சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மூணாறில் நிலச்சரிவு: கயத்தாறை சேர்ந்த 55 பேரின் கதி என்ன?

Updated : ஆக 08, 2020 | Added : ஆக 08, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
munnar, munnar landslide, rains, kerala news, கயத்தார், கோழிக்கோடு, நிலச்சரிவு, இடுக்கி, மூணாறு

திருநெல்வேலி: கேரளா மாநிலம் மூணாறு அருகே ராஜமலை பெட்டிமுடி பகுதியில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டதில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கயத்தாறு பாரதிநகரைச் சேர்ந்த 55 பேரின் நிலைமை என்னவென்று தெரியவில்லை என்று அவர்களது உறவினர்கள் கூறியுள்ளனர். 55 பேரும் உயிரிழந்து இருக்கலாம் என்ற அச்சத்தில் உறவினர்கள் உள்ளனர்

கேரளாவில் கடந்த சில நாட்களாக மிக பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக இடுக்கி மாவட்டத்தில் இடைவிடாத மழை பெய்து வருகிறது. இம்மாவட்டம் பெரும்பாலும் மலைப்பகுதி என்பதால் நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) 5க்கும் மேற்பட்ட இடங்களில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் மூணாறு அருகே ராஜமலை பெட்டிமுடி பகுதியில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டதில் 40க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் முற்றிலுமாக சேதமடைந்து மண்ணுக்கடியில் புதைந்திருக்கலாம் என்று அச்சப்படுகிறது. அந்த குடியிருப்புகளில் இருந்த 70 பேர் வரை மாயமாகி உள்ளனர். இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது. மற்றவர்களை தேடும் பணியில் போலீசார், தீயணைப்பு வீரர்கள் மற்றும் பேரிடர் மீட்புப்படைவினர் ஈடுபட்டுள்ளனர்.


latest tamil news



இந்நிலையில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கயத்தாறு பாரதி நகரை சேர்ந்த 80க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த 200க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வந்துள்ளது தெரிய வந்துள்ளது. அங்குள்ள தேயிலை தோட்டங்களில் குடும்பத்துடன் தங்கி பணியாற்றி வந்துள்ளனர்.

இதில் 55 பேர் மாயமாகி இருப்பது தெரியவந்துள்ளது. இவர்களின் கதி என்னவென்று தெரியமால், கயத்தாரில் உள்ள அவர்களது உறவினர்கள் பரிதவித்து வருகின்றனர் கடந்த திங்கள் கிழமை வரை தங்களது உறவினர்களிடம் பேசி வந்தாகவும், அதன் பின்னர் தொடர் மழை காரணமாக யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும், நிலச்சரிவு குறித்து தொலைக்காட்சியில் பார்த்து தெரிந்து கொண்டதாகவும், 55 பேரின் நிலைமை என்னவென்று தெரியவில்லை என்றும் அக்கிராம மக்கள் கண்ணீர் கலந்த வேதனையுடன் கூறுகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
08-ஆக-202015:47:31 IST Report Abuse
Bhaskaran தமிழனுக்காக குரல் கொடுப்போம் என்று வீரம் பேசும் காட்சிகள் எங்கே போனார்கள்
Rate this:
Cancel
08-ஆக-202013:38:00 IST Report Abuse
ஆரூர் ரங் கேரள மூணாறு நிலச்சரிவில் இறந்தவர்கள் 400 பேருக்கு மேலிருக்கும்.. அனைவரும் #தமிழர்கள்.. கூலிக்கு வேலை செய்யும் தோட்டத் தொழிலாளர்கள்.. அவர்களுக்கு எந்த #தமிழகத்தின் எந்தவொரு அரசியல் கட்சியும் கவலைப்பட்டாற்போல் தகவலில்லை..தமிழ்நாட்டிலிருந்து பிணங்களை அடையாளம் காட்டச் செல்பவர்களை 14 நாள் #குவாரண்டைனில் வைத்த பின்னரே மூணாறுக்குள் அனுமதிக்க முடியும் என பிணரயி விஜயன் அரசு கெடுபிடி செய்கிறது ஆனால் விமான விபத்தில் இறந்தவர்கள் பச்சைத் #தனியார்கள் என்பதால், பிணரயி அரசு அசுரப் பாய்ச்சலில் வேலை செய்கிறது..#..#தமிலன்_வால்க..!! நோ நோ மூர்க்கம் மட்டுமே வாழ்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X