டிரம்ப் தோல்வியை விரும்பும் ஈரான் , சீனா: அமெரிக்க உளவுத்துறை

Updated : ஆக 08, 2020 | Added : ஆக 08, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement
Donald Trump,Trump,டிரம்ப்,டோனால்ட் டிரம்ப்

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் தோற்க வேண்டும் என சீனா, ஈரானும் விரும்புவதாகவும், அதற்காக மறைமுக பணிகளில் ஈடுபட்டு வருவதாக அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளது. அதேநேரத்தில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடனுக்கு எதிராக ரஷ்யா செயல்பட்டு வருவதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அமெரிக்க அதிகாரிகள் கூறியதாவது: அமெரிக்க தேர்தலில் தாங்கள் விரும்புபவர்கள் வெற்றி பெற வேண்டும் என, விரும்பும் நாடுகள், அது தொடர்பாக மறைமுக பணிகளிலும் ரகசிய அறிக்கையும் வெளியிட்டுள்ளன. மறைமுகமாகவும் தலையிடுகின்றன. தேர்தல் நடக்க இன்னும் 3 மாதங்கள் உள்ள நிலையில், மறைமுகமாக தலையீடுகின்றன.டிரம்ப் தோல்வியடையும் விரும்பும் நாடுகள் பட்டியலில் சீனா முதலிடத்தில் உள்ளது. டிரம்ப்பை கணிக்க முடியாதவராக கருதும் அந்நாடு, டிக்டாக், ஹாங்காங் மற்றும் கொரோனா விவகாரங்களில், அவரை கடுமையாக விமர்சனம் செய்கிறது.


latest tamil news


இதற்கடுத்து, டிரம்ப் மீண்டும் வெற்றி பெற்றால், தங்கள் பிராந்தியத்தில் அச்சுறுத்தல் நீடிக்கும் என்பதால், ஆன்லைனை பயன்படுத்தி, தவறான தகவல்களை பரப்பி வருகிறது.

2016 ல் நடந்த அதிபர் தேர்தலில், ஹிலாரி கிளிண்டனுக்கு எதிராக வேலைபார்த்த ரஷ்யா இந்த முறையும், ஜோ பிடனை, தங்களுக்கு எதிரானவராகவே பார்க்கிறது. இதனால், சமூக வலைதளம் மற்றும் டிவி மூலம் தவறான செய்தியை வெளியிட்டு வருகிறது.உளவுத்துறையின் கணிப்புகள் உண்மை தன்மை வாய்ந்தவை, அரசியல் சாராதவை. இந்த தகவல்கள் குறித்து டிரம்ப் , ஜோபிடன் மற்றும் பார்லிமென்ட் உறுப்பினர்களிடமும் தெரிவித்துவிட்டோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
IYER AMBI - mumbai,இந்தியா
08-ஆக-202018:10:45 IST Report Abuse
IYER AMBI அங்கு டிரம்பும் இங்கு மோடியும் வந்தால் அடுத்த பத்து ஆண்டுகளுக்கு உலகில் அமைதி நிலைநாட்டப்படும். பெரும்பாலான சிறிய நாடுகள் முன்னேற்றம் அடையும்.
Rate this:
Cancel
Balasubramanian Ramanathan - vadakupatti,இந்தியா
08-ஆக-202015:57:11 IST Report Abuse
Balasubramanian Ramanathan இங்கே ஸ்டாலினை முதல்வராக்க ஊடகங்கள் உண்மைகளை திருத்தி பொய் செய்திகளை பரப்பவில்லையா ? அதுபோலத்தான்.
Rate this:
வெற்றிக்கொடிகட்டு. - -மதராஸ்:-),இந்தியா
08-ஆக-202020:12:14 IST Report Abuse
வெற்றிக்கொடிகட்டு. நீ பார்லிமென்ட் தேர்தலில் T ஷர்ட் எல்லாம் போடு என்ன ஆச்சு...
Rate this:
Cancel
Janarthanan (குடும்ப ஆட்சிக்கு முடிவுரை எழுத வேண்டும்) டிரம்ப் தோல்வியை விரும்பும் ஈரான் , சீனா இந்தியாவில் உள்ள சீனா காங்கிரஸும் ,கமிகள் , இம்ரான் ரசிகர் மன்றமும் , சீன கைக்கூலி கூட்டமும் அதை தான் விரும்புகிறார்கள் ?????
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X