த விமானிகள் நம் விமானிகள் மட்டுமே என்பது இந்த உலகத்துக்கே தெரியும்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X