ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் பா.ஜ.,வின் ஆறு எம்.எல்.ஏக்கள் குஜராத் மாநிலத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியில் முதல்வர் அசோக்கெலாட் மற்றும் துணை முதல்வர் சச்சின் பைலட் ஆகியோரிடையேயான அதிகாரப்போட்டி உருவெடுத்துள்ளது. இதனால் மாநில அரசியலில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. இருதரப்பினரும் தங்களது ஆதரவாளர்களை ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே பா.ஜ.,வை சேர்ந்த ஆறு எம்.எல்.ஏக்கள் குஜராத் மாநிலத்திற்கு சென்றுள்ளனர். இது குறித்து மாநில பா.ஜ., தலைவர் சதீஷ் பூர்னியா கூறுகையில் பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் குறித்து காங்., உள்ளிட்ட கட்சிகள் வதந்திகளை பரப்பி வருகின்றன. விரைவில் பா.ஜ., எம்.எல்,ஏக்களின் கூட்டம் நடைபெறும் அதில் அனைவரும் கலந்து கொள்வர் என கூறினார்.

பா.ஜ.,எம்.எல்.ஏ.க்கள் குஜராத் மாநிலம் சென்றுள்ளது குறித்து பா.ஜ., தலைவர்களில் ஒருவரான அசோக்லஹெட்டி கூறுகையில் சில பா.ஜ., எம்.எல்.ஏக்கள் போலீஸ் மற்றும் நிர்வாகத்தால் துன்புறுத்தப்படுகின்றனர் என்றார்.
குஜராத் மாநிலம் போர்பந்தருக்கு வந்த பா.ஜ.,எம்.எல்.ஏக்கள் சோம்நாத் கோவிலுக்கு வருகை தந்துள்ளனர். எம்.எல்.ஏக்கள் குஜராத் சென்றுள்ளதை ஜெய்ப்பூர் விமான நிலைய அதிகாரிகளும் உறுதிப்படுத்தினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE