கோர்ட் செய்தி

தமிழ்நாடு

ரத்த தாகம் கொண்ட ஓநாய்களா ஊழல் அதிகாரிகள்: ஐகோர்ட் காட்டம்

Updated : ஆக 08, 2020 | Added : ஆக 08, 2020 | கருத்துகள் (66)
Share
Advertisement
ePass, Corruption, Chennai High Court, Textile mills, studies, Madras HC, சென்னை, உயர்நீதிமன்றம், இபாஸ், ஊழல், லஞ்சம், ரத்த தாகம், ஓநாய்கள்

சென்னை: இ-பாஸ் வழங்க லஞ்சம் பெறும் அதிகாரிகள் ரத்த தாகம் கொண்ட ஓநாய்கள் என்றும், அவர்கள் மீது இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தனியார் நூற்பாலையில் சட்டவிரோதமாக பணியமர்த்தப்பட்டுள்ள திருவண்ணாமலையைச் சேர்ந்த 8 முதல் 12-ம் வகுப்பு மாணவிகளை மீட்க கோரி, திருவண்ணாமலையைச் சேர்ந்த தமிழ் தேசிய மக்கள் கட்சி தலைவர் சி.எம்.சிவபாபு தொடர்ந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேலுமணி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து இ-பாஸ் இல்லாமல் மாணவிகள் அழைத்துச் செல்லப்பட்டதாக நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது.


latest tamil news


இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், முறையாக விண்ணப்பித்தவர்களால் இ பாஸ் பெற இயலாத நிலையில், புரோக்கர்கள் மூலம் 500 ரூபாய் முதல் 2 ஆயிரம் ரூபாய் வரை லஞ்சம் பெற்று அதிகாரிகள், இ பாஸ்கள் வழங்குவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதாக குறிப்பிட்டனர். மேலும், கொரோனா காலத்திலும், ரத்த தாகம் கொண்ட ஓநாய்கள் போல செயல்படும் ஊழல் அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுப்பது அவசியம் என தெரிவித்த நீதிபதிகள், இபாஸ் வழங்க லஞ்சம் பெரும் அதிகாரிகள் மீது இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு அறிவுறுத்தினர்.

Advertisement
வாசகர் கருத்து (66)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
09-ஆக-202005:36:05 IST Report Abuse
meenakshisundaram உண்மைதான் ,ஒதுக்கீடு பிரச்சினையும் நீதிமன்றம் (69% தமிழக்தத்தில் மட்டுமே) கவனத்தில் தானாகவே எடுத்துக்கொள்ளலாம் ஈ பாஸ் சிஸ்டம் போல ,
Rate this:
Cancel
SaiBaba - Chennai,இந்தியா
08-ஆக-202022:31:56 IST Report Abuse
SaiBaba எவனாச்சும் பர்ஸை திறக்க மாட்டானா நமக்கு பணம் தாரா மாட்டானா என்று மொத்த இந்தியத்திருநாட்டின் மக்களும் அலைகின்றார்கள். டாக்டர், வக்கீல், போலீஸ், அபார்ட்மெண்ட் அசோசியேஷன், ஆட்டொக்காரர், தோட்டக்காரர், டாக்சி ஓட்டுநர், சொந்தக்காறாய்ங்க, பொண்ணு கட்டிட வரவய்ங்க என்று யாரும் இதற்கு விதி விலக்கல்ல. அதற்கு காரணம் நம் அரசியல்வாதிகளா அல்லது மக்களின் பேராசையா என்று தெரியவில்லை. கீழே ஒரு டாலரோ பவுண்டோ விழுந்து கிடந்தால் கூட எடுத்துக்கொடுத்து விடுவார்கள். அந்த நாள் என்று இந்தியாவில் வருமோ அன்று தான் நமக்கு உண்மையிலேயே சுதந்திரம் கிடைத்ததாக பொருள்.
Rate this:
Cancel
tamilvanan - chicago,யூ.எஸ்.ஏ
08-ஆக-202021:23:41 IST Report Abuse
tamilvanan ஓநாய்களை பற்றி தவறான பதிவு. அவை ரத்த வெறி கொண்டு அலைபவை அல்ல. இவ்வாறு ஓநாய்களை பற்றி தவறான கருத்துக்களை பரப்பி, ஓநாய்கள் வேட்டை ஆடப்படுகின்றன. இப்போது ஓநாய்கள் மிகவும் குறைந்து விட்டன. உண்மையில் மனிதனை தவிர எந்த உயிரினமும் விளையாட்டாக உயிர்பலி வாங்குவதில்லை. உணவுக்காகவே வேட்டை ஆடுகின்றன. உணவு கிடைத்து விட்டால் அவ்வளவே. பிறகு ஓய்வுதான், அடுத்த முறை உணவு தேவைப்படும் வரை. மாண்புமிகு நீதிபதிக்கு ஓநாய் தவிர வேறு உவமைகள் கிடைக்கவில்லையா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X